சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவில் திடீர் சிக்கல்.. யாருக்கெல்லாம் "உதயசூரியன்".. பெருங் குழப்பத்தில் ஸ்டாலின்?

திமுக கூட்டணி கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் பிரச்சனை நீடித்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஆளாளுக்கு முக ஸ்டாலினை குழப்புகிறார்களாம்.. கூட்டணிகளுக்கு எத்தனை சீட் என்பதிலும், சின்னம் விவகாரத்திலும் மாறுபட்ட கருத்துக்களை சொல்லி வருவதால், எந்த ஒரு முடிவு எடுப்பது என்று தெரியாமல் திமுக தலைவர் திணறுவதாக கூறப்படுகிறது.. அதேசமயம், யாரையும் அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடக்கூடாது, அனைவரையும் அரவணைப்புடன் அழைத்து செல்ல வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம்!

கூட்டணி கட்சிகள் விவகாரத்தால், திமுகவில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. வைகோ, திருமாவளவன், பாரிவேந்தர் என்று ஒவ்வொரு கட்சிக்காரர்களும், தனி சின்னத்தை கேட்டு வருவதால், முடிவெடுக்க முடியாமல் திமுக உள்ளது.

இவர்கள் அனைவரும் தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தனி சின்னம் கேட்கின்றனர்.. இதில், 10 தொகுதிகளில் போட்டியிட்டு, அதில் 6 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் வைகோவும், திருமாவும் இருக்கிறார்கள்.

 கூட்டணி

கூட்டணி

இதற்கு தனி சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்.. இல்லாவிட்டால் தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் என்பது இல்லாமலேயே போய்விடும்.. அதனால்தான் 15-முதல் 20 சீட்டுக்களையாவது ஒதுக்க வேண்டும் என்று கேட்டனர்.. குறைந்தபட்சம் 10 சீட்டுக்களையாவது ஒதுக்கப்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வருகின்றனர்.. இதில் பாரிவேந்தரும் இணைந்துள்ளார்.. இவர்களாவது சீட்டுக்கள் இத்தனை வேண்டும் என்று கேட்கின்றனர், அவரோ, சீட் தராவட்டால் தனித்து போட்டி என்று அறிவித்தே விட்டார்.

திமுக

திமுக

ஆனால், இவ்வளவு தொகுதிகள் ஒதுக்கி, தனி சின்னத்தில், இந்த கட்சிகள் எல்லாம் போட்டியிட்டால், திமுகவுக்கு சறுக்கலாவிடுமோ, வெற்றி வாய்ப்பை இந்த முறையும் தவறவிட்டுவிடுவோமா என்ற திமுக நினைக்கிறது.. அதேமசயம், அதிமுகவின் வெற்றிக்கு நாமே காரணமாகிவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறது.. இந்த சமயத்தில்தான் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், கூட்டணி இல்லாமல் திமுக தேர்தலை சந்தித்தது இல்லை, அதனால் திருமா, வைகோவை அரவரணைத்து சென்றால், திமுகவுதான் நல்லது என்கிறார்களாம்.

 கழட்டி விடுங்கள்

கழட்டி விடுங்கள்

மேலும் ஒருசில தலைவர்களோ, "பேசாமல் கழட்டி விடுங்கள், இவர்களால் நமக்கு பலம் இல்லை".. என்று வலியுறுத்துகிறார்களாம். மேலும் ஒருசிலர், "அவசரப்பட வேணாம், பொறுமையாக யோசித்து முடிவெடுப்போம்.. சாதிக்கட்சிகள் வேண்டுமானால் தனிச்சின்னத்தில் போட்டி போட்டுக் கொள்ளட்டும், மற்ற கட்சிகளை உதயசூரியனில் போட்டியிட சொல்லுவோம்" என்கிறார்களாம்.

குழப்பம்

குழப்பம்

இதற்கு நடுவில் ஐபேக் டீம் வேறு சில யோசனைகளை சொல்லி வருகிறதாம்.. இப்படி பலவித யோசனைகள் சொல்லவும், ஸ்டாலின் ரொம்பவே கன்ஃபியூஸ் ஆகி உள்ளாராம்.. அதேசமயம், கூட்டணி கட்சிகள் யாரையுமே இழந்துவிடக்கூடாது, எந்த கட்சியின் அதிருப்தியையும் சம்பாதித்து கொள்ளக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம். என்ன முடிவெடுக்க போகிறார் முக ஸ்டாலின் ! பார்ப்போம் !

English summary
Will alliance Parties continue in the DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X