சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒருவேளை நிஜமாகவே தாமரை மலர்ந்துடுமோ.. நேரடியாகவே திமுகவை குறி வைக்கும் பாஜக.. அதிமுக ஷாக்

திமுக - பாஜக சுவர் விளம்பரம் செய்வதில் தொடர் மோதல் ஏற்பட்டு வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை:பாஜகவுக்கு ஒரே டார்கெட் திமுகதான்.. ஸ்டாலின் மட்டும் முதல்வராக வந்துவிடக்கூடாது என்பதில் மிக மிக தீவிரமாக இருந்து வருகிறது.. அதற்கான மோதல்கள் சுவர் விளம்பரங்களில் இருந்தே அப்பட்டமாக தெரிய ஆரம்பித்து விட்டது.. அதேசமயம், தனித்து போட்டி என்பதிலும் பாஜக பலமான யோசனையில் உள்ளது!

சென்ற மாதம் எல்.முருகன் ஒரு பேட்டியில், "நாங்க சும்மா நின்னாலே 60 இடத்தில் வெற்றி பெறுவோம்.. சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் பலம் தெரியும்" என்று சொல்லி இருந்தார்.

அதிமுகவுடனான கூட்டணியில் நீடித்து வந்தாலும், இனியும் அதே கட்சியில் நீடிக்க போகிறது என்றாலும், சீட்-டுக்கான பேரமாக இந்த பேச்சு பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக இதை கண்டு கொள்ளவே இல்லை..

முருகன்

முருகன்

இந்த 60 சீட்டுக்கு விடையே இன்னும் தெரியவில்லை. கடந்த வாரம் நாளைக்கு முன்பும் முருகன் பேசும்போதும், "60 இடங்களில் தனித்து நின்றாலும் 60 இடங்களில் பாஜக வெற்றி பெறும், ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும்" என்று அதிமுக தரப்பை மேலும் எரிச்சலூட்டினார்.இந்த பேச்சுக்கு முதல்வர் முதல் ஆர்பி உதயகுமார் வரை, தேசிய கொடிதான் பறக்கும் என்று காட்டமான பதிலை தந்துவிட்டனர்.. ஆனால், பாஜக தங்கள் கூட்டணயில் உள்ளதா இல்லையா என்பதை வெளிப்படையாக சொல்லவில்லை.

பாஜக

பாஜக

அதனால், பாஜக தனித்து நிற்பது என்பது ஓரளவு முடிவாகி வருவதாக சொல்லப்படுகிறது. அதேசமயம், ரஜினியை அவர்கள் விடுவதாக இல்லை. "தேர்தலில் போட்டியிட்டாலோ அல்லது ஆன்மீக அரசியல் தொடங்கினாலோ நாங்கள் வரவேற்போம்.... ரஜினி கட்சி ஆரம்பித்த பின்னர் அவரிடம் கூட்டணி குறித்து பேசுவோம்" என்று முருகன் இப்போதே ஒரு வார்த்தை சொல்லி வைத்து உள்ளார்.

திமுக

திமுக

இதனிடையே திமுக மீது நேரடியாக பாய்ந்து வருகிறது பாஜக.. இதற்கான போட்டி சுவர் விளம்பரங்களிலேயே தென்பட ஆரம்பித்துவிட்டது.. சென்னை நங்கநல்லூர் பகுதியில் சுவர் ஒன்றில் கட்சி விளம்பரம் செய்வதில் திமுகவினருக்கும், பாஜகவினருக்கும் மோதல் ஏற்பட்டு, அடிதடி, மோதல் வரை சென்றது. திமுக வட்ட செயலாளர் பாஜக மகளிர் நிர்வாகிகள் மீது பைக்கை விட்டு மோதிவிட்டார்.. அந்த விசாரணை ஒருபக்கம் நடந்து வருகிறது.

பாஜக

பாஜக

அதேபோல, மதுரையிலும் சுவர் விளம்பரத்தில் பாஜக வேலையை ஆரம்பித்துவிட்டது.. வழக்கமாக அங்கு அதிமுகதான் இந்த வேலையை முன்னதாகவே ஆரம்பிக்கும்.. ஆனால், அதிமுகவினருக்கு சவால்விடுக்கும் வகையில் பாஜகவினர் சுவர் விளம்பரம் செய்யத் தொடங்கிவிட்டனர்... அது அதிமுகவுக்கே கொஞ்சம் ஷாக்தான்.

 அதிமுக ஷாக்

அதிமுக ஷாக்

மதுரை கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு தெருவிலும் பாஜகவினர், "2021 தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிப்பீர்" என்று சுவர் விளம்பரம் செய்துள்ளனர்... இப்படித்தான் கடந்த எம்பி தேர்தலின்போதும், நேரத்திலும் பாஜகவினர், மதுரை தொகுதியில் சுவர் விளம்பரம் செய்தும், தெருமுனை பிரச்சார கூட்டங்களும் நடத்தினர்... ஆனால், கடைசியில், மதுரை தொகுதி அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது... அதனாலேயே பாஜகவினர் அங்கு சரியாக தேர்தல் வேலை பார்க்கவில்லை.. இது அதிமுகவுக்கே சற்று அதிருப்தியை தந்துவிட்டது. இப்போது அவர்களுக்குள் உரசல் அதிகமாக உள்ளதால், பாஜக வளைத்து வளைத்து மதுரையில் விளம்பரத்தில் இறங்கி உள்ளது

 சுவர் விளம்பரம்

சுவர் விளம்பரம்

அதுபோலவே, திண்டுக்கல் அருகே சுவரில் விளம்பரம் செய்வது தொடர்பாக இன்று பாஜக - திமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.. ஆர்வி நகர் கூட்டுறவு பண்டகசாலை சுவரில் பாஜகவினர் சுவர் விளம்பரம் செய்திருந்தனர்.. அதன் மீது திமுகவினர் ஒரு பேனரை ஒட்டினர்.. இதை பார்த்த பாஜக நிர்வாகி ஒருவர் அதை கிழிக்க முயன்றார்.. இது கைகலப்பு வரை போய்விட்டது.. அந்த பாஜக நிர்வாகி கைகலப்பில் மயங்கி விழுந்து, ஆஸ்பத்திரியில் சேர்த்து, இப்போது சிகிச்சை நடந்து வருகிறது... அந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தங்கள் தரப்பில் பாஜக - திமுக இது குறித்து புகார்களை தந்துள்ளது.

 போலீசார் குவிப்பு

போலீசார் குவிப்பு

பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் சில தினங்களுக்கு முன்பு பேசும்போது, "டீக்கடை மற்றும் பிரியாணி கடைகளுக்கு திமுகவினால் பாதுகாப்பு இல்லை.. அதேபோல் போலீசாருக்கும் திமுகவால் பாதுகாப்பு இல்லை.. தமிழகத்தின் ஏராளமான பகுதியில் பாஜகவின் கொடி பறக்கிறது... இதை பார்த்துதான் திமுக பயப்படுகிறது.. தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது.. இது பழைய பாஜக இல்லை.. பாஜக 2.0..!

 கால் தூசி

கால் தூசி

திமுகவில் இருந்து வெளியேறுபவர்கள் வழக்கமாக அதிமுகவில் இணைவது வழக்கம்.. ஆனால் இப்போது திமுகவின் எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.. இதுதான் பாஜகவின் வளர்ச்சிக்கு உதாரணம்.. உலகமே பார்த்து பயப்படும் சீனாவை ஓடவிடும் கட்சி பாஜக.. எங்களுக்கு திமுக எல்லாம் கால்தூசி" என்று சொல்லி இருந்தார். அதாவது, அதிமுகவை மறைமுகமாக மட்டம் தட்டியதுடன், திமுகவை நேரடியாக தாக்கி பேசியிருந்த அதிர்ச்சி இன்னும் மறையவே இல்லை!

 விபி துரைசாமி

விபி துரைசாமி

ஏற்கனவே விபி துரைசாமி, "தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் மற்றொரு கூட்டணியும் தேர்தலை சந்திக்கும்... இனி திமுக - பாஜகவுக்குத்தான் போட்டியே" என்று சொல்லி இருந்த நிலையில், ஒருவேளை அவர் சொல்லியதுபடிதான் எல்லாம் நடந்து வருகிறதா என்ற சந்தேகமும் நமக்கு வருகிறது!

English summary
Will BJP go alone in Tamil Nadu Assembly election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X