கரெக்ட்டா தாலி கட்டும்போது மணப்பெண்ணுக்கு"மயக்கம்".. மாப்பிள்ளைக்கு செம டென்ஷன்.. கடைசியில் ட்விஸ்ட்
சென்னை: தாலி கட்ட ரெடியாக மணமேடையில் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளைக்கு, வினோதமான ஷாக்கை தந்தார் மணமகள்..!
எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு முன்பு நின்றுள்ளன.. அதில் ஆணோ, பெண்ணோ, இருவரில் யாராவது ஒருவர் காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.. அல்லது வரதட்சணை பிரச்சனைகள் ஏதாவது வெடித்துவிடும்.
இதனால் மணமேடை வரை வந்து நின்று திருமணங்கள் நின்றிருக்கின்றன.. அல்லது அதே கல்யாண மண்டபத்தில் யாரையாவது மாப்பிள்ளை, பெண்ணை பார்த்து திடீர் திருமணங்களும் நடந்துவிடும் நிகழ்வுகளும் உண்டு.
அப்பார்ட்மென்ட்டில் இந்த பெண் செய்த காரியத்தை பார்த்தீங்களா..பாத்ரூமில்

மணப்பெண்
மாப்பிள்ளை 2-ம் வாய்ப்பாட்டை சொல்லாதது , உருது வார்த்தைகளை சொல்லாதது, உள்ளிட்ட வினோத காரணங்களுக்காகவும் மணப்பெண்கள் தங்கள் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவங்களும் நம் நாட்டில் சமீப காலமாக அரங்கேறி வருகின்றன.. ஆனால், சென்னையில் ஒரு மணப்பெண் இப்படி எந்த ரிஸ்க்கையும் எடுக்கவில்லை.. திடீரென மயங்கிவிழுந்துவிட்டார்.. சென்னை பாடி பகுதியில் உள்ள அவ்வைநகரை சேர்ந்தவர் தினகரன்.. 35 வயதாகிறது..

நிச்சயம்
இவருக்கும் கிழக்கு தாம்பரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த 31 வயதான பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயமானது. இருவீட்டார் சம்மதத்துடன், இந்த திருமணம் நிச்சயமானது.. கடந்த வெள்ளிக்கிழமைதான் முகூர்த்த நாள்.. பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கல்யாணம் நடந்துக்கொண்டிருந்தது... ஊர், உறவினர்கள், நண்பர்கள் திரண்டு மண்டபம் முழுவதும் நிரம்பி வழிந்தனர்.. அலங்கரிப்பட்டு மணமக்கள் இருவரும் மேடையில் உட்கார வைக்கப்பட்டனர்..

மந்திரம்
புரோகிதர் மந்திரம் சொல்லி கொண்டிருந்தார்.. தாலி உறவினர்களின் ஆசிர்வாதத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.. ஒவ்வொரு உறவினர்களும் தாலியை தொட்டு ஆசீர்வாதம் செய்து முடித்தபிறகு, மணமேடைக்கு தாலியை எடுத்து வந்தனர். மணமகன் தாலி கட்ட தயாரானார்.. அப்போதுதான் மணப்பெண் திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.. இதை பார்த்து மாப்பிள்ளை உட்பட அனைவருமே அதிர்ச்சியாயினர்..

உடல்நலம்
பதறிப்போய் அந்த பெண்ணை தூக்கி உடனடியாக அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்... ஆனால் டாக்டர் அவரை செக் செய்துவிட்டு, உடம்புக்கு ஒன்றுமில்லை, மணப்பெண் நன்றாக இருக்கிறார் என்று சொன்னார்.. அதைக் கேட்டு இரு தரப்பின் மொத்த பேரும் ஷாக் ஆனார்கள். இதையடுத்து, அந்த மணப்பெண் அனைவரிடமும் பேசினார்.. தான் ஏற்கனவே ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை, வேறு வழி தெரியாமல் இப்படி இப்படி மயங்கி விழுந்துவிட்டதாக கூறினார்..

பேச்சுவார்த்தை
இதை கேட்டு, மறுபடியும் அனைவரும் ஷாக் ஆனார்கள்.. மாப்பிள்ளையோ டென்ஷனின் உச்சத்துக்கே போய்விட்டார்.. கோபமடைந்த மாப்பிள்ளை தினகரன், தண்டையார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் தந்தார்.. அதில், இந்த கல்யாணத்துக்காக செலவு, மணப்பெண்ணுக்கு கொடுத்த நகை, புடவை ஆகியவற்றை பெண் வீட்டார் திருப்பி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. இந்த புகாரின் அடிப்படையில், போலீசாரும் மணமகள் வீட்டாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்... மணப்பெண் வீட்டாரும் திருமணத்துக்கான செலவு, நகைகளை திரும்ப தருவதாக ஒப்புக் கொண்டதால், இந்த விவகாரம் சுமூகமாக முடிந்தது..!