• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வெங்காய விலையால் ஆட்சிகள் கவிழ்ந்த நாடு இது.. 5 மாநில தேர்தலில் தாக்கம் ஏற்படுத்துமா விலையேற்றம்?

|

சென்னை: விலைவாசி பிரச்சனை ஆட்சிகளை மாற்றும் சக்தி கொண்டது என்பதை இந்தியா இதற்கு முன்பு பலமுறை பார்த்துள்ளது. இந்திரா காந்தி காலத்தில் இருந்து இந்தியா இப்படியான பொதுமக்களின் பதிலடிகளை பார்த்துக் கொண்டிருக்கிறது.

நாடு முழுக்க அவசர நிலையை கொண்டு வந்து கடும் அடக்குமுறைகளை அமல்படுத்தினார் இந்திராகாந்தி. இதன் காரணமாக ஜனதாதளம் கூட்டணியிடம் 1977ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார்.

மீண்டும் எப்படி ஆட்சியைப் பிடிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்த இந்திராகாந்திக்கு வெங்காயம் விலை ஏற்றம் மிகப்பெரிய ஆயுதமாக கையில் கிடைத்தது. ஜனதாதளம் கூட்டணி ஆட்சியின்போது வெங்காயம் விலையை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக இந்திரா காந்தி செய்த பிரச்சாரத்துக்கு பெரிய வெற்றி கிடைத்தது.

இந்திராவை ஆட்சிக்கு கொண்டு வந்தது

இந்திராவை ஆட்சிக்கு கொண்டு வந்தது

ஜனதாதளம் கூட்டணி உடைந்த நிலையில் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மறுபடி இந்திரா காந்தி வெற்றி பெற்றார். அவசர நிலை பிரகடனம் போன்ற மிகப்பெரிய ஒரு நாடு தழுவிய மக்கள் எதிர்ப்பு அலையை சந்தித்த இந்திராகாந்தி மறுபடியும் ஆட்சியை பிடிப்பதற்கு வெங்காய விலை ஏற்றம் உதவியது என்றால் மிகை அல்ல.

டெல்லியில் ஆட்சி போச்சி

டெல்லியில் ஆட்சி போச்சி

1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போதும் வெங்காய விலை ஏற்றம் மீண்டும் தனது வேலையை காட்டியது. டெல்லி யூனியன் பிரதேச தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் தலைநகர் டெல்லியை காங்கிரசிடம் இழந்தது பாஜக. ஷீலா தீட்சித் முதல்வரானார். இதற்கு முக்கிய காரணம் வெங்காய விலை ஏற்றம்தான்.

கவிஞர்கள் கையில் எடுத்தனர்

1999ஆம் ஆண்டு, அரவிந்த் சாமி, இஷா கோபிகர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான, தமிழ் திரைப்படமான, என் சுவாச காற்றே உங்களுக்கு நினைவிருக்கலாம். அதில் இடம்பெறும், காதல் நயாகரா என்ற பாடலில், "உன்னில் உருவான ஆசைகள் என் அன்பே.. அந்த வெங்காய விலை போல இறங்காது" என்ற பாடல் வரிகள் இடம் பெற்றிருக்கும். அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது வெங்காய விலை ஏற்றம்.

சமையல் எரிவாயு

சமையல் எரிவாயு

இப்போது 5 மாநில தேர்தல்களிலும் நாட்டில் நிலவும் விலை ஏற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 830 ரூபாயைத் தாண்டிவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெங்காயம் விலையும் 150 ரூபாய் என்ற அளவுக்கு எகிறிப் போனது. தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்

மற்றொரு முக்கியமான விலை ஏற்றம் பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்பானது. பெட்ரோல் விலை தமிழகத்தில் சுமார் 93 ரூபாய் என்ற அளவுக்கும், டீசல் விலை 86 ரூபாய் என்ற அளவிலும் இருக்கிறது. எரிபொருள் விலை உயர்ந்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை தானாகவே உயரத்தான் செய்யும். அன்றாடம்.. அவ்வப்போது பயன்படுத்தப்படும் பொருட்களில் விலை ஏறுவதுதான் எப்போதுமே அரசுக்கு எதிரான ஆவேசமாக மாறும். அதுதான் வரலாறு.

5 மாநில தேர்தல்

5 மாநில தேர்தல்

எனவே, தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில தேர்தலில் இந்த அதிருப்தி அலைகளை மத்தியில் ஆளும் பாஜக எப்படி எதிர்கொள்ளப் போகிறது.. அந்தந்த மாநிலங்களில் அந்த கட்சியோடு இணக்கமாக இருக்கும் கட்சிகள், தங்கள் வேட்பாளர்களை இந்த அதிர்ச்சி அலையில் இருந்து எப்படி காப்பாற்றப் போகிறது என்பது மிகப் பெரிய சவால் என்கிறார்கள்.

English summary
Price rise in India man give impact in the five state assembly election, says political analysts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X