சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாமரை மலர்ந்துடுமோ.. இப்படி பண்ணுங்க.. பாஜக போடும் கிடுக்கிப்பிடி.. சிக்காமல் தப்பிக்க திணறும் திமுக

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுமா?

Google Oneindia Tamil News

சென்னை: எல்லா பக்கமும் திமுகவுக்கு செக் வைக்க பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது.. எதுவாக இருந்தாலும் அதை அந்த வியூகத்தை தவிடுபொடியாக்க திமுகவும் ஜரூராக தயாராகி வருவதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு, திமுகவில் பாஜக இணையும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகின.. வெறும் புகைச்சலாகவே இருந்த நிலையில், அந்த தகவலை ஊதி பெரிதாக்கியது மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்தான்.

"கூட்டணியானது திமுகவுடனும் இருக்கலாம்.. அதிமுகவுடனும் இருக்கலாம் அல்லது இரண்டும் இல்லாமலும் கூட இருக்கலாம்" என்று நாசூக்காக ஒரு கூட்டணி பிட்டை போடவும், அரசியல் களமே சூடானது. பிறகுதான் திமுக தரப்பில் தடாலடியாக அதற்கு மறுப்பு தெரிவித்து, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்ற தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினர். தற்போது கீரியும் - பாம்புமாக திமுக - பாஜக தரப்பினர் உருமாறி நிற்பதாக கூறப்படுகிறது.

இந்திய தேசிய லீக் தலைவருக்கு கொலைமிரட்டல்... பின்னணியில் ரூ.3 கோடி கடன்...?இந்திய தேசிய லீக் தலைவருக்கு கொலைமிரட்டல்... பின்னணியில் ரூ.3 கோடி கடன்...?

 திமுக கூட்டணி

திமுக கூட்டணி

இதைபற்றி சில அரசியல் நோக்கர்களிடம் பேசியபோது அவர்கள் சொன்னதாவது: சில மாதங்களாகவே பாஜக திமுகவுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதில்லை.. ஒருகட்டத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக நினைத்ததும் உண்மைதான்... அதை ஒருமுறை வெளிப்படுத்தியபோதுகூட, திமுக தரப்பு கூட்டணிக்கு மறுத்துவிட்டது.. பாஜகவுக்கு ஒரே எண்ணம், தங்களுடன் கூட்டணி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, காங்கிரசுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்?

 ஜெயலலிதா

ஜெயலலிதா

காங்கிரசுக்கு தனித்தன்மை கிடையாதபோது, அவர்களுக்கு ஏன் சீட்டுக்களை தாராளமாக வழங்க வேண்டும் என்றெல்லாம் பாஜக தரப்பு திமுகவை கேட்டுள்ளது போலும். இதற்கு திமுக, "கடந்த தேர்தலில் வாக்கு சீட்டுக்களை எண்ணி முடிப்பதற்குள்ளேயே, பிரதமர் மோடி ஜெயலலிதாவுக்கு போன் செய்து வாழ்த்துக்களை சொல்லிட்டாரு.. அதனாலதான் கடைசி நேரத்தில் என்னென்னமோ நடந்து மொத்த வாக்கு முடிவுகளும் மாறிவிட்டது.. இல்லையென்றால் திமுகதான் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும்.. அதிமுகவுக்கு மட்டும் நீங்கள் இத்தனை சலுகைகளை செய்து தருவது சரியா? என்று பதிலுக்கு திமுக, பாஜகவை கேட்டதாம்.

 பாஜக

பாஜக

இப்படியெல்லாம் சில மாதங்களாகவே இரு தரப்பிலுமே காரசார பேச்சுக்கள் நடந்து வந்தாலும், இந்த முறை திமுகவை கடுமையாக எதிர்த்து நிற்பது பாஜகதான்.. அதனால்தான் ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட்டால் அங்கு யாரை நிறுத்துவது என்று பாஜக இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டது.. ஒருவேளை உதயநிதி கொளத்தூரிலோ அல்லது ஆயிரம் விளக்கு தொகுதியிலோ நிறுத்தப்பட்டால், அவருக்கு போட்டியாக குஷ்புவை களமிறக்க பாஜக யோசித்து வருகிறது.

குஷ்பு

குஷ்பு

காரணம், திமுகவில் இருந்தபோது, ஸ்டாலின் தரப்புதான் குஷ்புவுக்கு நிறைய நெருக்கடி தந்து வெளியேற்றியது.. அதனால், இந்த முறை ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்ய குஷ்புதான் சரியாக நபர் என்று பாஜக கருதுகிறதாம்.. எப்படி பார்த்தாலும் ஸ்டாலினுக்கு எதிரான வலுவான வேட்பாளரை நிறுத்தவும் முடிவாகி உள்ளது.

திமுக

திமுக

ஒருவேளை கொளத்தூரிலேயே ஸ்டாலினை தோற்கடிப்பதாக இருந்தால், தமிழகம் முழுவதும் பிரச்சாரம் கூட அவ்வளவாக தேவையில்லை என்ற யோசனையும் பாஜகவுக்கு இருக்கிறது. சுருக்கமாக சொன்னால், ஸ்டாலினுக்கு எதிராக குஷ்புவையும், உதயநிதிக்கு எதிராக அண்ணாமலையை களமிறக்க பாஜக பிளானில் உள்ளதாக தெரிகிறது" என்றனர்.

English summary
Will DMK avoid Congress to save it from BJP pressure
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X