• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

தோத்தாலும் ஜெயித்தாலும் மீசைய முறுக்கு.. வெற்றிநடைப் போடத் தயாராகும் எடப்பாடியார்?

|

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதிமுகவில் தற்போது புதிய புயல் சின்னம் தெரிய தொடங்கி இருக்கிறது. கலகத்தை வென்று கழகத்தை கைப்பற்றுவாரா முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி எனும் எதிர்பார்ப்பு ரத்தத்தின் ரத்தங்களிடையே எழுந்துள்ளது.

தமிழக சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கின. ஆரம்பத்தில் திமுகவும், அதிமுகவும் சமநிலையிலேயே முன்னிலை பெற்று வந்தன. நண்பகலுக்கு பிறகு அதிமுக வேட்பாளர்களை திமுக வேட்பாளர்கள் ஓவர்டேக் செய்து, ஸ்டாலின் முதலமைச்சராவதை உறுதி செய்தனர்.

ஆட்சித்தேர் சரியாக செயல்பட அச்சாணியாக இருப்போம்...எதிர்கட்சி பணிகளை சரியாக செய்வோம் - ஓபிஎஸ்,இபிஎஸ் ஆட்சித்தேர் சரியாக செயல்பட அச்சாணியாக இருப்போம்...எதிர்கட்சி பணிகளை சரியாக செய்வோம் - ஓபிஎஸ்,இபிஎஸ்

வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக 126 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக 66 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. கருத்து கணிப்புகளின் படி இந்த முடிவு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான்.

புதிய புயல் சின்னம்

புதிய புயல் சின்னம்

இருந்த போதும் ஆளுங்கட்சி மத்தியில் சிறிய நப்பாசை இருந்தது. எப்படியும் மீண்டும் மக்கள் தங்களுக்கு ஒரு வாய்ப்பு தருவார்கள் என எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களது நம்பிக்கையை வாக்குகள் பொய்யாக்கி விட்டன. இதனால், இந்த தேர்தல் முடிவின் காரணமாக அதிமுகவில் புதிய புயல் சின்னம் ஒன்று உருவாகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

நம்பிக்கைத் தூண்

நம்பிக்கைத் தூண்

ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக இருந்த போதும் அக்கட்சி பல தோல்விகளை கண்டுள்ளது. அதில் இருந்து மீண்டும் வந்திருக்கிறது. ஆனால் அப்போது கட்சியை மக்கள் மத்தியில் தாங்கிப் பிடிக்கும் தூணாக ஜெயலலிதா இருந்தார். அதனால் எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டு விடுவோம் என அதிமுகத் தொண்டர்கள் நம்பினார்கள்.

முன்னாள் முதல்வரின் வெற்றி

முன்னாள் முதல்வரின் வெற்றி

ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக உடைந்துவிடும், ஆட்சி கலைந்துவிடும் என பலரும் கூறினர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. 3ம் கட்ட தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல் இடத்துக்கு வந்து ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றினார். 4 ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சியை நடத்தி காட்டியிருக்கிறார். அதன் பலனாகத் தான் ஆட்சியைக் கைப்பற்ற முடியாவிட்டாலும், பலமான எதிர்க்கட்சியாக சட்டசபையில் இடங்களைப் பிடித்திருக்கிறது அதிமுக.

முதன்முறையாக..

முதன்முறையாக..


கடந்த சட்டசபைத் தேர்தல்கள் போல் இல்லாமல், தமிழகத்தின் மிக முக்கிய பெரிய கட்சிகளாக விளங்கும் திமுகவும் சரி, அதிமுகவும் சரி தங்களது பெரிய தலைவர்கள் இல்லாமல் தனியாகப் போராடி இந்தத் தேர்தலை சந்தித்துள்ளன. இதனாலேயே இந்தத் தேர்தல் முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரிதாக இருந்தது.

மீண்டும் பழைய காட்சிகள்?

மீண்டும் பழைய காட்சிகள்?

ஏற்கனவே ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அக்கட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் ஊரறிந்த கதைதான். எனவே, அதிமுகவின் இந்த தோல்வியால் மீண்டும் அக்கட்சிக்குள் பழைய காட்சிகள் அரங்கேறலாமோ என்ற சந்தேகம் கடைநிலைத் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் அப்படி எதுவும் நடக்க, ‘வாய்ப்பில்லை ராசா வாய்ப்பில்லை' என்கிறார்கள் சில ரத்தத்தின் ரத்தங்கள்.

செல்வாக்குக்கு சாட்சி

செல்வாக்குக்கு சாட்சி

அதிமுக வென்றுள்ள மொத்த இடங்கள் 66. அதில் பெரும்பாலான இடங்கள் கொங்கு மண்டத்தில் தான் இருக்கின்றன. குறிப்பாக பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அதிமுக பெரும்பான்மை இடங்களில் வென்றுள்ளது. மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 10 இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதில் 8 தொகுதிகள் அதிமுகவினுடையது. மேலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை வென்று காட்டியிருக்கிறார் முன்னாள் முதல்வர்.

மம்தாவிற்கு நேர்மாறாக..

மம்தாவிற்கு நேர்மாறாக..

மேற்கு வங்கத்தில் எப்படி திரிணாமுல் கட்சி மாபெரும் வரலாற்று வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலையில், தனது சொந்தத் தொகுதியிலேயே மம்தாவிற்கு தோல்வியே கிடைத்தது. அதற்கு நேர்மாறாக இங்கே நடந்துள்ளது. இங்கு மீண்டும் ஆளும் கட்சிக்கு வாய்ப்பளிக்காத மக்கள், முன்னாள் முதல்வருக்கு மட்டும் தங்களது ஆதரவை அள்ளி வழங்கியுள்ளனர்.

செல்வாக்கை இழந்த ஓபிஎஸ்

செல்வாக்கை இழந்த ஓபிஎஸ்

அதேவேளையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் தனது செல்வாக்கை இழந்திருக்கிறார். தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே அதிமுக வெற்றுள்ளது. அதுவும் வாக்கு வித்தியாசமும் பெரிய அளவில் இல்லை என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவே.

கழகத்தில் கலகம்

கழகத்தில் கலகம்

எனவே இனி அதிமுகவில் எடப்பாடி ராஜ்ஜியம் தான் இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். விரைவில் அதிமுகவில் ஒரு பெரிய கலகம் வெடிக்கும் என்றும், அதை எடப்பாடி பழனிசாமி வென்று காட்டுவார் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம் என்ற நிலை இருந்தபோது, அதனை சாமர்த்தியமாக எதிர்கொண்டு வெற்றிகரமாக தனது ஆட்சி காலத்தை முடித்துக் காட்டியுள்ளார் எடப்பாடி.

வெற்றிநடை

வெற்றிநடை

இதுவே அவர் மீதான நம்பிக்கையை தொண்டர்கள் மத்தியில் அதிகரிக்க வைத்துள்ளது. எனவே இனி கட்சியை எப்படியும் கட்டிக் காப்பார் எடப்பாடி என்கிறார்கள் அக்கட்சியின் மூத்த தலைவர்கள். ‘தோற்றாலும் ஜெயித்தாலும் கெத்தாக மீசைய முறுக்கு' என வெற்றிநடை போட தயாராகி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.

English summary
The Tamilnadu assembly election 2021 results shows a sign that Edapadi Palanisamy will emerge as a single power in ADMK, says Political analysts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X