சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜய் வெளியிட்ட அறிக்கையின் பரபர பின்னணி! இந்த ட்விஸ்டை கவனித்தீர்களா?

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதாக ஊடகங்களில் பரவிய தகவல் அப்படியே கொஞ்ச நேரத்தில் அவரது தந்தை ஆரம்பித்திருப்பதாக மாறி பரவ தொடங்கியது. எனினும் தனது தந்தையின் கட்சியின் அறிவிப்பை முன்கூட்டிய விஜய் அறியவில்லை என்பது அவரது அறிக்கையின் மூலம் தெரிகிறது. அதனாலேயே அவர் உடனடியாக மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட இந்த நேரத்தில், நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி உள்ளதாகவும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஆரம்பக்க உள்ளதாகவும் செய்தி ஊடகங்களின் சமூக வலைதளங்களில் தகவல்கள் காட்டுத் தீயாக பரவின.

அத்துடன் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியின் பெயரை, அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவின. இதை விஜய்யின் பிஆர்ஓ ரியாஸ் அகமது இந்த செய்தி பொய் என்று திட்டவட்டமாக மறுத்தார். நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றார்.

எனினும் விஜய் இயக்கத்தின் பெயரில் அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டிருப்பது உண்மை என்பது உறுதியானது. இதை செய்தது விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் என்பதும் தெரியவந்தது.

அப்பா ஆரம்பித்த கட்சிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.. யாரும் சேராதீங்க.. விஜய் அதிரடி அறிக்கை!அப்பா ஆரம்பித்த கட்சிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.. யாரும் சேராதீங்க.. விஜய் அதிரடி அறிக்கை!

என்னுடைய முயற்சி

என்னுடைய முயற்சி

இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கு நான் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய முயற்சி. இது விஜயின் அரசியல் கட்சி அல்ல" என்று கூறினார்.

விஜய்க்கு தெரியாமல் கட்சி

விஜய்க்கு தெரியாமல் கட்சி

அதன் பின்னர் தான் நடிகர் விஜய் மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்ட முக்கியமான விஷயம் , தனது தந்தை அரசியல் கட்சி ஆரம்பித்த விஷயத்தை ஊடகங்கள் மூலமே அறிந்து கொண்டதாக கூறியிருக்கிறார். இதை பற்றி விஜய்யுடன் விவாதிக்காமலேயே எஸ்ஏ சந்திரசேகர் கட்சி ஆரம்பித்தாரா? என்ற கேள்வி எழுகிறது.

பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த

பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த

இதேபோல் தனது தந்தையின் அரசியல் கட்சி என்பதற்காக தனது இயக்கத்தினர் சேர வேண்டாம் என்பதையும் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன் எஸ்ஏசி தொடங்கியுள்ள கட்சிக்கும் தனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என்பதை திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தெளிவுப்படுத்தி உள்ளார்.

நடவடிக்கை எடுப்பேன்

நடவடிக்கை எடுப்பேன்

அத்துடன் அரசியல் கட்சியை ஒருவேளை எஸ்ஏ சந்திரசேகர் விரிவுப்படுத்தி, கூட்டணி, உள்ளிட்ட பிற அரசியல் நடவடிக்கைகளை சட்டசபை தேர்தலின் போது செய்தால், அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பதையும் அறிக்கையில் மறைமுகமாக விளக்கி உள்ளார் விஜய். ஏனெனில் பிற்காலத்தில் தன் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் கூறியுள்ளார்

ரசிகர்களுக்காக விட்டது

ரசிகர்களுக்காக விட்டது

விஜய்யின் அறிக்கையில் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், பின்னாளில் அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா இல்லை என்பதை தெளிவுப்படுத்தவில்லை. இப்போதைக்கு தன் தந்தையின் கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மட்டும் முடித்துக்கொண்டுள்ளார். தனது ரசிகர்கள் குழம்பிடவிடக்கூடாது என்பதற்காக இந்த அறிக்கையை விஜய் விட்டிருப்பது தெரிகிறது.

English summary
The media reports that actor Vijay has started a political party but soon began to spread that his father had started it. However it is clear from his statement that Vijay was unaware of his father’s party announcement in advance. That is why he immediately issued a denial statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X