"வீடியோ" சீக்ரெட்.. அஸ்திரத்தை எடுத்த சசிகலா.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய "சீனியர்".. டென்ஷனில் அதிமுக
சென்னை: கொடநாடு விவகாரம் சூடுபிடித்து வரும் நிலையில், அதுகுறித்து ஒருசில விஷயங்கள் கசிந்தபடியே உள்ளன.
கடந்த 2017, ஏப்ரல் 24-ம் தேதிதான் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.. காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதுடன், பங்களாவில் இருந்த பணம், பொருள்கள் மற்றும் பல ஆவணங்கள் காணாமல் போயின.
ஆனாலும், முதல்வர் என்ற அதிகாரம் கையில் இருந்த நிலையில், கொடநாடு கேஸ், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது... மக்களாலும் லேசாக அது மறக்கப்பட்டது..!
ஞாபகம் இருக்கா சஞ்சய் பாபா?.. எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணையா.. கொடநாடு கேஸில் திடீர் திருப்பம்

ஜெயலலிதா
இது தற்காலிக தீர்வை பெற்று தந்தாலும், திமுக தன்னுடைய பிரச்சாரத்தில் சொல்லியது போலவே மீண்டும், ஆட்சிக்கு வந்து வழக்கை தூசி தட்டி எடுத்துவிட்டது.. சசிகலாவை 2 நாட்களாக அழைத்து, அதிகாரிகள் விசாரணையும் நடத்தினர்.. இதற்கு காரணம், ஜெயலலிதா எப்போது கொடநாடு சென்றாலும், அவருடன் சசிகலாவும் செல்வது வழக்கம் என்பதாலும், பங்களா சசிகலாவின் கன்ட்ரோலில் இருந்ததாலும்தான், அவரிடம் விசாரணை நடத்த வேண்டியதாகிவிட்டது.

ஒத்துழைப்பு
அதிகாரிகளின் விசாரணைக்கு சசிகலா முழு ஒத்துழைப்பு தந்ததாகவும், எடப்பாடி பழனிசாமி பற்றி, ஏதோ வெயிட்டான மெசேஜ் அதிகாரிகளிடம் சசிகலா தெரிவித்ததாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டன.. அந்த தகவல்கள் என்ன என்பது குறித்துதான் ஓரளவு செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.. "ஆட்சியில் இருந்தவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல், இவ்வளவு பெரிய காரியம் நடந்திருக்காது, ஒரு மூத்த போலீஸ் அதிகாரிதான் இதற்கெல்லாம் ஸ்கெட்ச் போட்டு தந்திருப்பதாக வலுவான சந்தேகம் எழுந்திருக்கிறது.

எஸ்டேட்
விசாரணையின்போது, சில பொருட்களை சசிகலாவிடம் காண்பித்து, அவையெல்லாம் கொடநாட்டில் இருந்தவைதானா? என்று ஊர்ஜிதப்படுத்தி கொண்டார்களாம் அதிகாரிகள்.. பிறகு கொடநாட்டில் சில முக்கிய ஃபைல்கள், வீடியோக்களை ஜெயலலிதா வைத்திருந்தார், அதெல்லாம் இருக்கிறதா? இல்லையா? என்று அங்கே நேரில் போய் பார்த்தால்தான் என்று தெரியும் என்றாராம் சசிகலா..

பாயிண்ட்கள்
அதேசயம், மனோஜ், சயான் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம்.. அதாவது, சசிகலா பேச்சில், எடப்பாடியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர கூடிய அளவுக்கு சில முக்கிய பாயிண்ட்களை சொல்லி உள்ளாராம்.. அதனால், எடப்பாடி தரப்புக்கு விரைவில் சம்மன் அனுப்ப நிறையவே வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.. அதேபோல, காணாமல் போன அந்த வீடியோவில் என்ன இருக்கிறதென்று உறுதியாக தெரியவில்லை..

வீடியோக்கள்
ஆனால், ஜெ.ஆட்சியில் இருந்தபோது, அதிமுகவின் முக்கிய தலைவர்கள், அவர்களது அரசியல், செயல்பாடுகள் குறித்து மொத்தமும் டாக்குமெண்ட்களாக பங்களாவில் வைக்கப்பட்டிருந்ததாம்.. சில வீடியோக்களாகவும் இருந்திருக்கின்றன.. ஒருவேளை அந்த வீடியோக்களால், தங்கள் எதிர்கால அரசியல் பாழாகிவிடும் என்பதால், திருடப்பட்டிருக்கலாம் என்பது காவல்துறையின் சந்தேகமாக உள்ளது.. எப்படி பார்த்தாலும், விரைவில் இதற்கான தீர்வும், விசாரணையும் முழுமையாக நடத்தி முடிக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.