சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சண்டையா? சமாதானமா?".. சசிகலா கவுன்ட்டிங் ஸ்டார்ட்ஸ்.. என்னதான் நடக்கிறது அதிமுகவில்?

சசிகலாவுடன் முதல்வர் இணக்கமாக செல்ல வாய்ப்பு உள்ளதா

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா என்ற பேச்சை எடுத்தாலே தவிர்த்து வந்தார் முதல்வர் எடப்பாடியார்.. ஆனால் சசிகலா விடுதலை நெருங்கும் சமயம், தன்னுடைய நிலைப்பாட்டை முதல்வர் விலக்கி கொண்டுள்ளாரோ என்ற சந்தேகம் மெல்லமாக எழுந்து வருகிறது.

சசிகலா சிறைக்கு செல்லும்போது, எடப்பாடியாரிடமே பொறுப்பை தந்து சென்றார் என்றால், அதற்கு காரணம் எடப்பாடியாரின் விசுவாசம்தான்.. அதனால்தான் பொறுப்பேற்கும்போதுகூட, சசிகலா முன்பு அவர் சேரில் உட்கார கூட இல்லை.. அந்த அளவுக்கு விசுவாசமாக நடந்து கொண்டார்.

இதற்கு பிறகு, சசிகலா பேச்சையே எடப்பாடியார் தவிர்த்து வந்தார்.. செய்தியாளர்கள் அவரை பற்றி எந்த கேள்வி கேட்டாலும் அதற்கும் பதில் சொல்லாமல் தவிர்த்தார்.. ஆனால், அமமுகவில் இருந்து அந்த 2 பேர் தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய் கட்சியில் இணையலாம் என்று அழைப்பு விடுத்தபடியே இருந்தார்.

பிரார்த்தனை

பிரார்த்தனை

ஆனால், ஓஎஸ் மணியன், திண்டுக்கல் சீனிவாசன், வைத்திலிங்கம், போன்றோர் பகிரங்கமாகவே சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் போலவே பேசி வந்தனர்.. அதிலும் செல்லூர் ராஜு, அவர் சிறையில் இருந்து வருவதற்கு வேண்டி கொள்வதாக ஓபனாகவே சொன்னார். எனினும், சசிகலா தரப்புடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது என்று முதல்வர் சொல்லி இருந்த நிலையில்தான் இவ்வளவும் நடந்து வந்தது.

முதல்வர் வேட்பாளர்

முதல்வர் வேட்பாளர்

இந்த சமயத்தில்தான் சசிகலா விடுதலை பற்றின பேச்சு அதிகமானது..அதனால் அவர் வெளியே வந்தால் என்ன மாதிரியான அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்ற விவாதம் அதிமுக மேல்மட்டத்தில் தொடங்கின.. அதிலி ஒருபகுதியாகத்தான், முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் நிகழ்ந்து முடிந்தது..

அரசியல்

அரசியல்

இப்போது, சசிகலா விடுதலை நெருங்கி வருகிறது.. விடுதலையாகி வந்தால், எடப்பாடி பழனிசாமி அதை எப்படி எதிர்கொள்வார்? வெளியில் இருந்து வருபவர் எந்தெந்த அமைச்சர்களை சந்தித்து பேச போகிறார்? என்ன மாதிரியான அரசியலை கையில் எடுக்க போகிறார்? அதிமுக பொதுச் செயலாளர் பதவியை மறுபடியும் உரிமை கோருவாரா? அப்படி கோரினால், முதல்வர் என்ன மாதிரியாக அதை அணுகுவார் என்றெல்லாம் தெரியவில்லை.

விமர்சனம்

விமர்சனம்

ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் முதல்வர் தெளிவாகவே இருக்கிறார்.. தன்னை முதல்வராக்கியது எம்எல்ஏக்கள் தான் என்று சொல்லி வந்த நிலையில், சசிகலா பெயரை முதல்வர் சொன்னதே கிடையாது என்றாலும், எந்த காரணத்தை கொண்டும் சசிகலாவை விமர்சிக்ககூடாது என்பதில் உறுதியாக இரக்கிறார். தவறாக ஒரு வார்த்தையும் பேசியது கிடையாது.

சந்தேகங்கள்

சந்தேகங்கள்

மற்றொரு விஷயம், முதல்வரின் அம்மா மறைவுக்கு சசிகலாவின் சகோதரர் மகன் ஜெய் ஆனந்த் நேரில் சென்று ஆறுதல் சொல்லி உள்ள நிகழ்வு பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.. சசிகலா குடும்பத்துடன் எந்த உறவும் பாராட்டக்கூடாது என்று அமைச்சர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது.

சமாதானமா?

சமாதானமா?

அதனால்தான், சசிகலாவின் கணவர் நடராஜனின் இறப்புக்கும், வெற்றிவேலின் இறப்புக்கும்கூட அதிமுகவினர் செல்லவில்லை.. அந்த அளவுக்கு முதல்வரின் பேச்சுக்கு கட்டுப்பட்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மட்டும் சசிகலா குடும்பத்துடன் நட்பு பாராட்டுவதா என்ற சலசலப்பும் எழுந்துள்ளது. இதையடுத்துதான் முதல்வர் சசிகலாவிடம் சமாதானம் ஆவாரா? அல்லது சரண் அடைவாரா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது!

English summary
Will CM Edappadi Palanisamy go soft on Sasikala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X