சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தூள் தூளாகிறதா பாஜக கணக்கு.. சசிகலாவை முன்வைத்து எடுக்கும் அரசியல்.. மக்கள் போடும் சூப்பர் கணக்கு

அமமுக, அதிமுக இணைய வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவை முன்வைத்து, திமுகவை அடியோடு சாய்க்க பாஜக ஒரு பெரிய கணக்கு போட்டு கொண்டு இருக்கிறது.. ஆனால், நம் மக்கள் கணக்கோ வேறு விதமாக இருக்கிறது..!
விரைவில் தேர்தல் நடக்க உள்ளதால், அதிமுக, திமுக கட்சிகள் மும்முரத்தில் உள்ளன.. மற்றொரு பக்கம் பாஜக பல சைலண்ட் வியூகங்களை கையில் எடுத்துள்ளது.. அதில் ஒன்றுதான் சசிகலாவின் வருகையும்.

திமுகவை இந்த முறை தேர்தலில் வெற்றி பெற வைத்துவிடக்கூடாது என்பதற்காகவே கடந்த ஒரு வருடமாகவே ஸ்கெட்ச் போட்டு வருகிறது.. மேலும் பல வழிகளில் அக்கட்சியை டேமேஜ் செய்யும் முயற்சியிலும் இறங்கி வருகிறது.

பிளான்கள்

பிளான்கள்

ஏற்கனவே 2 ஆப்ஷன்களையும் கையில் வைத்திருந்தது.. ஒன்று ரஜினி, மற்றொன்று சசிகலா. இதில் ரஜினி ஜகா வாங்கிவிடவும், போட்டு வைத்த அத்தனை பிளான்களையும் சசிகலா பக்கம் திருப்பி விட்டுள்ளது பாஜக. எடப்பாடியாரை முதல்வர் வேட்பாளராக ஏற்க மனமில்லாத அதேசமயம், அதிமுகவுடன் அமமுகவை இணைப்பதன் மூலம் பெரும்பான்மையை பெற்றுவிடலாம் என்று பாஜக கணக்கு போட்டு வருகிறது.

அதிமுக

அதிமுக

இதற்காக அதிமுக தலைமையை சம்மதிக்க வைக்கும் முயற்சியிலும் இறங்கி வருகிறது.. மற்றொரு பக்கம் டிடிவி தினகரனையும் டெல்லி அழைத்து பேசியுள்ளதாக தெரிகிறது. எப்போது தினகரன் டெல்லி போனாரோ, அப்போதே அவர் ஆஃப்.. ஒரு சத்தத்தையும் காணோம்.. எதிர்ப்பார்த்தபடி குக்கரும் முன்கூட்டியே கிடைத்துவிட்டதால் ஏக குஷியில் இருக்கிறார்.

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

தன் கட்சி நிர்வாகிகளிடமும் பேசும்போதும், நமக்கு குறி திமுகதான்.. இனி அதிமுகவை சீண்டாமல் பேசுங்கள், அவர்களை எதுவும் சொல்ல வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவும் போட்டிருந்தார். ஆக, தினகரனை பொறுத்தவரை இணைப்புக்கு சம்மதம் என்றே தெரிகிறது. ஒருவேளை இவர்கள் இருவரும் அதாவது அதிமுக, அமமுக இணைந்து தேர்தலை சந்தித்தால், அது எத்தகைய தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தக்கூடும் என்று தெரியவில்லை.

கணிப்பு

கணிப்பு

அதனால் நம் வாசகர்களிடமே இதை ஒரு சுவாரஸ்ய கருத்து கணிப்பாக கேட்டிருந்தோம்.. "அதிமுக - அமமுக இணையணுமா அல்லது தனித்து செயல்படுவது நல்லதா?" என்ற கேள்விக்கு, "இணைய வேண்டும்" என்று 22.35 சதவீதம் பேரும், "தனித்தே இயங்கட்டும்" என்று 19.29 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். "அது அவர்களது விருப்பம்" என்ற ஆப்ஷனுக்கு 12.37 சதவீதம் பேரும், "இணைந்தாலும் பலம் கிடைக்காது" என்று ஆப்ஷனுக்கு 45.99 சதவீதம் பேரும் அழுத்தமான வாக்கை செலுத்தி உள்ளனர்.

பச்சைக்காடி

பச்சைக்காடி

இந்த கணிப்பில் இருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால், அமமுக-அதிமுக இணைந்தால் திமுக, சரிந்துவிடும் என்று பாஜக போடும் கணக்கு தவிடுபொடியாகிறது போலும்.. இணைந்தாலும் பலம் கிடைக்காது என்பதே பெரும்பாலானோர் கருத்தாக உள்ளதால், இதை பாஜக உட்பட அமமுக, அதிமுக கட்சிகளும் தங்களை சீர்தூக்கி பார்ப்பது அவசியம்.. அதேபோல, இந்த இரு கட்சிகளின் சறுக்கல் ரிசல்ட், திமுகவின் வெற்றிக்கு பச்சைக்கொடி காட்டுவதாகவும் தென்படுகிறது.

English summary
Will AMMK and ADMK join soon in election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X