சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓஹோ.. குஷ்புக்கு ரூட் கிளியர்.. இதுக்குதான் வானதிக்கு புதிய போஸ்டிங் தரப்பட்டதா.. செம!

வானதி சீனிவாசனுக்கு புதிய பதவி தரப்பட்டுள்ளது எதற்காக?

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக மகளிரணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்... இது பாஜக தரப்பினருக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துவந்தாலும், குஷ்பு பாஜகவில் ஐக்கியமானதற்கு பிறகு வந்த அறிவிப்பு என்பதால் பல தரப்பட்ட யூகங்கள் அந்த கட்சியில் எழுந்து வருகின்றன.

தமிழக பாஜகவில் மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன்.. தமிழிசையை போலவே மிக தீவிரமான கட்சிப் பணியை ஆற்றி வருபவர்.. சிறந்த அறிவாளி.. எதையும் நாசூக்காகவும், அதேசமயம் புள்ளி விவர தரவுகளுடனும் மிக பொறுமையாக பேசுவது இவரது சுபாவம்.

தமிழிசை சவுந்தராஜன் இருக்கும்போதும் சரி, இல்லாதபோதும் சரி, பாஜகவின் கொள்கைகளை எல்லா இடங்களிலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் பரவ செய்தவர்.. தமிழிசையை போலவே எதிர்க்கட்சிகளின் மீது நாகரீகமான வார்த்தைகளையும், கண்ணியம் மிகுந்த விமர்சனத்தையும் எடுத்துரைப்பவர்.

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

சில தினங்களுக்கு முன்பு. பாஜக மேலிடம் தேசிய நிர்வாகிகளை நியமித்து ஒரு லிஸ்ட் வெளியிட்டிருந்தது.. அதில், தமிழகத்தை சேர்ந்த யார் பெயரும் இடம் பெறவில்லை.. குறிப்பாக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதா வரை யார் பெயருமே அதில் இடம்பெறவில்லை.. ஆனால் எப்படியாவது தங்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களில் வானதியும் ஒருவர். இப்போது தேசிய பொறுப்பு தரப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன, காரணம் என்ன என்பது குறித்து ஒருசில நிர்வாகிகளிடம் பேசினோம்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

அவர்கள் சொன்னதாவது: "வானதி எதிர்பார்த்த பதவியே வேற.. தமிழிசை ஆளுநராக சென்றபோதே, இவர்தான் அடுத்த மாநில தலைவர் என்று சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களை சொல்ல ஆரம்பித்துவிட்டனர் பாஜகவினர்.. இது தெரிந்து நடந்ததா? அல்லது அறியாமல் நடந்ததா என்று தெரியவில்லை.. ஆனால், அளவுக்கு அதிகமாக அந்த பதவியை எதிர்பார்த்து காத்திருந்தது வானதி.

குஷ்பு

குஷ்பு

ஆனால் தேர்தல் நெருங்கும் சமயத்தில், திமுகவை சமாளிக்கவும், குறிப்பிட்ட சமுதாயத்தினர் ஓட்டுக்களை அள்ளவும் முருகனை தலைவராக நியமித்துவிட்டனர்.. இதனால் மேலும் அப்செட் ஆனார் வானதி.. இப்போதுகூட அவரை தேசிய அளவுக்கு மாற்றியிருக்க காரணம் இருக்கலாம்.. குஷ்புவை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள்.. இவ்வளவு நாள் தலித் பிரமுகரை தலைவராக நியமித்து பாஜக மதச்சார்பற்ற கட்சியாக காட்டி கொண்டது, அதுபோலவே சிறுபான்மையினரான குஷ்புவையும் முருகன் இடத்துக்கு மாற்றம் செய்யலாம்.

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழகத்திலேயே வானதிக்கு பொறுப்பு தந்தால், அது நேற்று கட்சியில் சேர்ந்த குஷ்புவுக்கு இடைஞ்சல் ஆகிவிடும் என்பதால்கூட, தேசிய அளவுக்கு அவரை உயர்த்தி போஸ்ட்டிங் தந்திருக்கலாம்... அண்ணாமலைக்கு சீட் தரும்போது, குஷ்புவை நிச்சயம் பாஜக அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிடாது. இப்போதைக்கு தமிழகம் அறிந்த மிகப் பிரபலமாக இருக்கும் பெண் அரசியல்வாதி குஷ்புதான்.. அதனால் குஷ்புவுக்கு மாநில அளவிலான முக்கிய பதவி ஒன்று கிடைக்கத்தான் வானதிக்கு இந்த பதவி தந்திருக்கலாம்.. இப்போதெல்லாம் பாஜக எதை செய்தாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது" என்றனர்.

English summary
Why Vanathi Srinivasan got the big post ?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X