சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமித்ஷாவின் "ஆடு புலி" ஆட்டம்.. டபாய்க்கும் "பாயும் புலி".. திமுக, அதிமுகவுக்கு சிக்கலா..?!

ரஜினியை தொடர்ந்து இழுக்க முயற்சித்து வருகிறது பாஜக

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினியை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட பாஜகவுக்கு மனசே இல்லை.. ரஜினி என்ற ஆளுமையின் மவுசு இன்னமும் தமிழ்நாட்டில் குறையாமல் உள்ளதுதான் இதற்கு காரணம்!

ரஜினியின் அரசியல் வருகை என்பது உண்மையிலேயே திமுக - அதிமுகவுக்கு லேசான நடுக்கத்தையே தந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை திமுக ஓபனாக காட்டிக் கொண்டது என்றால், அதிமுகவுக்கு உள்ளுக்குள்ளேயே உதறல் இருந்துள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை, இந்த முறை அவர் டார்கெட் செய்வது திமுகதான்.. இதற்கு நடுவில் ரஜினி கட்சியை ஆரம்பித்தால், வாக்குகள் சிதறுமே என்பது அதிமுகவின் கவலையாக இருந்திருக்கிறது.. அதேபோல, திமுகவுக்கு ஏற்படும் கவலை என்னவென்றால், 10 வருஷம் இல்லாமல் இருந்து, கஷ்டப்பட்டு மேலே எழுந்து வரும் சமயத்தில், ரஜினியை எதிர்கொள்வது என்பது பெரிய சிக்கல் என்பதுதான்.

ரஜினி வருவார் மாற்றத்தை தருவார்... வெளிநாடு வாழ் ரசிகர்கள் எதிர்பார்ப்பு ரஜினி வருவார் மாற்றத்தை தருவார்... வெளிநாடு வாழ் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

கட்சி

கட்சி

கட்சிக்குள் எதிர்ப்புகளையும் மீறி பிரசாந்த் கிஷோரை உள்ளே கொண்டு வந்து வேலை பார்க்கும்போது, ரஜினி அசால்ட்டாக வாக்கை எடுத்து விடுவாரோ என்பதே அதன் கணிப்பு.. மொத்தத்தில் இரு திராவிட கட்சிகளின் பெருங்கவலை, ஆன்மீக அரசியல் என்ற ஒன்றை மக்கள் முன்நிறுத்தி, இந்துத்துவா ஓட்டுக்களை அப்படியே அள்ளி கொள்வார் என்பதுதான்.

அமித்ஷா

அமித்ஷா

அதனால், இரு தரப்புமே ரஜினி வந்துவிடக்கூடாது என்பதில் மறைமுகமாக முனைப்பு காட்டியதாக சொல்லப்படுகிறது.. அதற்கேற்றபடி உடல்நிலையை காரணம் காட்டி ரஜினி ஒதுங்கி உள்ளதுபோல இருக்கிறார். ஆனால், இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. ரஜினியை களத்துக்கு கொண்டுவருவதில், அமித்ஷா தீவிரமாகவே இருக்கிறாராம்.. பாஜகவை பொறுத்தவரை, திமுக, அதிமுக இருக்கும்வரை தங்கள் கட்சியின் செல்வாக்கு வளர போவதில்லை என்பதை உணர்ந்துள்ளது.

செல்வாக்கு

செல்வாக்கு

இரு கட்சிகளுக்கும் மாற்றாக, ரஜினியை பயன்படுத்தினால் பாஜகவின் செல்வாக்கு உயரும், ரஜினியை விட்டுவிட்டால், இந்த முறையும் பாஜக தமிழகத்தில் கால் பதிக்க முடியாது என்பதையும் புரிந்து கொண்டுள்ளது. அதனால்தான் ரஜினிக்கு அடிக்கடி நெருக்கடியும் அழுத்தமும் தரப்பட்டு வருகிறது... நேற்றுகூட குருமூர்த்தி அமித்ஷாவிடம் பேசிவிட்டுதான், அதன்பிறகு ரஜினியை சென்று சந்தித்தாராம்.

குருமூர்த்தி

குருமூர்த்தி

அமித்ஷா வலியுறுத்திய அத்தனை கருத்தையும் ரஜினியுடம் குருமூர்த்தி எடுத்து வைத்திருக்கலாம் என்றும், அதற்கும் ரஜினி மவுனத்தையே பதிலாக உதிர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது... இதில் அமித்ஷாவின் வியூகம் எடுபடுமா? ரஜினி மவுனம் கலைப்பாரா? என்ன முடிவெடுப்பார்? என்பது போக போகத்தான் தெரியவரும்.

English summary
Will Amit Shah's new plan win over Rajinikanth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X