• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இந்த ஏரியா.. அந்த ஏரியா.. 2026ல்... பிரித்து மேயத் தயாராகும் விஜய்...வார்டு வாரியாக பக்கா பிளான்!

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் கை அசைத்தால் 2026 தேர்தலில் களம் காண ஒரு படையே தயாராக இருப்பதாக விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

2021 தேர்தலே இன்னும் நடக்கல.. அதுக்குள்ள 2026 தேர்தலுக்கே போயிட்டீங்களா-னு நினைக்குற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது. இருந்தாலும், கிடைத்த தகவலை உங்களிடம் பகிராமல் இருக்க முடியுமா என்ன?

சரி விஷயத்துக்கு வருவோம்... தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில், தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு என்பது குறித்தும், அவரது அரசியல் ஆர்வம் குறித்தும் விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளிடம் பேசினோம்.

 எங்கள் விருப்பத்துக்கு

எங்கள் விருப்பத்துக்கு

இந்த 2021 தேர்தலை விஜய் உன்னிப்பாக கவனித்து வருகிறார். ஆனால், இப்போதும் சரி, எப்போதுமே இந்த கட்சி ஓட்டுப் போடுங்க, ஆதரவு கொடுங்க, வேலை பாருங்க-னு அவர் சொன்னதில்லை. நாங்க எங்களுக்கு பிடிச்ச வேட்பாளர்களுக்கு தான் வாக்களித்து வந்திருக்கிறோம். இப்போதும் அதன் பாணி தான். அவர் எதுவும் சொல்லவில்லை. எங்க விருப்பத்துக்கு நாங்க வாக்களிக்க இருக்கிறோம்.

 மக்கள் சேவை

மக்கள் சேவை

ரெண்டாவது விஷயம், இந்த நிமிடம் வரை சினிமாவில் மட்டும் தான் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். வேறெதிலும் அவரது சிந்தனை அல்லது. சமீபத்தில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கூட, ஜாலியாக பேசினாரே தவிர, அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. 'மக்களுக்கு சேவை பண்ணுங்க'-னு மட்டும் சொன்னார். அதை நாங்க தவறாம பண்ணிக்கிட்டு இருக்கோம்.

 வார்டு வாரியாக

வார்டு வாரியாக

என்ன இருந்தாலும், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் ஒவ்வொரு ரசிகர்களின் விருப்பமாகும். அவர் அரசியல் களம் காண வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காகவே, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் எங்கள் கட்டமைப்பை பலப்படுத்தி வைத்திருக்கிறோம். ஒவ்வொரு வார்டு வாரியாக எங்களிடம் உறுப்பினர்கள் உள்ளனர். இன்றைய சூழலில் ஒவ்வொரு வார்டிலும், குறைந்தது 60 சதவிகித விஜய் ரசிகர்கள் உள்ளனர்.

 இது வெறும் சாம்பிள்

இது வெறும் சாம்பிள்

கடந்த 2020ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவங்க கிட்டத்தட்ட 150 பேர் வெற்றிப் பெற்றுள்ளனர். இது யாருக்கும் தெரியாத ஒரு தகவல். சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில், விஜய் பெயர், படத்தை பயன்படுத்தாமலேயே அவர்கள் ஜெயித்துள்ளனர். இது எங்களோட அரசியல் என்ட்ரிக்கு ஒரு சாம்பிள் தான்

 புது இரத்தம்

புது இரத்தம்

விஜய்யின் கண் அசைவுக்காக காத்திருக்கிறோம். அவர் எப்போது அறிவித்தாலும், அடுத்த நொடி எங்கள் ரசிகர் மன்றங்களை அரசியல் களமாக மாற்றிவிடுவோம். உள்ளாட்சி தேர்தலில் இப்போது உள்ள அரசியல் தலைவர்கள் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி, கமல், ராமதாஸ் என பெரும்பாலானோர் அடுத்த தேர்தலில் இன்னும் வயதானவர்களாக இருப்பார்கள். அப்போது எங்கள் தளபதி இறங்கும்பட்சத்தில் தமிழக அரசியலில் புது இரத்தம் பாய்ச்சியது போன்று இருக்கும்.

 சவால் தரும் போட்டியாளர்

சவால் தரும் போட்டியாளர்

ஒருவேளை திமுகவில் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், அடுத்த தேர்தலில் அவர் சவால் தரும் போட்டியாளராக இருக்கலாம். அப்படி பார்க்கும் போது, 2026 தேர்தலில் அரசியல் போட்டி என்பது விஜய் vs உதயநிதி என்பதாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது" என்றனர்.

English summary
Will actor vijay make his political entry in 2026 tn assembly election?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X