சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

4 தொகுதி இடைத்தேர்தல்.. ராமதாஸ், விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய வருவார்களா.. காத்திருக்கும் அதிமுக

அதிமுகவுக்காக கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் செய்யாதது ஏன் என தெரியவில்லை.

Google Oneindia Tamil News

சென்னை: இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வருவார்களா மாட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஊருக்கு முன்னாடி முதல் ஆளாக போய் அதிமுக கூட்டணியில் சேர்ந்தது பாமகதான். ஆனால் தைலாபுர தோட்டத்தில் விருந்து முடிந்தவுடனேயே சீட் விவகாரம் எழ ஆரம்பித்தது.

அப்போது அதிமுக-பாமக இடையே இருந்த நெருக்கம் குறைந்தது.. பிறகு பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு.. தேர்தலும் முடிந்துவிட்டது.

திசை மாறிய காற்று.. சூப்பர் சான்ஸ்.. டிடிவி தினகரனுக்கு இதை விட்டா நல்ல ஒரு வாய்ப்பு கிடைக்காது! திசை மாறிய காற்று.. சூப்பர் சான்ஸ்.. டிடிவி தினகரனுக்கு இதை விட்டா நல்ல ஒரு வாய்ப்பு கிடைக்காது!

ராமதாஸ்

ராமதாஸ்

எல்லாரையும் விடவும் முதல் நபராய் கூட்டணியில் சேர்ந்த பாமக தற்போது வரை 4 தொகுதி இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய போகிறதா என இதுவரை தெரியவில்லை. ஆனால் கடைசியாக கூட்டணியில் வந்த தேமுதிக, அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்வதாக முதலிலேயே அறிவித்துள்ளது.

கூட்டணி தர்மம்

கூட்டணி தர்மம்

எப்படியும் 4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்காக அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆதரவு தருவதாக ஏற்கனவே சொல்லி விட்டார்கள். இது கூட்டணி தர்மம் என்று எடுத்து கொண்டாலும், பிரச்சாரம் என்பதை வெளிப்படையாக சொல்லவில்லை.

விமர்சனம்

விமர்சனம்

2 நாளாக தமிழிசை சவுந்தராஜனும் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். ஸ்டாலினை விமர்சனம் செய்து வருகிறாரே தவிர, அவர்கூட பிரச்சாரம் செய்வது குறித்து சொல்லவில்லை. வாசன் நிலைப்பாடும் தெரியவில்லை. ஏசி சண்முகம் நிலை ஏற்கனவே பரிதாபம்!

சூலூர்

சூலூர்

ஸ்டாலின் ஒட்டப்பிடாரத்திலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூலூரிலும் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர்.அதிமுக சார்பிலோ, பிரச்சாரம் செய்ய போகும் நட்சத்திர பேச்சாளர்கள் என லிஸ்ட் வெளிவந்துள்ளது. அதில், ஓபிஎஸ், ஈபிஎஸ், அமைச்சர்கள் முதல் விந்தியா வரை கிட்டத்தட்ட 40 பேர் இருக்கிறார்கள். ஆனால் கூட்டணி கட்சித் தலைவர்களின் பெயர்கள் எதுவும் இடம் பெறவில்லை.

பிரச்சாரம்

பிரச்சாரம்

ஒருவேளை கூட்டணி கட்சியினர் அதிமுகவுக்காக பிரச்சாரத்துக்கு வர விருப்பமில்லையா அல்லது இன்னும் 15 நாள் இருப்பதால், இனிமேல்தான் இது பற்றி முடிவு எடுத்து அறிவிப்பார்களா அல்லது பிரச்சாரம் சம்பந்தமாக கூட்டணி கட்சியினரை அதிமுக கண்டுகொள்ளவில்லையா என தெரியவில்லை.

குழப்பம்

குழப்பம்


இவர்கள் எல்லாம் கம்மென்று இருப்பதைப் பார்த்தால் நான்கு தொகுதி இடைத் தேர்தல் நடக்குமா அல்லது ஏதாவது ஒரு வகையில் தள்ளிப் போய் விடுமா என்ற குழப்பமும் வருகிறது.

பார்ப்போம்.. இன்னும் 15 நாள் இருக்கு!

English summary
Will PMK, BJP campaign for AIADMK in 4 constituencies by election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X