சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பரவலாக பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் தென் மேற்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வடகடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

Widespread rainfalls in Chennai, peoples were happy

அதன்படி, சென்னையின் நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திடீரென்று மழை கொட்டியதால், பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர். சில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. சாலை ஓரங்களில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர், நன்னை, ஓலைப்பாடி, மங்கலமேடு, திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வறட்சியினால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்த சூழலில், கனமழை பெய்துள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா? கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன? கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா? கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்ததால், பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் மேலும் வடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோவையில் காந்திபுரம், சிவானந்தா காலனி, சாய்பாபா காலனி, உக்கடம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

English summary
Widespread rainfalls Across Tamil nadu, Farmers were happy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X