சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விக்கிரவாண்டியில் யார்.. அதிமுகவுக்குள் கடும் போட்டா போட்டி.. கடைசியில் இவருக்கு கிடைக்குமோ!

விக்கிரவாண்டியின் அதிமுக வேட்பாளர் யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    TN By-election : நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல்: அதிமுக சார்பில் களமிறங்கப்போவது யார்

    சென்னை: பாமகவின் பெல்ட்டில் உள்ள.. விக்கிரவாண்டி தொகுதி தேர்தலில் யார் சீட்டை வாங்குவது என்பதில் அதிமுகவுக்குள் கடும் போட்டி எழுந்துள்ளது.

    விழுப்புரத்தில் செல்வாக்கு பெற்றவர் முன்னாள் எம்பி லட்சுமணன். ஓபிஎஸ் அணியில் இணைந்து அதிமுகவை உடைத்ததில் பெரும் பங்கு இவருக்கு உள்ளது. அதாவது ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர்தான் முன்னாள் எம்பி லட்சுமணன்.

    Will CV Shanmugams brother contest in Vikravandi by election

    போன முறை எம்பி தேர்தலிலேயே இவர் சீட் கேட்டிருந்தார். ஆனால் அது கிடைக்காமல் போகவும் இந்த முறை எப்படியாவது இடைத்தேர்தலில் ஆவது போட்டியிட வேண்டும் என்று விருப்பமாக இருக்கிறார்.

    மற்றொரு புறம் அமைச்சர் சிவி சண்முகம், தன்னுடைய அண்ணன் ராதாகிருஷ்ணனை இங்கு நிறுத்த வெகு ஆர்வமாக இருக்கிறார். விழுப்புரத்தில் தனி கெத்துடன் திகழ்பவர் சிவி சண்முகம். திமுக எம்எல்ஏ மறைந்த உடனேயே, இங்கு எப்படியும் தன் அண்ணனைதான் நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான பூத் ஏஜென்ட் கவனிப்பு வேலைகளிலும் அப்போதே ஈடுபட்டதாக சொல்லப்பட்டது.

    தங்களுடைய செல்வாக்கு இங்கு நிறைந்து கிடப்பதால், பாமக இந்த தொகுதியை கேட்டும், சிவி சண்முகம் அதற்கு இடம் கொடுக்கவில்லையாம். இப்போதுவரை தன் அண்ணனுக்காகவே இவர் சீட் கேட்டு வருகிறார். ஆனால் இடைத்தேர்தலில் நிற்க ராதாகிருஷ்ணனுக்கு விருப்பம் இல்லை என்றும் சொல்கிறார்கள்.

    மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு...கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வலியுறுத்தல்மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு...கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வலியுறுத்தல்

    அவருடைய மகனுக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டு, சிகிச்சையில் இருப்பதால், தேர்தலில் ராதாகிருஷ்ணன் அவ்வளவாக ஆர்வம் காட்டப்படவில்லை என்றும் தகவல்கள் கசிந்து வருகின்றன. ஆனாலும் வேட்பாளர் யார் என்பதை நிர்ணயம் செய்வதில் பெரும்பங்கு சிவி சண்முகத்துக்கு இருப்பதாக தெரிகிறது.

    ஆனால் எது எப்படி இருந்தாலும்சரி, யார் அதிமுக சார்பில் போட்டியிட்டாலும் சரி.. விக்கிரவாண்டி பாமகவின் பெல்ட்டில் உள்ளது என்பதால், எப்படியும் இதனை வளைத்து போட்டுவிடலாம் என்று பலமாக நம்புகிறது அதிமுக!

    English summary
    There is a tough competition between CV Shanmugams brother and EX Minister Lakshmanan in Vikiravandi Constituency by election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X