சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேற்று வந்த அண்ணாமலைக்கு பதவி.. எச்.ராஜாவின் திடீர் கப்சிப்.. வந்து சேருமா அந்த நல்ல "செய்தி" !

Google Oneindia Tamil News

சென்னை: கப்சிப்பென்று இருந்து பார்த்தும், எச்.ராஜாவுக்கு அந்த நல்ல செய்தி வருமா? கிடைக்குமா? என்று தெரியவில்லை.

எச்.ராஜா பாஜகவின் மூத்த தலைவர்.. அனுபவசாலி.. திறமைசாலி.. எதுவானாலும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்.. யாராக இருந்தாலும் நேருக்கு நேர் கேள்வியை தைரியமாக எழுப்புவார்.. டெல்லி வரை செல்வாக்கு உள்ளவர்!

Will BJP Senior Leader H Raja go to RS as MP

ஆனால், சமீபத்தில் இவருக்கு எந்த பொறுப்பும் இதுவரை வழங்கப்படவில்லை.. 70 பேர் தேசிய நிர்வாகிகளாக நியமனம் நடந்தும்கூட, அதில் எச்.ராஜா பெயர் இல்லாதது அதிர்ச்சியாக பார்க்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, நேற்று வந்த அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்புகளை தந்துள்ளபோது, எச்.ராஜா முதல் குஷ்பு வரை உள்ள சீனியர்களுக்கும், அனுபவஸ்தவர்களுக்கும் இதுவரை பொறுப்பு தராததும் கேள்வியை எழுப்பி வருகிறது.

இந்த சமயத்தில்தான் ஒரு தகவல் கசிந்தது.. விரைவில் அமைச்சரவை மாறுதல் பற்றிய அறிவிப்பும் வெளியாகலாம் அல்லது ஏதாவது ஒரு மாநில ஆளுநர் பதவி கூட எச்.ராஜாவுக்கு வழங்கப்படலாம் என்று சொல்லப்பட்டது.

அதற்கேற்றார்போல் எச்.ராஜாவும் சமீபகாலமாகவே சைலண்ட்டாக இருக்கிறார்.. காரணம், மத்திய அமைச்சராக முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம்.. பெரிதாக எந்த விஷயத்துக்கும் சர்ச்சையான கருத்தும் சொல்வது இல்லையாம்... (ஆனால், திருமா பிரச்சனை என்றதுமே வேறு வழியில்லாமல் கொந்தளித்து விட்டது வேறு விஷயம்)

உத்திரப்பிரதேசத்தில் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்க உள்ளதால், அதில், 8 பாஜக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கிறதாம்.. அதில் ஒருவராக போட்டியிட்டு.. அதற்கு பிறகு மத்திய அமைச்சர் பதவியை அடையலாம் என்பதே எச்.ராஜாவின் பிளான்.. ஆனால், இதற்கு தமிழக பாஜகவில் உள்ள மற்ற மூத்த தலைவர்கள் எதிர்ப்பு குரலை டெல்லி உயர்த்தி வருகின்றனர்.

குகைக்குள் உல்லாசம்.. கழுத்தில் கிடந்த துண்டை இழுத்து போட்டு.. வெலவெலத்து போன வேலூர்..!குகைக்குள் உல்லாசம்.. கழுத்தில் கிடந்த துண்டை இழுத்து போட்டு.. வெலவெலத்து போன வேலூர்..!

இதனிடையே இன்னொரு தகவலும் கசிந்துள்ளது.. உத்திரப்பிரதேச முதல்வரான யோகி, சர்ச்சைக்குரிய ஒருவரை எங்கள் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்பமாட்டோம் என்று தெரிவித்துள்ளாராம்.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

ஆனால், வரப்போகும் தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்தவும், அதன் வாக்கு வங்கியை உடைக்கவும், எச்.ராஜா போன்றோர் தான் சரியாக இருக்கும் என்று பாஜக மேலிடம் ஆரம்பத்தில் இருந்தே நம்பிக்கை வைத்துள்ளது.. அதனால், நிச்சயம் ராஜாவை டெல்லி கைவிட்டுவிடாது என்று உறுதியாக கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்!

English summary
Will BJP Senior Leader H Raja go to RS as MP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X