• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

என்னது.. "200" தொகுதியிலும் திமுக போட்டியா.. அப்போ அவங்க கதி.. கிறுகிறுக்க வைக்கும் ஸ்டிராட்டஜி!

|

சென்னை: உதயநிதி, அவரது அப்பாவையே ஓவர்டேக் செய்து கொண்டிருக்கிறாரோ அல்லது எல்லை மீறி கொண்டிருக்கிறாரோ என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.. எனினும் திமுக தலைவர் அப்படி எதுவும் நடந்துவிடாமல், அலர்ட்டாகி இருக்கிறார் என்கிறார்கள்.

முன்பெல்லாம் தேர்தல் சீட், தொகுதி பங்கீடு, கூட்டணி போன்ற விவகாரங்கள் எதுவாக இருந்தாலும், மறைந்த தலைவர் கருணாநிதியே எல்லாவற்றையும் முன்னின்று கவனிப்பார்.

எப்போதுமே இவர் "தனிஒருவர்"தான்.. நிர்வாகிகள், சீனியர்கள், மா.செ.க்கள் சொல்லும் ஆலோசனைகள், கருத்துக்களை கவனத்துடன் கேட்டு கொள்வாரே தவிர, இறுதி முடிவுகளை அவர்தான் எடுப்பார்.. திமுக இளைஞர் அணி செயலாளர், பொருளாளர், எம்எல்ஏ, துணை முதல்வர் இப்படி பல பொறுப்புகளை வகித்து வந்த ஸ்டாலின்கூட கலைஞரின் முடிவில் தலையிட மாட்டார்.

உதயநிதி

உதயநிதி

ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை.. நேற்று தி.நகரில் ஒரு பேட்டி தந்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.. அதில், "சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரம் செய்வதோடு தான் நிறுத்தி கொள்ளப்போவதில்லை, திமுகவின் தேர்தல் வியூகத்திலும் தனது பங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், திமுக வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை நாம் கூட்டணிக் கட்சிக்கு கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்காமல், இனி திமுகவே போட்டியிட வேண்டும்... அப்படிப் பார்த்தால் இந்த மாவட்டத்தில் தி.நகர், மயிலாப்பூர் தொகுதிகளில் திமுகவே போட்டியிடும். இதை தலைவர் ஸ்டாலின் சொல்லுவதற்கு முன்பு நானே சொல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

கூட்டணி

கூட்டணி

இதுதான் கூட்டணி தலைவர்களை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. இவருக்கென்று தனியாக ஒரு விருப்பம் இருந்தால்கூட, அதை எப்படி இப்படி பொதுவெளியில் சொல்வது? கூட்டணிக்குள் ஒரு பிரச்சனையும் இல்லை என்று திமுக தலைவர் பலமுறை அறிக்கைவிட்டு தெளிவுபடுத்தி கொண்டிருக்கும்போது, உதயநிதி இப்படி தன்னிச்சையாக பேசினால், கூட்டணிக்குள் குழப்பம் என்றுதானே மற்றவர்கள் நினைக்க தோன்றும்? என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

அதுமட்டுமல்ல, ஏதோ திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எல்லாம் தானம் வழங்குவது போல், இப்படி பேசுகிறார்களே. கூட்டணி இல்லாமல் திமுகவால் ஆட்சி அமைக்க முடியுமா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறார்கள். உதயநிதிக்கு அரசியல் கள நிலவரம் முழுசாக தெரியவில்லையா? ஒருவேளை ஸ்டாலினுக்கு தெரிந்துதான் இதை சொல்கிறாரா? அல்லது ஸ்டாலினால் வெளிப்படையாக சொல்ல முடியாது என்பதால் உதயநிதி மூலம் தெரியவருகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. எப்படி பார்த்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஒருவித எரிச்சலும், டென்ஷனும் கிளம்பி உள்ளது.

உதயநிதி

உதயநிதி

அதேசமயம், உதயநிதியின் பேச்சுக்கு ஆதரவும் கிளம்பி உள்ளது.. "முதன்முதலில் 200 தொகுதிகளில் திமுக போட்டியிடுவதாக சொன்னது உதயநிதிதான்.. இதற்கு காரணம் 10 வருடங்களுக்கு பிறகு, ஆட்சியை பிடித்தாக வேண்டும் என்ற உந்துதல்தான்.. கூட்டணிகளுக்கு தொகுதிகளை வாரி தந்துவிட்டு, இந்த முறையும் வெற்றிவாய்பை இழக்ககூடாது என்பதற்காகவே உதயநிதி அலர்ட் செய்கிறார்.. இதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.. இதைதானே ஐபேக் டீமும் அப்போதிலிருந்து சொல்லி வருகிறார்கள் என்கிறார்கள்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

ஆனால் ஸ்டாலின் கரெக்ட்டாக யோசித்து வருகிறாராம்.. இந்த முறை காங்கிரசுக்கு 20 தொகுதிகள் தருவதற்கு முடிவு செய்துள்ளாராம்.. காங்கிரஸ் எப்படியோ இந்த முறை நெருக்கடி தரப்போவதில்லை என்றாலும், திமுக என்ன தந்தாலும் அதை உவகையுடன் வாங்கி கொள்ளும் என்றாலும், காங்கிரஸ் தயவும் தங்களுக்கு தேவை என்று ஸ்டாலின் நினைக்கிறார். இதனால்தான் உதயநிதி நேற்று அப்படி பேசினாராம்.. ஏற்கனவே ஓவைசியை உள்ளே கொண்டு வர உதயநிதி நினைத்தார்.. முடியவில்லை.. இப்போது 200 தொகுதி என்கிறார்.. இதிலும் அவரது கணக்கு பொய்க்கும் என்றே தெரிகிறது.. இவர் மட்டுமில்லை.. யார் என்ன சொன்னாலும் சரி.. ஸ்டாலின் போடும் கணக்கே இறுதியாகும்..!

 
 
 
English summary
Will DMK contest alone in TN Assembly Election 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X