சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறுபடியும் முதல்ல இருந்தா.. சென்னை வரும் அமித்ஷா.. இந்த முறையாவது "அவரை" பார்ப்பாரா? ஆதரவு கோருவாரா?

அமித்ஷா ரஜினியை சந்தித்து பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: துக்ளக் பத்திரிகையின் விழாவுக்கு அமித்ஷா வருகை தர உள்ளார்.. இந்த வருகையை வைத்து ஒருசில அனுமானங்களும், திட்டங்களும் தயாராகி வருகின்றன.

Recommended Video

    மோடி, அமித்ஷாவை கொலை செய்வோம்: முடிந்தால் தடுத்து பார்: மிரட்டல் கடிதம்!

    துக்ளக் ஆண்டு விழா வருஷந்தோறும் பொங்கலன்று நடப்பது வழக்கம்.. மறைந்த சோ இதை கடைசி வரை நடத்தி வந்தார்.. இந்த விழாவுக்கு அனைத்து கட்சியினரையும் சோ அழைப்பார்... பல நேரம் கருத்து மோதல் நடக்கும் கூட்டமாக இது அமையும்.

    இந்த விழாவிற்கு பிரதமர் மோடி, அத்வானி உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்களும் பலமுறை கலந்து கொண்டுள்ளனர்... அதேபோல, ரஜினிகாந்த்தும் ஊரில் இருந்தால், ஷூட்டிங் எதுவும் இல்லையென்றால் கட்டாயம் கலந்து கொள்வார்... அப்படியே கலந்து கொண்டாலும், அவர் எப்போதும் பார்வையாளராகவே இருப்பார். அதனால் துக்ளக் விழா என்றாலே பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுவது வழக்கம்.

    ரஜினிகாந்த் ரெஸ்ட் எடுத்தாலும்.. ஓயாமல் உலா வரும் டிரோல்ஸ்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள் ரஜினிகாந்த் ரெஸ்ட் எடுத்தாலும்.. ஓயாமல் உலா வரும் டிரோல்ஸ்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்

    குருமூர்த்தி

    குருமூர்த்தி

    சோ மறைவுக்கு பிறகு குருமூர்த்தி ஆசிரியர் பொறுப்பேற்றார்... அதிலும் கடந்த ஆண்டு, ரஜினி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்... அப்போது அவர் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியது... இணையத்திலும் பெரும் விவாதத்தை கிளப்பிவிட்டது.. அதுவரை பார்வையாளராகவே இருந்த ரஜினி, மேடையேறி துக்ளக்கை புகழ்ந்ததும், பெரியாரை விமர்சித்ததும் யாரும் எதிர்பாராத ஒன்று. அதன் விளைவையும் ரஜினி அப்போதே அறுவடை செய்துவிட்டார்!

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    இந்த வருடம் மறுபடியும் துக்ளக் விழா நடக்க போகிறது.. பாஜகவின் மூத்த தலைவரும் , மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்து கொள்ள போகிறாராம்.. வரும் ஜனவரி 14 ம் தேதி சென்னை வரவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது... இதேவிழாவில் ரஜினிகாந்த்தும் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    ஓய்வு

    ஓய்வு

    இப்போதை தமிழக அரசியல் சூழலை பொறுத்தவரை, ரஜினிகாந்த் ஓய்வில் உள்ளார்.. அதனால், சென்னை வரும் அமித்ஷா ரஜினிகாந்தின் உடல் நிலையை குறித்து சந்தித்து பேச போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.. ஏற்கனவே சென்னை வந்த அமித்ஷா ரஜினியை சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்ட நிலையில், அது நடக்கவே இல்லை.. ரஜினிக்கு ஜூரம் என்றார்கள், பிறகு வழக்கம்போல் மறுப்புதான் வெளியானது.

    குருமூர்த்தி

    குருமூர்த்தி

    ஆனால், அமித்ஷாவை குருமூர்த்தி சென்று சந்தித்தார்.. அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை.. இந்த முறை துக்ளக் விழாவுக்கு ரஜினியை எப்படியும் குருமூர்த்தி அழைப்பார்.. அப்போது நிச்சயம் அமித்ஷாவின் வருகையும் தெரியப்படுத்தப்படும் அல்லது அமித்ஷாவே ரஜினியை சந்திப்பதற்கான வாய்ப்புகளும் அமையக்கூடும் என்கிறார்கள்.

    வாய்ஸ்

    வாய்ஸ்

    அரசியலுக்கு வரபோவதில்லை என்று ரஜினி அறிக்கை விட்டாலும், அந்த அறிக்கையின் கடைசி பாராவில் இருக்கும் வரிகளை சுட்டிக்காட்டி, 96-ல் நடந்ததை போலவே இந்த முறையும் ரஜினி வாய்ஸ் தருவார் என்று குருமூர்த்தி ஒரு பஞ்ச் தெரிவித்திருக்கிறார்.. அதனால், அநேகமாக பாஜகவுக்கு ரஜினியை வாய்ஸ் தரும்படி இவர்கள் கோரிக்கை வைப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுகிறது. அதேசமயம், ரஜினி தனக்கான மேல்சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாகவும் ஒரு தகவல் கசிந்து வருகிறது... அது உண்மையா என்று தெரியவில்லை.

    சிகிச்சை

    சிகிச்சை

    ஒருவேளை அமித்ஷாவை இந்த முறையும் நேரில் சந்திப்பதை தவிர்ப்பதற்காக, ரஜினி அதற்கு முன்னதாகவே வெளிநாடு செல்லக்கூடும் என்றும் சிலர் சொல்கிறார்கள். அதேபோல, அழகிரி கட்சி ஆரம்பிப்பதாக சொல்லி உள்ளதையும், அமித்ஷா வருகையையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டி உள்ளது.. கடந்த முறை அமித்ஷா வந்தபோதே, அழகிரி மதுரையில் இருந்து காரில் கிளம்பி விட்டார் என்று கிளப்பி விட்டார்கள்..

    மு.க. அழகிரி

    மு.க. அழகிரி

    ஆனால் இம்முறை அமித்ஷாவை அழகிரி நிச்சயம் சந்திக்கக்கூடும், அப்படி சந்தித்தால் பாஜகவுக்கு நன்மை பயக்கக்கூடிய சில விஷயங்களை அழகிரியிடம் அமித்ஷா வைக்கக்கூடும் என்று தெரிகிறது.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, அதிமுகவில் இன்னமும் இழுத்து கொண்டிருக்கும் அந்த முதல்வர் வேட்பாளர் விவகாரத்துக்கு ஒரு முடிவு கிடைத்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.. ஆக, இந்த முறை அமித்ஷாவின் பயணமானது ஏகப்பட்ட விஷயங்களை தாங்கியவாறே வலம் வந்து கொண்டிருக்கிறது!

    English summary
    Will Amit shah Meet Rajinikanth on January 14
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X