• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ம்ஹூம்.. ஸ்டாலினிடம் எடுபடாத "வெள்ளை கொடி".. ஒரே கல்லில் 2 மாங்காய்.. இதுதான் திமுக...!

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டாலின் ஏதோ ஒப்புக்கு சொல்கிறார் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.. நிஜமாகவே ஆக்‌ஷனில் இறங்கிவிட்டதால், அதிமுக மாஜிக்கள் வெலவெலத்து போயுள்ளனராம்..!
தேர்தல் பிரச்சாரங்களில் முக ஸ்டாலின், குறிப்பிட்ட 5 தொகுதிகளில் மட்டும் டைம் எடுத்து பேசினார்.. அந்த திமுகவுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று அப்போது அவர் கேட்கவும் இல்லை.. அந்த 5 தொகுதிகளும் மாஜிக்களின் தொகுதிகள்... பேசியது முழுக்க மாஜிக்களின் ஊழல் பற்றிதான்.

"திமுக ஆட்சி அமையட்டும், ஊழல் ஃபைல்களை தூசி தட்டி எடுக்கப்படும், என் முதல் வேலையை இவங்களை உள்ளே தள்ளுவதுதான்" என்று சொன்னார்.. ஏதோ ஓட்டுக்காக ஸ்டாலின் இப்படி சொல்கிறார் அதிமுக கூடாரம் நினைத்துவிட்டது.

மேகதாது அணை திட்டத்தை கைவிடுவதா?.. அந்த பேச்சுக்கே இடமில்லை.. ஸ்டாலினுக்கு எடியூரப்பா பதில் கடிதம்மேகதாது அணை திட்டத்தை கைவிடுவதா?.. அந்த பேச்சுக்கே இடமில்லை.. ஸ்டாலினுக்கு எடியூரப்பா பதில் கடிதம்

 விசாரணை

விசாரணை

ஆனால், ஊழல் புகார்களை விசாரிப்பதற்காகவே டீமை இறக்கவும்தான் அவர்களுக்கு கலக்கம் சூழ்ந்துவிட்டது.. சேலம், கோவை, புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை போன்ற தொகுதிகளின் பிரச்சாரங்களில் ஸ்டாலின் என்ன பேசினோரோ, அவைகள்தான் தற்போது நடைமுறைக்கு வர உள்ளது.. அந்த வகையில், 2 விஷயங்கள் தற்போது பரபரத்து வருகின்றன.. ஊழல் லிஸ்ட் நடவடிக்கையில், ராஜேந்திர பாலாஜியின் பெயர்தான் முதலில் உள்ளதாம்.

 முறைகேடுகள்

முறைகேடுகள்

கடந்த ஆட்சியில் பால்வளத்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, துறை அமைச்சர் நாசர் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறார்... அப்படியே அரண்டு போயிருக்கிறாராம் ராஜேந்திர பாலாஜி.. திமுக ஆட்சி அமைந்ததுமே, "கொரோனா தடுப்பில் ஸ்டாலின் நன்றாக செயல்படுகிறார்" என்று ராஜேந்திர பாலாஜி லேசாக வெள்ளை கொடியை காட்டியும் அதை திமுக கண்டுகொள்ளவே இல்லை.

 வெள்ளைக்கொடி

வெள்ளைக்கொடி

இப்போது நாம்தான் முதல் குறி என்பதால், "விவரம் தெரியாம ஏதேதோ பேசிட்டேன்... அதையெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க" என்ற திமுகவுக்கு தூது விட்டுள்ளார்.. ஆனால், 2வது முறையாகவும் ராஜேந்திர பாலாஜியின் வெள்ளைக்கொடிக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது..

 கோட்டை

கோட்டை

அதுமட்டுமல்ல, மாவட்ட வாரியாக பால் கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற முறைகேடு கோப்புகள் கோட்டையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றனவாம். அதிலும், நெல்லை, மதுரை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் நடந்த ஊழல்களைத் தூசுதட்டி வருவதால், சம்பந்தப்பட்டவர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

 மாஜிக்கள்

மாஜிக்கள்

இன்னொரு விஷயமும் கசிந்து வருகிறது.. மாஜிக்கள் பலரும் திமுக பக்கம் பார்வையை திசைதிருப்பி வருகின்றனர்.. அந்த வகையில், தோப்பு வெங்கடாசலமும் இப்போது திமுக பக்கம் வர உள்ளார்.. அதற்கான முன்னெடுப்புகளை செந்தில் பாலாஜிதான் செய்து வருகிறார் என்பது தெரிந்த விஷயம்தான்.. ஆனால், தோப்பு இன்னும் திமுகவில் இணைவதற்கு முன்பேயே, அதிமுகவில் இருக்கும் பலருடன், திமுகவுக்கு போனால்தான் கெத்து என்பதால், ஆள்பிடிக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளாராம்..

 தோப்பு வெங்கடாசலம்

தோப்பு வெங்கடாசலம்

அதாவது, தனியாக இணைவதுடன், கூண்டோடு வந்து இணையும் முயற்சியில்தான் ஈடுபட்டுள்ளாராம்.. ஒருவேளை தோப்பு வெங்கடாசலம் மட்டும் தனியாக இணைந்தாலும், அடுத்த சில தினங்களில் முக்கிய புள்ளிகளையும் திமுகவில் கொண்டு வந்து இணைக்கும் பணியையும் செய்துவிடுவார் என்கிறார்கள்.. ஆக, மாஜிக்கள் மீதான நடவடிக்கை + மாஜிக்கள் திமுகவில் இணைவது என்ற ஒரே கல்லில் 2 மாங்காய்களுடன் முதல்வர் ஸ்டாலினின் தற்போதைய அரசியல் நகர்கிறது.. பார்ப்போம்..!

English summary
Will CM MK Stalin take action against Ex Minister Rajendra balaji
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X