சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உதயநிதிக்கு என்னாச்சு.. அண்ணா பல்கலையின் முதல் கூட்டத்திலேயே ஆப்சென்ட்.. வெளியான காரணம்

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு கூட்டத்தில் உதயநிதி பங்கேற்கவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு கூட்டத்தின் உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் இன்று நடைபெற்ற முதல் கூட்டத்திலேயே பங்கேற்கவில்லை.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதந்தோறும் சிண்டிகேட் குழு கூட்டம் நடைபெறுவது வழக்கம்.. இந்த பல்கலை கழகத்தின் முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்தும் அந்த கூட்டத்தில் ஆலோசனையும் நடத்தப்படும்.

அந்த வகையில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாளில் சபாநாயகர் அப்பாவு, பல்கலைக்கழகங்களின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் தேர்வு தொடர்பான அறிவிப்புகளை புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்திருந்தார்..

தாயுள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.. நெகிழும் தயாரிப்பாளர் கூட்டுக்குழு தாயுள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.. நெகிழும் தயாரிப்பாளர் கூட்டுக்குழு

 ஆட்சி மன்ற குழு

ஆட்சி மன்ற குழு

அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக அறிவித்தார்... பொதுவாக, பல்கலைக்கழகங்களில் ஆட்சிமன்ற குழு என்று தனியாக இருக்கும்... அதன் உறுப்பினராக அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுவதும் வழக்கம்.

உதயநிதி

உதயநிதி

அப்படித்தான், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உதயநிதி நியமிக்கப்பட்டிருந்தார். அதேபோல, சிந்தனைச் செல்வன் ஆகியோரும் கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக ஈஸ்வரன், கணேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டிருப்பதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்திருந்தார்.

பொறுப்பு

பொறுப்பு

அதன் முதல் கூட்டமும் இன்று நடைபெற்றது.. முதல் கூட்டம் என்பதால், அதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அவர் பங்கேற்கவில்லை... மிகப்பெரிய பொறுப்பை உதயநிதிக்கு தந்த நிலையில், முதல் கூட்டத்திலேயே அவர் பங்கேற்காதது அரசியல் ரீதியாக பரபரப்பாக பேசப்பட்டது.

 ஆலோசனை

ஆலோசனை

இதனிடையே, உள்ளாட்சி தேர்தல் பணிகள் காரணமாக உதயநிதி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.. மேலும், இன்றைய சிண்டிகேட் குழுக் கூட்டத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் விரிவுரையாளர்களை நிரந்தரம் செய்வது குறித்தும், தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Why Udhayanidhi Stalin absent in Anna university governing bodymeet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X