• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஆடு பகை, குட்டி உறவா".. எடப்பாடி பழனிசாமி "அவருடன்" கை கோர்க்க போகிறாராமே.. உண்மையா?

Google Oneindia Tamil News

சென்னை: விரைவில் அதிமுக - அமமுக ஒன்றுகூட வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.. அதற்கான சில சாத்தியக்கூறுகளையும் யூகங்களாக வரிசைப்படுத்துகிறார்கள்..!

சசிகலா போனில் பேசிக் கொண்டிருப்பது எல்லாம் சும்மா கிடையாதாம்.. ஒரு பெரிய லிஸ்ட்டையே கையில் வைத்து கொண்டு வேலை செய்து வருகிறாராம்..

நாளுக்கு நாள் சசிகலாவின் ஆதரவாளர்களும் பெருகி கொண்டிருக்கின்றனர்... வெளி வந்து கொண்டிருக்கும் ஆடியோ பேச்சிலேயே அவை தெளிவாக தெரிந்து வருகிறது.

பரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்?பரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்?

பாஜக

பாஜக

நம்மை பாஜக எப்படியாவது ஜெயிக்க வைத்து விடும் என்று எடப்பாடி சொன்னதை கேட்டுதான், பலரும் சசிகலாவிடம் பேசக்கூட தயக்கம் காட்டினார்கள்.. ஆனால், இப்படி மொத்தமாக அதிமுக கவிழும் என்று எடப்பாடியே எதிர்பார்க்கவில்லை.. இது அதிமுக நிர்வாகிகளுக்கு ஒரு அப்செட்.. மறுபக்கம் முக்கியமான சீனியர்களுக்கு கட்சியில் சீட் தராமல் விட்டுவிட்டதும் இரண்டாவது மைனஸாகிவிட்டது.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இதனால் அதிருப்தியாளர்கள் பெருகிவிடவும் ஒரு க்ரூப் சசிகலா பக்கமும், இன்னொரு க்ரூப் திமுக பக்கம் தாவ ஆரம்பித்துள்ளனர்.. இப்போது எடப்பாடிக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. இதை அவர் எப்படி சரிகட்ட போகிறார்? என்பதுதான் அடுத்த கவலை.

சசிகலா

சசிகலா

ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை பிரச்சனையே இருக்காது என்கிறார்கள். அவர் எப்போது வேண்டுமானாலும் சசிகலாவை ஏற்பதாக வெளிப்படையாகவே அறிவிக்ககூடும்.. ஆனால், எடப்பாடிதான் இன்னமும் பிடிவாதம் காட்டி வருவதாக தெரிகிறது... இதில் பரிதாபம் என்னவென்றால், சசிகலாவை எதிர்த்து மாநில அளவில் நிர்வாகிகளை கூட்டி ஒரு தீர்மானத்தை கூட நிறைவேற்ற எடப்பாடியால் முடியாமல் உள்ளது.

பாஜக

பாஜக

ஒருவேளை அப்படி நிறைவேற்றினால் முதல் எதிர்ப்பே ஓபிஎஸ் ஆகத்தான் இருக்குமாம்.. அப்படியானால் எடப்பாடி என்னதான் செய்ய போகிறார்? இத்தனை மாதமாக சசிகலாவை திட்டி கொண்டிருந்தவர், சமீபத்தில் நடந்த மா.செ. கூட்டத்தில் அவரை பற்றி பேச்சையே பேச காணோம்.. எடப்பாடி மட்டுமில்லை, சசிகலாவுக்கு எதிராக ஒரு நிர்வாகிகூட அந்த கூட்டத்தில் வாய்திறக்கவில்லை... இந்த மவுனம் எதற்காக என்ற சந்தேகமும் எழுகிறது.

  Delhi Tamil Nadu house-ல் இருந்த OPS மற்றும் EPS.. Tv-யில் ஒளிபரப்பான முதல்வர் Stalin வீடியோ!
  தினகரன்

  தினகரன்

  இப்படிப்பட்ட சூழலில்தான் இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. டிடிவி தினகரனை சசிகலா இப்போது வரை ஒதுக்கி வைத்துவிட்டதாகவே கணிக்கப்படுகிறது.. ஆனாலும் தினகரன் அரசியலுக்குள் ரீஎன்ட்ரி தர தயாராகி வருகிறார்.. ஒருவேளை சசிகலா முழுநேர அரசியலுக்கு வந்தால், அவர்மீது பாஜக வழக்குகள் போடக்கூடும் என்று தினகரன் ஆதரவாளர்கள் இப்போதே சலசலத்து வருகிறார்கள்.

  புகார்கள்

  புகார்கள்

  அப்படி வழக்குகள் பாய்ந்தால், அந்த நேரத்தில் சசிகலாவுக்கு ஓபிஎஸ் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்ககூடும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, எடப்பாடி முகாம் மீது திமுக ஊழல் புகார்களை தொடுத்தால், அந்த நேரத்தில் எடப்பாடி தன்னை காப்பாற்றிக்கொள்ள தினகரனுடன் கை கோர்க்கவும் தயங்கமாட்டார் என்கிறார்கள்.. இதெல்லாம் வெறும் யூகம்தானா? நடக்குமா? ஆடு பகை, குட்டி உறவா? தெரியவில்லை.. பார்ப்போம்...!

  English summary
  Will Edapadi palanisamy join with AMMK TTV Dinakaran
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X