• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"பூனைக்குட்டி" வெளியே வந்தது.. சசிகலா வெளியேற.. இதுதான் காரணமா.. பரபரக்கும் புதுத் தகவல்!

|

சென்னை: எதற்காக சசிகலா அரசியலில் இருந்து விலகினார் என்ற தகவல் கசிந்துள்ளது.. இது உறுதிப்படுத்தப்படாத தகவலாக இருப்பினும் சோஷியல் மீடியாவில் இந்த செய்திதான் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

ரிலீசுக்கு கொஞ்ச நாள் முன்பு தீவிர அரசியலில் இறங்க போகிறேன் என்று சொன்ன சசிகலா, அன்னைக்கு ஜோலார்பேட்டையில் "பொறுத்திருந்து பாருங்கள், என்ன நடக்கப்போகிறது" என்று சொன்ன சசிகலா, அடுத்த சில தினங்களில் அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்தார். சசிகலாவின் இந்த முடிவால் தொண்டர்களை விட, அதிக அளவு ஷாக் ஆனது டிடிவி தினகரன்தான்.

எதற்காக இந்த அறிக்கை? என்ன காரணம்? யாராவது சசிகலாவுக்கு அழுத்தம் தந்தாங்களா? என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது.. இந்த அறிக்கையை தொடர்ந்து எப்படியும் இன்னொரு அறிக்கை வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது... ஆனால், இப்போதுதான் விஷயம் மெல்ல கசிய ஆரம்பித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லாது என சசிகலா தொடர்ந்த வழக்கு - ஜூன் 18க்கு ஒத்திவைப்பு அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லாது என சசிகலா தொடர்ந்த வழக்கு - ஜூன் 18க்கு ஒத்திவைப்பு

பாஜக

பாஜக

ஆரம்பத்தில் அதிமுக - அமமுக இணைப்புக்கு பாஜக ஆர்வம் காட்டியது. ஆனால் அதிமுக தரப்பு இதற்கு ஒப்புக் கொள்ளவே இல்லை. கடைசி வரை இறங்கி வரவே இல்லை. அதேசமயம், தென்மண்டலங்களில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லாவிட்டாலும், அந்த அபரிமிதமான ஆதரவு தினகரனுக்கு போககூடாது என்பதில் டெல்லி தரப்பும் உறுதியாக இருந்துள்ளது. அப்போதுதான், அமலாக்கத்துறை மூலம் பினாமி தடுப்பு சட்ட வழக்கு கையில் எடுக்கப்பட்டுள்ளது.. இதை வைத்துதான் சசிகலாவிடமும் டீல் நடந்ததாம்,. இந்த தகவல்தான் இப்போது வெளியாகி உள்ளன.

சசிகலா

சசிகலா

சசிகலா ஜெயிலில் இருந்தபோது, அவருக்கு நெருக்கமானவர்கள் பலரது இடங்களில் சோதனை நடத்தி, அந்த சோதனையில் கிடைத்த முக்கிய ஆவணங்களை கொண்டு, இந்த பேரம் சசிகலாவிடம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 58,000 கோடி அளவில் உங்கள் சொத்துகள் பினாமி மூலம் ஆதாரமாக கிடைத்துள்ளது.. நீங்க அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை என்றால் இதுபற்றி இப்போதே நடவடிக்கை எடுக்கப்படும் என்று சசிகலாவுவுக்கு தெரிவிக்கப்பட்டதாம்.

 சசிகலா

சசிகலா

ஆரம்பத்தில் இது குறித்து சசிகலா பயப்படவில்லை. மாறாக ஆவேசம் காட்டியதாக சொல்கிறார்கள். ஆனால் இப்போதைக்கு யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து கோபம் தணிந்து அமைதியாகி விட்டாராம் சசிகலா. தேவையில்லாமல் மீண்டும் வழக்குகளில் சிக்கி துயரப்பட வேண்டாம் என்று எடுத்துச் சொல்லப்பட்டதால் அதை சசிகலா ஏற்றுக் கொண்டாராம்.

அரசியல்

அரசியல்

அதற்கு பிறகுதான், சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அன்றைய தினம் இரவே சசிகலா அறிவித்தாராம். இதுதான் சசிகலா அமைதியாக அரசியலை விட்டு ஒதுங்கிப் போக காரணம் என்று இப்போது ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. எது உண்மை என்றே தெரியவில்லை.. சசிகலாவே வாயை திறந்து இதை பற்றி சொன்னால்தான் அது தெளிவாகும்...!

English summary
Why VK Sasikala declared withdrawal from politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X