சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலினை விடுங்க.. உதயநிதிக்கு "அந்த" பதவியாமே.. வட்டமடிக்கும் கணக்கு.. செம எதிர்பார்ப்பு

உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு முக்கியமான விஷயம் ஓடிக் கொண்டிருக்கிறது.. ஒருவேளை திமுக ஆட்சி அமைத்தால், யார் யாருக்கு பதவி கிடைக்கும் என்பதே அது.. அதிலும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் அது என்ன பதவியா இருக்கும்? என்ற யூகங்கள் வட்டமடிக்க ஆரம்பித்துள்ளன.
கடந்த வாரத்தில் இருந்து உத்தேச அமைச்சர்கள் பட்டியல் ஒன்று தயாரானதாக சொல்லப்பட்டது.. அந்த லிஸ்ட்டில், செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன் போன்றோரின் பெயர்களும் உள்ளதாகவும், ஆனால், அதில் துரைமுருகன் பெயரையே காணோம் என்றும் கூறப்பட்டன.

அஸ்ஸாமில் 6 ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை துப்பாக்கி முனையில் கடத்திய உல்பா தீவிரவாதிகள் அஸ்ஸாமில் 6 ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை துப்பாக்கி முனையில் கடத்திய உல்பா தீவிரவாதிகள்

பிறகு கடந்த 2 நாட்களாக, ஃபைனல் அமைச்சர்கள் லிஸ்ட் ஒன்று கொடைக்கானலில் ரெடியாகி வருவதாகவும், இந்த லிஸ்ட்டை உதயநிதியும், சபரீசனும், எடுத்ததாகவும், இதை வைத்துதான் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாகவும் அடுத்த தகவல் வந்தன. அதுமட்டுமல்ல, இந்த முறை நிறைய புதுமுகங்களுக்கும் அமைச்சர் பதவி தரப்படும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

லிஸ்ட்

லிஸ்ட்

கடந்த வாரம், திடீரென்று 31 பேர் கொண்ட டம்மி லிஸ்ட் ஒன்று, சோஷியல் மீடியாவிலும் வெளியானது.. அந்த லிஸ்ட்டில், எதிர்பார்த்ததுபோலவே, பல சீனியர்களுக்கு அமைச்சர் பதவி தரப்பட்டிருந்தது.. அதில், உதயநிதி ஸ்டாலினுக்கும் வீட்டு வசதி வாரியத் துறை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த லிஸ்ட்டே ஒரு உத்தேச பட்டியல் என்றாலும், உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்படுமா என்பது, அவருக்கு சீட் தரும்போதே எழுந்துவிட்ட கேள்வி ஆகும்..

வாய்ப்பு

வாய்ப்பு

அந்த வகையில், நிச்சயம் அவருக்கு வாய்ப்பு தரப்படும் என்கிறார்கள்.. வாரிசு என்பதையும் தாண்டிதான் அவருக்கு சீட் தரப்பட்டது.. ஒருவேளை இந்த முறை உதயநிதி வெற்றி பெற்றுவிட்டால், அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகி விடுகிறார்.. எனவே மக்கள் தீர்ப்பை ஏற்க வேண்டி உள்ளது.. மற்றொரு பறம், துரைமுருகன் போன்ற பல சீனியர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகிய வண்ணம் இருக்கிறது..

உதயநிதி

உதயநிதி

அதேசமயம், இந்த முறை இளைஞர்களுக்கு வாய்ப்பு இருக்கும் என்று சொல்லப்படுவதால், அதில் உதயநிதியை தவிர்க்க முடியாது.. அதிலும், இளைஞர் அணியை தன்னகத்தே வைத்துள்ள நிலையில், உதயநிதியை தவிர்த்து விட்டு லிஸ்ட் போட முடியாது என்றும் சொல்கிறார்கள்.

கணிப்பு

கணிப்பு

ஒருவேளை உதயநிதிக்கு சீட் தந்தால், என்ன துறை ஒதுக்கப்படும் என்ற அடுத்த சந்தேகம் எழுகிறது.. இதற்கும் சில கணிப்புகளை சொல்கிறார்கள்.. அதாவது திமுக ஆட்சிக்கு வந்தால், பலரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஸ்டாலின் ஏற்கனவே பிரச்சாரங்களில் தெரிவித்து வந்தார்..

ஸ்டாலின்

ஸ்டாலின்

குறிப்பாக, "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்கிற பெயரில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மக்களை சந்தித்து, மக்களிடம் பெற்ற கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்த முதல் 100 நாளில் நிறைவேற்றுவேன் என்றும் அதற்காகவே ஒருதுறையை உருவாக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அநேகமாக இந்த துறையைகூட, உதயநிதிக்கு வழங்கலாம் என்கிறார்கள்..

புது துறை

புது துறை

சுமார் ஒரு கோடி குடும்பங்களின் கோரிக்கையாவது நிறைவேற்றுவதே ஸ்டாலினின் லட்சியம் என்று சொல்லி இருந்ததால், இதை உதயநிதியே நேரடியாக கண்காணிக்கலாம் என்கிறார்கள். இதெல்லாம் ஒரு யூகம் தான் என்றாலும், ஸ்டாலின் சொன்ன அந்த புது துறையானது மக்களின் நேரடி நன்மதிப்பை பெறக்கூடியவதாகவே இருக்கும் என்று தெரிகிறது.. பார்க்கலாம்..!

English summary
Will DMK MK Stalin give the ministerial post to Udhayanidhi Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X