சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கொக்கி" ரெடி.. அடுத்த விக்கெட் இவர்தானாமே.. அதிரடி ஆபரேஷனுக்குத் தயாராகும் அதிமுக!

அமமுகவின் முக்கிய புள்ளி அதிமுகவுக்கு தாவ இருப்பதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: விரைவில் தேர்தல் வரவுள்ளதால் அடுத்தடுத்த வேலைகளில் அதிமுக இறங்கிவிட்டது.. அந்த வகையில் முக்கிய ஆட்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளதாம்.

இந்த முறை எடப்பாடியார் நேரடியாக முதல்முறையாக தேர்தலை சந்திக்க இருக்கிறார்.. வளர்ந்து வரும் திமுகவுக்கு டஃப் கொடுக்கும் வகைகளில் எல்லா தரப்பிலுமே முயன்று வருகிறார்.

அந்த வகையில் கட்சியை பலப்படுத்துவது என்பது முக்கிய பணி என்பதால், அதற்கான ஸ்கெட்சை அதிமுக தலைமை தீட்டி வருகிறது.. சமீப காலமாக திமுகவில் இருந்து பாஜகவுக்கு அதிருப்தியாளர்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில், சத்தமே இல்லாமல் அதிமுக வேறு ஒன்றை செய்து வருகிறது.. அந்த வகையில், அமமுக துணை செயலாளர் அதிமுகவுக்கு மாற போகிறாராம்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

அமமுகவின் துணை பொதுச் செயலாளராக இருப்பவர் ரங்கசாமி... இவர் அதிமுகவில் தஞ்சை மாவட்ட செயலாளராக இருந்தவர்.. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தஞ்சை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டார்.. ஆனால் அந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

ஜெயலலிதா

ஜெயலலிதா

இதற்கு பிறகு அதிமுக ஆட்சியை பிடித்தது... ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது, நடந்த இடைத்தேர்தலில்தான் ரங்கசாமி போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்... அந்த அளவுக்கு அதிமுகவில் செல்வாக்கானவர்.. அந்த தேர்தலை மட்டும் தள்ளி வைக்காமல் இருந்து நடத்தியிருந்தால், ரங்கசாமி இந்நேரம் அமைச்சர் குழுவில் இடம் பெற்றிருப்பார். ஆனால், ஜெ.மறைவுக்கு பிறகு பெரிதாக எந்த பொறுப்பும் இவருக்கு வரவில்லை.

வியூகம்

வியூகம்

அதனால் டிடிவி பக்கம் சென்றார்.. அங்கு சென்ற நேரம் எம்எல்ஏக்கள் விவகாரம் நடந்து, தன்னுடைய எம்எல்ஏ பதவியையும் இழந்தார்.. இப்போது சசிகலா வருகையும், அவர் வந்த பிறகு எடுக்கப்போகும் முடிவுகளும் எதுவுமே தெரியாத நிலை உள்ளது.. டிடிவி தினகரனும் தேர்தலுக்கான எந்தவியூகத்தையும் கையில் எடுக்காமல் இருப்பதாக தெரிகிறது.

ரங்கசாமி

ரங்கசாமி

இதுபோன்ற பிரச்சனைகளை மையமாக வைத்துதான், அதிருப்தியில் உள்ள ரங்கசாமியை தன் பக்கம் இழுக்க அதிமுக முயன்று வருகிறதாம்.. தஞ்சையில் ரங்கசாமி இருந்தால், தேர்தல் சமயத்தில் கட்சிக்கு பலம் என்று அதிமுக தரப்பு கணக்கு போடுகிறதாம்.. இதெல்லாம் உண்மையா என்று தெரியவில்லை.. ஒருவேளை உண்மையாயின் ரங்கசாமி என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

English summary
Will AMMK Senior Leader Rangasamy join in ADMK soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X