• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அறிவாலயத்துக்கு "சிக்னல்".. பாஜக கற்றுக் கொடுத்த பாடம்.. "அந்த" கட்சிக்கு விரைவில் ஆப்பு?.. பரபரப்பு

|

சென்னை: பீகார் தேர்தல் பல விஷயங்களை தமிழகத்துக்கு எடுத்து சொல்லி உள்ளது.. தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள ஜாம்பவான் பிராந்திய கட்சிகளுக்கும் இந்தப் பாடம் பொருந்தி வரும். அது காங்கிரஸ் கட்சியை எப்படி டீல் செய் வேண்டும் என்பதுதான்.

ஒரு காலத்தில் ஓஹோவென்று வாழ்ந்த காங்கிரஸ் கட்சியை ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்தியக் கட்சிகள் கழற்றி விடும் காலம் நெருங்கி வருகிறது என்பதுதான் இந்த அதிர்ச்சி தரும் பாடம்... இதற்கான காரணமும் சாட்சாத் காங்கிரஸேதான்!

நேற்று குஷ்பு ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தேர்தல் முடிவுகளும் காலையில் இருந்தே வெளியாகி கொண்டிருந்தது.. அப்போது, ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் மெகா கூட்டணி, பிறகு திடீரென பின்தங்கிவிட்டது.

குஷ்பு

குஷ்பு

இதையடுத்து பாஜக கூட்டணி வேகம் எடுத்து முன்னேறி சென்றது. அப்போது குஷ்பு, "வருகிற சட்டமன்ற தேர்தலில் கூடுதல் சுமை என்று தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டலாம்.. 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகளில் பெரிய மாற்றம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்... கூடுதல் சுமை என்று நினைத்து, அகில இந்திய காங்கிரஸ் தனித்து விடப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை" என்று கிண்டலாக கூறியிருந்தார்.

 ட்வீட்கள்

ட்வீட்கள்

கடந்த டெல்லி தேர்தலின்போது, காங்கிரஸ் மண்ணை கவ்வியபோதே, குஷ்பு தனது அதிருப்தியை இப்படித்தான் வெளிப்படுத்தி இருந்தார்.. "நாம் போதிய அளவிற்கு செயல்பட்டு வருகிறோமா? சரியான பாதையில்தான் சென்று கொண்டு இருக்கிறோமா? இனியாவது நாம் நமது செயலை துவக்க வேண்டும்'' என்று சொந்த கட்சியினரை பார்த்து குஷ்பு கேள்வி கேட்டிருந்தார்.

 சீட்டுக்கள்

சீட்டுக்கள்

கட்சியில் இருந்தபோதும், கட்சியைவிட்டு வெளியேறியபோதும், குஷ்பு போட்ட இந்த 2 ட்வீட்களுமே இப்போது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. இதில் உள்ள கேள்விகளும், கருத்துக்களும் நியாயமானதாகவே கருதப்படுகிறது.. மிக மிக உண்மையான ஒரு விஷயத்தைத்தான் அதில் சொல்லியிருக்கிறார் குஷ்பு. காரணம் அந்த அளவுக்கு காங்கிரஸும் படு மெத்தனமாகவே இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் தொடர்ந்து தேய்ந்து கரைந்து கொண்டேதான் போகிறது.

ஓவைசி

ஓவைசி

இந்த பீகார் தேர்தலை எடுத்துக் கொண்டால், ஆரம்பத்தில் இருந்தே அதிக சீட்டுக்கள் வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதம் காட்டியது.. எதிர்பர்த்த சீட்டுக்கள் தராவிட்டால், தனித்து போட்டியிடுவோம் என்று மிரட்டல் விடுத்து முரண்டு பிடித்தது.. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் 70 சீட்டுகளை ராஷ்டிரிய ஜனதா தளத்திடம் இருந்து காங்கிரஸ் பெற்றது.

 அதிமுக

அதிமுக

இத்தனை சீட்டுகளைப் போராடி வாங்கியும் கூட, கடைசியில் 19 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றுள்ளது.. இந்த தோல்விக்கு ஓவைசி கட்சிதான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், காங்கிரஸ் தோல்வி இந்த அளவுக்கு மோசமாகும் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஏனென்றால், இதே காங்கிரஸ் கடந்த 2015-ல் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது.. ஆனால் இந்த முறை 70 தொகுதிகளில் போட்டியிட்டு, வெறும் 19 இடங்களை பிடித்துள்ளது.

 தலைமை

தலைமை

இன்னொரு முக்கியமான விஷயமும் இங்கு நடந்துள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சியை பாஜக சொல்லிச் சொல்லி அடித்துள்ளது. ஆர்ஜேடிக்கு எதிராக பாஜக சரியாக வெல்லவில்லை.. அதேசமயம் காங்கிரஸ் வேட்பாளர்களை கிட்டத்தட்ட கூண்டோடு காலி செய்துள்ளது பாஜக.இதிலிருந்தே பாஜகவின் பலத்தையும், காங்கிரஸின் பலவீனத்தையும் புரிந்து கொள்ளலாம்.

வெற்றி

வெற்றி

இப்படித்தான் நமக்கும் அன்று நடந்தது.. 2016-ல் திமுகவிடம் 48 சீட் வாங்கி நின்று, கடைசியில் 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.. எங்கெல்லாம் காங்கிரஸ் அன்று நின்றதோ, அங்கெல்லாம் அதிமுக அசால்ட்டாக வெற்றியை சுவைத்தது.

உதயசூரியன்

உதயசூரியன்

இப்போதும் வரப்போகிற சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு அதிக சீட் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.. கடந்த எம்பி தேர்தலின்போதே, எடுத்த எடுப்பிலேயே 10 சீட்டை எடுத்து கொடுத்துவிட்டது திமுக.. பிறகு கட்சியில் இணைந்தவர்களுக்கு சீட் தர முடியாமல், அவர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

தலைமைத்துவம்

தலைமைத்துவம்

இப்போதாவது திமுக விழித்து கொள்ள வேண்டும் என்றே சொல்ல தோன்றுகிறது.. அதாவது தானும் கெட்டு, கூட்டணியின் வீழ்ச்சிக்கும் காரணமாகி கொண்டிருக்கிறது காங்கிரஸ்.. காங்கிரஸிடம் முன்பு போல வீரியம் இல்லை... தலைமைத்துவம் சரியில்லை.. உள்ளூர்க் கட்சித் தலைவர்களிடம் ஆளுமை இல்லை.. ஏகப்பட்ட குறைபாடுகள் கொட்டிக் கிடக்கிறது... பழைய நினைப்பிலேயே பலரும் காலத்தை தள்ளி வருகின்றனர். பாஜகவின் வலிமையை இன்னும் காங்கிரஸ் புரிந்து கொள்ளவே இல்லை.

பாஜக

பாஜக

எந்தத் திட்டமிடலும், சீர்திருத்தமும் இல்லாமல் உள்ளூர் கட்சிகளின் செல்வாக்கை மட்டும் நம்பி வாழ்ந்து வருகின்றனர். தேஜஸ்விக்குக் கிடைத்த பாடத்தைப் பார்த்து நாளை ஸ்டாலின் நிச்சயம் காங்கிரஸுக்கு ஆப்பு வைப்பார்... இது பிற மாநிலங்களிலும் தொடரும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. எனவே காங்கிரஸ் அகில இந்திய அளவில் சுதாரித்த ஆக்கப்பூர்வமான கட்சியாக மாறினால் மட்டுமே அதற்கு எதிர்காலம் உண்டு. இல்லாவிட்டால் கால ஓட்டத்தில் கரைந்து காணாமல் போய் விடும். இந்தியாவின் மிகப் பெரும் ஆளுமையாக பாஜக நிரந்தரமாகி விடும். அதுக்கு சாட்சாத் காங்கிரஸ்தான் மூலகாரணமாகிவிடும்!

 
 
 
English summary
Will DMK and Congress alliance continue in Assembly Election
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X