சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுகவுக்கு செம சான்ஸ்?.. இடியாப்ப சிக்கலில் அதிமுக?.. என்ன நடக்கிறது கூட்டணியில்.. தேர்தல் பரபரப்பு

அதிமுக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: நடக்க போகும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக முழு மனசுடன் போட்டியிடுமா? அல்லது நடைமுறை சிக்கல்களை கண்டு பின்வாங்குமா? என்ற புது குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதற்காக தமிழக கட்சிகள் தயாராகி கொண்டிருக்கின்றன.. விருப்ப மனு தாக்கலும் முடிந்துள்ள நிலையில், பாமக, திமுக கட்சிகள் ஜரூர் வேகத்தில் மும்முரமாகி உள்ளன.

கர்நாடகாவில் திடீரென கோயிலுக்குள் ஓடிய 2வயது தலித் குழந்தை .. ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கொடுமை கர்நாடகாவில் திடீரென கோயிலுக்குள் ஓடிய 2வயது தலித் குழந்தை .. ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கொடுமை

 கூட்டணி

கூட்டணி

இதில், திமுகவில் மாவட்ட அளவிலேயே பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டதால், மாவட்ட செயலாளர்களுடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கூட்டணிக் கட்சி தலைவர்கள், தங்களுக்கு செல்வாக்கான இடங்களை கேட்டு பெற்றுள்ளனர்.. அதிமுக தரப்பில் இடப்பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக மாஜி அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, செங்கோட்டையன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்..

 லிஸ்ட்

லிஸ்ட்

மற்றொரு பக்கம் பாஜக சார்பில் பேச்சுவார்த்தை குழுவில் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், ஜி.கே.எஸ்.செல்வகுமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆனாலும் கேட்ட இடங்களை பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக தயங்குவதாக கூறப்படுகிறது. இதனிடையே, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் லிஸ்ட்டையும் அதிமுக வெளியிட்டுவிட்டது.. இருந்தபோதிலும் அதிமுக இந்த தேர்தலை முழு வீச்சில் சந்திக்குமா என்பதுதான் பெரும் சந்தேகத்தை கிளப்பி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன..

 தாக்கல்

தாக்கல்

இதற்கு சில காரணங்களும் கூறப்படுகின்றன.. கடந்த கால அதிமுக ஆட்சியின்போது, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரமுகர்கள் இந்த முறை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லையாம்.. அதற்கு பதிலாக புதுமுகங்கள்தான் வேட்பு மனு தாக்கலை செய்து வருவதாக தெரிகிறது. வழக்கமாக உள்ளாட்சி தேர்தல் என்றாலும் சரி, இடைத்தேர்தல் என்றாலும் சரி, ஆளும் கட்சி வெற்றி பெறுவதுதான் வழக்கம்.. அந்த வகையில் திமுக இந்த முறை அசுர பலத்துடன் இருந்து வருகிறது.. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக ஆர்வம் செலுத்தாமல் உள்ளதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.

 அதிமுக புள்ளி

அதிமுக புள்ளி

தேர்தல் என்றாலே செலவுகளை தாராளமாக செய்வது என்பது நடைமுறையில் உள்ள நிலையில், திமுகவுக்கு சாதகமான முடிவே ஏற்படுமாயின், பல லட்சம் செலவு செய்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற தயக்கமும் அதிமுக புள்ளிகளிடம் காணப்படுகிறதாம்... விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி என அதிமுகவின் வெற்றி வாய்ப்புள்ள பல இடங்களில் போட்டியிட்டும், 2 இடங்களைதான் கடந்த ஆளும் அதிமுகவால் பெற முடிந்தது.

அதிமுக

அதிமுக

இப்போது இந்த நிலை நிச்சயம் பாதகமாக மாறக்கூடும்.. எப்படி பார்த்தாலும் பாஜக கேட்டிருந்த இடங்களை தர மறுத்துவிட்டு, தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களையே அதிமுக தன்வசப்படுத்தியிருந்தாலும்கூட, வெற்றி வாய்ப்பு சந்தேகம்தான் என்ற கலக்கமும் போட்டியாளர்களிடம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்..

 மாவட்டங்கள்

மாவட்டங்கள்

அப்படியே வெற்றி பெற்றாலும், ஒன்றிய, மாவட்ட அளவிலான பதவி கிடைக்குமா? கவுன்சிலர் வார்டுகள் பதவியை பெற்றாலும்கூட, திமுக ஆட்சி தங்களுக்கு நிதிகளை போதுமான அளவில் ஒதுக்குமா? என்ற கலக்கமும் அவர்களிடம் சூழ்ந்துள்ளது.. மற்றொரு பக்கம், தேர்தல் நடக்க போகும் 9 மாவட்டங்களில் பாமகவுக்கு ஆதரவான வாக்கு வங்கிகள் உள்ளதால், பாமகவை கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்து வருகின்றன..அப்படியே வெற்றி பெற்றாலும், ஒன்றிய, மாவட்ட அளவிலான பதவி கிடைக்குமா? கவுன்சிலர் வார்டுகள் பதவியை பெற்றாலும்கூட, திமுக ஆட்சி தங்களுக்கு நிதிகளை போதுமான அளவில் ஒதுக்குமா? என்ற கலக்கமும் அவர்களிடம் சூழ்ந்துள்ளது.. மற்றொரு பக்கம், தேர்தல் நடக்க போகும் 9 மாவட்டங்களில் பாமகவுக்கு ஆதரவான வாக்கு வங்கிகள் உள்ளதால், பாமகவை கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சிகள் தோல்வியில் அடைந்து வருகின்றன..

பாமக

பாமக

தனித்து போட்டி என்று பாமக சொல்லிவிட்டதால், இதுவும் அதிமுகவுக்கு பின்னடைவுதான்.. சிவி சண்முகம் தலைமையில் நேற்றைய தினம் சில முக்கிய பிரமுகர்கள் பாமகவில் இருந்து அதிமுகவில் இணைந்தாலும்கூட, திமுகவை எதிர்கொள்ளும் அளவுக்கு அதிமுக தயாராக உள்ளதா என்பதுதான் சந்தேகம்.. அதனால் இந்த தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்ற குழப்பமும் அந்த கட்சி பிரமுகர்களிடம் ஏற்பட்டுள்ளதாம்.

English summary
Will ADMK Contest in Local body elections, what will Edappadi Palanisamy do
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X