சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளைக்கு இருக்கு.. செம அறிவிப்பு.. தயாராகும் முதல்வர்.. ஆனால் "அவர்" முன்கூட்டியே ஊகித்து விட்டாரா!!

கல்வி கடனை எடப்பாடி பழனிசாமி ரத்து செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: அவர் சொல்லிதான் இவர் செய்கிறாரா? இவர் செய்வதைதான் அவர் சொல்கிறாரா? என்ற வழக்கமான கேள்வி இன்றும் சோஷியல் மீடியாவில் கிளம்பி உள்ளது... திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அடுத்தடுத்த அதிரடிகளை வைத்தே இத்தகைய அனல் கக்கும் விவாதங்கள் எழுந்து வருகின்றன.

இன்றைக்கு விழுப்புரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.. அப்போது, "திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்" என்ற வாக்குறுதியை தந்துள்ளார். இதுதான் தற்போது பேசுபொருளாகவும், எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது.

இதற்கு காரணம், ஏற்கனவே 2 மாசத்துக்கு முன்பு இதே விஷயத்தைதான் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.. கல்விக் கடன் ரத்து என்ற வாக்குறுதியை தன்னுடைய மக்கள் கிராம சபை கூட்டத்தில்தான் அளித்திருந்தார்.. அப்போதே இந்த அறிவிப்பு பெரிதும் கவனிக்கப்பட்டது மாணவர்களால் ஈர்க்கப்பட்டது.. !

 மாணவர்கள்

மாணவர்கள்

ஏனென்றால், தமிழகத்தில் அரசுத் துறை வங்கிகள்தான் கல்வி கடன்களை வழங்கி வருகின்றன... இந்த வங்கி கடன்கள்தான் பலரின் கல்விக் கனவுகளுக்கு ஊன்றுகோலாக இப்போது வரை இருந்து வருகின்றனது.. இன்னும் சொல்லப்போனால், இப்படி ஒரு ஆப்ஷன் இருப்பதால்தான் நிறைய மாணவர்களுக்கு படிக்கும் உந்துதலே ஏற்படுகிறது.

லோன்

லோன்

அதேசமயம், படித்து முடித்துவிட்டு வந்து இந்த லோனை மாணவர்கள் படாத பாடு படுவார்கள்.. இந்த லோனை வாங்குவதற்கும் சிரமம்தான்.. இதைத்தான் ரத்து செய்வதாக முக ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.. எப்படியும் ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசுடன் பேசி கடன்களை ரத்து செய்ய ஏதாவது முயற்சி செய்யலாம் என்பதை மனதில் வைத்தே ஸ்டாலின் இப்படி அறிவித்திருக்கலாம் என்று தெரிகிறது.

அறிவிப்பு

அறிவிப்பு

உண்மையை சொல்லபோனால், இந்த அறிவிப்பை ஸ்டாலின் சொல்வற்கு முன்பேயே அதிமுக அரசுதான் அறிவித்திருக்க வேண்டும்... ஸ்டாலின் முந்தி கொண்டார்.. இன்றும் இதே அறிவிப்பை ஸ்டாலின் அறிவிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை.. தன் வாக்குறுதியில் உறுதியாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்கவே இப்படி சொன்னாரா? அல்லது வேறு காரணமா என்று தெரியவில்லை.

 விவாதங்கள்

விவாதங்கள்

சமீப காலமாகவே ஒரு சலசலப்பு அரசியல் வட்டாரத்தில் உள்ளது... ஸ்டாலின் சொன்னதைதான் எடப்பாடியார் அறிவிப்பாக செய்து வருகிறார் என்கிறது ஒரு தரப்பு.. இல்லை, இல்லை, நாங்கள் அறிவித்ததைதான் ஸ்டாலின் சொல்லி கொண்டு இருக்கிறார் என்கிறது வேறு ஒரு தரப்பு... இன்னும் விவசாய லோன் ரத்து தொடர்பான விவாதங்களும் ஓயவில்லை.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இப்படிப்பட்ட சூழலில்தான், நாளை சட்டமன்றம் கூடுகிறது.. 110 விதியின் கீழ் புத்தம் புதிய அறிவிப்புகளை முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஆனால் வழக்கம்போலவே முதல்வர் என்ன அறிவிப்பு என்பதை சஸ்பென்சாக வைத்திருப்பார் என்று தெரிகிறது.. அந்த சஸ்பென்ஸ் அறிவிப்பில், ஒருவேளை கல்வி கடன் ரத்து இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது..

மாணவர்கள்

மாணவர்கள்

அது தெரிந்துதான் ஸ்டாலினும் இதை முன்னதாகவே இன்றைய தினம் கல்வி கடன் குறித்து உறுதி தந்திருக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது. அப்படி அறிவிப்பு வெளியானால், அதற்கும் ஒரு விவாதம் சோஷியல் மீடியாவில் காத்திருக்கிறது.. ஆனால் ஒன்று, இந்த அறிவிப்பு மட்டும் நாளை வெளியானால், நிச்சயம் அது மாணவர்கள் வயிற்றில் பாலை வார்ப்பது நிச்சயம்.. பார்ப்போம்..!

English summary
Will CM Edapadi Palanisamy cancel the Students education loan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X