• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நாங்க ரெடி.. ஆனால் இந்த "மூன்றையும்" கொடுத்திருங்க.. அமமுகவின் அதிரடி கண்டிஷன்கள்!

|

சென்னை: அதிமுகவுடன் அமமுக இணைய வாய்ப்புள்ளதாகவும், அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால், 3 கண்டிஷன்களை முன்வைக்கவும் அமமுக யோசித்து வருகிறதாம்!

இந்த 4 வருஷமாக அமமுக என்ற கட்சியை பற்றியோ, சசிகலா, தினகரன் என்ற பெயர்களை குறிப்பிட்டோ அதிமுக தலைமை அரசியல் செய்யவில்லை.. ஒருகட்டத்தில், தமிழக பிரச்சனைகள் குறித்து பழனிசாமி அரசு இப்படி செய்வது தவறு என்று டிடிவி தினகரன் சுட்டிக் காட்டி ட்வீட் போட்டு கொண்டு வந்தாரே தவிர, அவரும் அதிமுக தலைமையிடம் நேரடியாக மோதவில்லை.

Will AMMK Join in AIADMK Soon

இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த மாதம் ஒரு தகவல் கசிந்தது.. நமக்கு குறி திமுகதான்.. அதிமுகவை அவ்வளவாக யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று தினகரன், தன்னுடைய கட்சி நிர்வாகிகளிடத்தில் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதாக கூறப்பட்டது.. அப்போதே ஓரளவு நிலவும் சூழலை கணிக்க முடிந்தது.

சசிகலா ரிலீஸ் சமயத்தில், டிடிவி டெல்லி சென்றுவிட்டு திரும்பிய நிலையிலும், அதே நிலைப்பாடுதான் அதிமுக மீது உள்ளது.. இந்த சமயத்தில்தான் குருமூர்த்தி அப்படி ஒரு பேச்சை அன்றைக்கு பேச, இப்போது வரை அதிமுக தலைமை அதுகுறித்து வாய் திறக்கவே இல்லை.. அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் குருமூர்த்தி பேச்சுக்கு எதிர் கருத்து சொன்னாரே தவிர, அவ்வளவு வலிமை வாய்ந்த, நெத்தியடி பதிலை அவர் சொல்லவே இல்லை.

மற்றொரு பக்கம், திமுகவை சமாளிக்கவும், பாஜகவின் விருப்பத்திற்கு இணங்கவும் அமமுகவை இணைத்து கொள்வதில் தவறில்லை என்ற பேச்சும் அதிமுக சீனியர்களிடம் உள்ளது.. ஒருசிலர் அதை வெளிப்படையாகவே சொல்லி விட்டார்கள்.. அதனால் விரைவில் இந்த 2 கட்சியும் இணைந்தால் அதில் எந்தவித ஆச்சரியமும், அதிசயமும் இல்லை.. ஒருவேளை தாய்க்கழகத்துடன் அமமுக இணையும் பட்சத்தில் 3 கண்டிஷன்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

வெளிவரும் சசிகலா.. அடுத்த 6 ஆண்டு மீண்டும் வனவாசம்.. கழகத்தில் ஏற்படுமா கலகம்.. நடக்கப் போவது என்ன?

ஒன்று, சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும், இரண்டு, டிடிவி தினகரனை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும், மூன்று, எம்எல்ஏ பதவியை இழந்த 21 பேருக்கும் 2021 தேர்தலில் சீட் வழங்க வேண்டும் என்பதே அந்த 3 கண்டிஷன்களாகும்.. பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்றால், கட்சியை கேட்கிறார்கள் என்று அர்த்தம்.. இதற்கு எடப்பாடியார் தரப்பு என்ன சொல்லுமோ தெரியவில்லை.. இந்த 3 கண்டிஷன்களையும் அதிமுக ஏற்குமா? அப்படி ஏற்காவிட்டால் அமமுக என்ன முடிவெடுக்கும் என்பதும் பெரிதும் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றுதான்!

 
 
 
English summary
Will AMMK Join in AIADMK Soon
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X