சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்!

தேமுதிக கூட்டணியில் இழுபறி ஏற்பட்டு வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: போற போக்கை பார்த்தால், அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாத நிலைமைதான் தேமுதிகவுக்கு ஏற்பட்டுவிடும் போல தெரிகிறது.. கூட்டணியில் இழுபறி நீடித்து கொண்டே இருக்கிறது..!

விஜயகாந்த் நன்றாக இருந்தவரை, ஒரு கிரேஸ், ஒரு மாஸ், தேமுதிகவுக்கு இருந்து கொண்டே இருந்தது.. அதிமுகவுக்கு மாற்றாக சொந்தமாக ஒரு கட்சியை விஜயகாந்த் தொடங்கினாலும், என்னதான விஜயகாந்த்துடன் முரண்பாடு இருந்தாலும்,தேமுதிகவுக்கு வரும் கூட்டங்களை ஜெயலலிதா உன்னிப்பாக கவனித்து வந்தார்.. ஒருகட்டத்தில், விஜயகாந்த்தை அழைத்து பேசி, கூட்டணி வைத்தும் வெற்றி பெற வைத்தார்.

ஆனால், எப்போது விஜயகாந்துக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டதோ அதோடு சரி, கீழே விழுந்து கிடக்கும் தேமுதிகவை செங்குத்தாக தூக்கி நிறுத்த ஒருத்தரும் அந்த கட்சியில் இல்லை.. இப்போது வெறும் 2 சதவீத ஓட்டுக்களை அக்கட்சி வைத்துள்ளது.. அத்துடன் விஜயகாந்த்தால் முன்னாடி மாதிரி பிரச்சாரம் செய்யவும் முடியாத நிலை உள்ளது.

அதிமுக

அதிமுக

இந்நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கிவிட்ட நிலையில்,
தேமுதிக மட்டும் இன்னும் பேச்சுவார்த்தையில் இறங்கவில்லை.. தங்களுக்கு 41 சீட் வேண்டும், இல்லாவிட்டால் தனித்து போட்டி என்று பிரேமலதா சொல்லி பல மாசம் ஆகிறது.. சீட் பேரத்துக்காக இப்படி சொன்னாரா என்று தெரியவில்லை.. அதிமுக இப்போதுவரை தேமுதிகவை அழைத்து பேசவில்லை.

 சசிகலா

சசிகலா

அதுமட்டுமல்ல, இன்னும் ரிலீஸ் ஆகாத சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து பிரேமலதா பேசிய பேச்சு, அதிமுக தலைமைக்கு இன்னும் கடுப்பை தந்துள்ளதாக சொல்கிறார்கள்.. இதைதவிர, திமுகவுடன் தேமுதிக மறைமுக பேச்சுவார்த்தை என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன.. இப்படி அடுத்தடுத்த விவகாரங்களில் தேமுதிக செயல்பட்டு வருவதாலோ என்னவோ அதிமுக, இப்போதுவரை தேமுதிகவை கூட்டணியில் இணைத்து கொள்ள பேச்சை தொடங்காமல் உள்ளது..

தொகுதி

தொகுதி

இந்நிலையில்தான், பிரேமலதா அதை வெளிப்படையாகவே சொல்லி உள்ளார்.. "யாருக்கு எவ்வளவு தொகுதி என்பதை கூட்டணிக்கான தலைமை பேச வேண்டும்... தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால்தான் பேச்சுவார்த்தை என்று சொல்வது, தாமதத்திற்கு வழிவகுத்துவிடும்.. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க அதிமுக காலதாமதம் செய்கிறது என்று ஓபனாகவே சொல்லிவிட்டார்.

சிக்கல்

சிக்கல்

இப்போது சிக்கல் என்னவென்றால், 30 சீட்டுக்களை தர திமுகவும் சரி, அதிமுகவும் சரி, இருவருமே தயாராக இல்லை.. அதிகபட்சம் 10 சீட் தரலாம் என்ற முடிவில் அவை இருக்கின்றனவாம்.. இப்படி அதிமுக, திமுக கூட்டணிகளில் தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாததால், பொதுக்குழுவை கூட்ட முடியாமல், தேமுதிக உள்ளது.

 பொதுக்குழு

பொதுக்குழு

இந்த பொதுக்குழுவை பொங்கலுக்கு முன்பே நடத்தியிருக்க வேண்டியது.. ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தைக்காகவே தள்ளி போடப்பட்டு வருகிறது.. இப்போதுகூட, தேமுதிகவின் முடிவை பொதுக்குழு கூட்டம் அறிவிப்போம் என்று பிரேமலதா சொல்லி வருகிறாரே தவிர, பொதுக்குழு எப்போது கூட்டப்படும் என்று தெரியவில்லை.. இதனால் தேமுதிக நிர்வாகிகளும் கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது..!

English summary
Will DMDK contest alone in Assembly Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X