சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓஹோ.. இது வேறயா.. "அவங்களும்" நூல் விடறாங்களாமே.. பிரேமலதாவும் கெத்து காட்டுறாரே.. அப்படீன்னா!

திமுகவுடன் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை.

Google Oneindia Tamil News

சென்னை: பரபரப்பான ஆனால் உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று படுவேகமாக கசிந்து வருகிறது.. அது தேமுதிகவின் கூட்டணி விவகாரம் சம்பந்தப்பட்டதுதான்..!

தேமுதிகவை பொறுத்தவரை எல்லாமே விஜயகாந்த்தான்.. அந்த கட்சியை உருவாக்க அவர் பட்ட பாடும், உழைத்த உழைப்பும் கொஞ்ச நஞ்சமல்ல.. இப்படி ஒரு கட்சி இன்றைக்கும் உச்சரிக்க காரணம் விஜயகாந்த் என்ற ஒற்றை நபர்தான்..!

ஆனால், அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனதில் இருந்தே, அந்த கட்சி அப்படியே தரைமட்டமாக படுத்துவிட்டது.. இப்போதைக்கு வெறும் 2 சதவீதம் வாக்குகளைதான் கையில் வைத்துள்ளது... இதை வைத்து கொண்டுதான், கடந்த எம்பி தேர்தலில் மாறி மாறி கூட்டணி பேசி, கடைசியில் சந்தி சிரிக்கும் அளவுக்கு போய்விட்டது.

 வாக்கு சதவீதம்

வாக்கு சதவீதம்

2 சதவீத ஓட்டு வங்கியை வைத்து, பாமகவுக்கு இணையாக, அல்லது அதற்கு ஒருபடி மேலே போய் சீட் தர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததையும் கடந்த எம்பி தேர்தலின்போது இந்த தமிழகமே கண்ணால் கண்டது.. ஆனால், இப்போது தேர்தல் சூடு பிடித்து வரும் நிலையில், ஒரு சத்தமும் இல்லாமல் தேமுதிக உள்ளது.. இந்த செகண்ட் வரை அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று பிரேமலதா உறுதியாக சொல்லிவிட்டாலும், பேச்சுவார்த்தைகள் இன்னும் முறைப்படி தொடங்கப்படவில்லை..

 விருகம்பாக்கம்

விருகம்பாக்கம்

சீட் ஒதுக்கீடு, தொகுதி விவகாரம் பற்றியும் தெரியவில்லை.. ஆனால், விருகம்பாக்கம் தொகுதியை மட்டும் விஜயகாந்த்துக்காக கேட்பதாக தெரிகிறது.. அதேபோல, மணப்பாறையை கேட்க போகிறோம் என்று சுதீஷூம் ஒருமுறை சொல்லி இருந்தார்.. மற்றபடி வேறு விஷயங்கள் வெளிவரவில்லை.

 திமுக

திமுக

இப்போது ஒரு தகவல் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. அதன்படி, தேமுதிகவை திமுக தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாம்.. இதற்கு காரணம் அதிமுகவுடன் அமுமக இணைந்தால் அறுதிபெரும்பான்மை அக்கட்சி கிடைக்ககூடும், அத்துடன் திமுகவின் வாக்குவங்கி குறையவும் சான்ஸ் இருக்கும் என்பதால், முடிந்தவரை தங்களுக்கு இணக்கமான கட்சிகளை கூட்டணியில் இணைக்க திமுக யோசித்து வருகிறதாம்.. அந்த வகையில், தேமுதிக மீதும் கவனம் திரும்பி உள்ளது.

 ஸ்டாலின்

ஸ்டாலின்

எப்போதுமே விஜயகாந்த்தை கட்சி வேறுபாடின்றி எல்லா தலைவர்களுக்குமே பிடிக்கும்.. அந்த வகையில் மோடிக்கு விஜயகாந்த் மீது தனி பாசம் உண்டு.. அதுபோலவே ஸ்டாலினுக்கும் பிடிக்கும், கமலுக்கும் பிடிக்கும்.. அரசியலுக்கும் அப்பாற்பட்டு விரும்பப்படுவர் விஜயகாந்த்.. கடந்த எம்பி தேர்தலின்போதுகூட, கூட்டணி விஷயம் சூடு பிடித்த நேரத்தில், ஸ்டாலின் விருகம்பாக்கம் வீட்டுக்கு சென்று விஜயகாந்த்தை சந்தித்து பேசிவிட்டு வந்தார்.. அந்த வகையில் நட்புக்குரியவருடன் இந்த முறை கூட்டணி வைக்க யோசனை நடக்கிறதாம்.

 கூட்டணி

கூட்டணி

ஆனால், இந்த விஷயம் சுதீஷ் மூலம், பிரேமலதாவிற்கு தெரியவந்தாலும் உடனடியாக சம்மதிக்கவில்லை போல தெரிகிறது.. அதற்கு காரணம், கடந்த முறை கூட்டணி பேச அழைத்துவிட்டு, தங்களை சிக்க வைத்ததுபோல இந்த முறையும் ஏதாவது நடந்துவிடுமோ என்ற கலக்கம் உள்ளதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, பாஜகவின் ஆதரவை எந்த காரணம் கொண்டும் விட்டுவிட கூடாது என்றும் பிரேமலதா நினைக்கிறாராம்.. ஏனென்றால், இவர்களை கூட்டணியில் சேர்த்து கொள்ளவே முடியாது என்று அதிமுக தலைமை கடந்த முறை சொன்னபோது, பாஜகதான் கூட்டணியில் சேர்க்க முயற்சி எடுத்தது..

 பிரேமலதா

பிரேமலதா

அதுமட்டுமல்ல, கூட்டணியிலேயே இருந்தால், எப்படியும் மாநிலங்களவை எம்பி பதவியை இந்த முறையாவது வாங்கிவிடலாம், ராஜ்ய சபா சீட் கிடைத்தால் நிச்சயம் மத்திய அமைச்சராகவும் வாய்ப்பு கிடைக்கும் என்று பிரேமலதா யோசிக்கிறாராம்.. இதெல்லாம் திமுக பக்கம் சாய்ந்தால் கிடைக்காது, வேண்டுமானால் எம்எல்ஏக்கள் மட்டுமே கிடைப்பார்கள் என்றும் தயக்கம் காட்டுகிறாராம் பிரேமலதா!

தாமதம்

தாமதம்

இதெல்லாம் உண்மையா என்று தெரியவில்லை.. ஆனால், சட்டுபுட்டுனு ஒரு முடிவு எடுத்து ஏதாவது ஒரு கூட்டணியுடன் இணைவதே தேமுதிகவுக்கு உடனடி நல்லது.. லேட் செய்ய செய்ய அக்கட்சிக்குதான் சறுக்கல் கிடைக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!

English summary
Will DMDK join in DMK Alliance in Assembly Election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X