எடப்பாடிக்கு கைக்கு எட்டுனது.. வாய்க்கு எட்டாது? பொதுக்குழுவிற்கு "மெகா" சிக்கல்.. ஸ்டாலினிடம் லகான்
சென்னை: அதிமுக பொதுக்குழுவை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்பதில் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார்... என்ன சட்ட போராட்டம் வேண்டுமானாலும் நடக்கட்டும்.. ஓபிஎஸ் எந்த கோர்ட்டுக்கு வேண்டுமானாலும் போகட்டும்.. கண்டிப்பாக இந்த முறை தவற விட கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.
Recommended Video
இன்று கூட அதிமுக தலைமைக் கழக மீட்டிங்கில் அதை பற்றித்தான் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்து இருக்கிறாராம். அதிமுக விதிகளை காரணம் காட்டி ஓபிஎஸ் இந்த கூட்டத்திற்கு தடை பெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.
ஓபிஎஸ்ஸை மீறி எப்படி கூட்டத்தை நடத்துவது. அதில் பொதுச்செயலாளர் தீர்மானத்தை எப்படி கொண்டு வருவது என்று இன்று எடப்பாடி ஆலோசனை செய்து உள்ளனர்.
வளர்த்த கடா..ஒரே நேரத்தில் 'முன்று குதிரை’யில் சவாரி! அதிமுக அழிக்கும் ஓபிஎஸ்..! பற்றவைத்த பரஞ்சோதி!

ஆனால் சிக்கல்
சட்ட சிக்கல்களை தாண்டி எப்படியாவது பொதுக்குழுவை கூட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஆனால் அவருக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வாய்ப்பு குறைவு என்கிறார்கள் அரசு தரப்பு வட்டாரங்கள். பொதுக்குழுவிற்கு ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து சிக்கல் வராமல் போனாலும்.. வேறு வழியாக சிக்கல் வர வாய்ப்பு உள்ளதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன... அதன்படி தமிழ்நாட்டில் தற்போது கொரோனா கேஸ்கள் உயர்வதை காரணம் காட்டி பொதுக்குழுவிற்கு சிக்கல் ஏற்படலாம் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர்.

பொதுக்குழு கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,500 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் மட்டும் 624 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டில் மட்டும் 241 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. அதோடு இன்று அதிமுக தலைமை கழக கூட்டத்தில் கலந்து கொண்ட பல நிர்வாகிகளுக்கும் கொரோனா இருப்பதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பிஏ
முக்கியமாக எடப்பாடி பிஏ, சில அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர்கள் எல்லோரும் கடந்த சில தினங்களாக எடப்பாடி வீட்டில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதேபோல் கடந்த வாரம் அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொண்டனர். இந்த நிலையில்தான் நிர்வாகிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதற்கு மத்தியில் பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாஸ்க் கட்டாயம்
தமிழ்நாட்டில் மாஸ்க் கட்டாயம் என்று மீண்டும் விதி கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல்,முகக்கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

3000 பேர் கூடும் கூட்டம்
இந்த நிலையில்தான் கொரோனா கேஸ்கள் உயர்வது.. மாஸ்க் கட்டாயம் போன்ற சிக்கல்களுக்கு இடையில் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அதிமுக பொதுக்குழுவில் கிட்டத்தட்ட 3000 பேர் கூட வாய்ப்பு உள்ளது. அதோடு தொண்டர்கள் பலர் வெளியே கூட வாய்ப்பு உள்ளது. கொரோனாவிற்கு இடையில் இவ்வளவு பெரிய கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா கேஸ்கள் உயர்ந்து வரும் நிலையில், கூட்டம் போட கூடாது என்ற உத்தரவு வாய்ப்பு உள்ளதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

பொதுக்குழு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது
இப்படி ஏதாவது விதிகள் வந்தால் உள் அரங்கில் கூட்டம் நடத்தாமல் வெளி அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடத்த வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. அப்படி இல்லாமல் பொதுவாக அனைத்து விதமான அரசியல் கூட்டங்களும் நடத்த தடை விதிக்கப்பட்டால், அல்லது கட்டுப்பாடு விதிக்கப்பட்டால் அதன் காரணமாக அதிமுக பொதுக்குழு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. வரும் நாட்களில் கொரோனா கேஸ்கள் எந்த அளவிற்கு அதிகரிக்கிறது என்பதை பொறுத்து இந்த முடிவு எடுக்கப்படும். முதல்வர் ஸ்டாலின் கையில்தான் இந்த முடிவு உள்ளது.

ஸ்டாலின் கையில் லகான்
கொரோனா கேஸ்கள் உயர்வதை பொறுத்து முதல்வர் எடுக்கும் முடிவை வைத்தே இந்த கூட்டம் நடக்குமா நடக்காதா என்பது முடிவு செய்யப்படும். ஏற்கனவே.. கோர்ட் உத்தரவு காரணமாக எடப்பாடி ஒற்றை தலைமையாகும் மசோதாவிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அப்போதே எடப்பாடி கனவு நிறைவேறாமல் போனது. அதேபோல் இப்போதும் கொரோனா காரணமாக எடப்பாடிக்கு கைக்கு எட்டிய வாய்ப்பு வாய்க்கு எட்டாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.