• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

லுங்கியோடு கைதானாரே.. "ராஜவிசுவாசம்".. எடப்பாடியையே மிரள வைத்த புள்ளிக்கு மெகா போஸ்டிங்காமே..!

Google Oneindia Tamil News

சென்னை: மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு எம்பி பதவி கிடைக்கும் என்று காத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் அது கைநழுவி போயுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதிமுகவின் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் லிஸ்ட் ஒருவழியாக வந்துவிட்டது.. இந்த 2 வேட்பாளருக்கே இத்தனை நாளும் குடுமிப்பிடி சண்டை மேலிடத்தில் நடந்து வந்தது.

ஆளுக்கு ஒரு ஆதரவாளர்களுக்கு பதவி தரலாம் என்று ஏற்கனவே முடிவாகி இருந்தாலும், எடப்பாடிதான் நடுவில் புகுந்து, குட்டையை குழப்பிவிட்டார் என்கிறார்கள்..

ஏய்...ஏம்ப்பா இப்படி..! வாயை தொறந்தாலே ஜெயில் தான்! என்னங்க நடக்குது இங்க! கொந்தளித்த ஜெயக்குமார்..! ஏய்...ஏம்ப்பா இப்படி..! வாயை தொறந்தாலே ஜெயில் தான்! என்னங்க நடக்குது இங்க! கொந்தளித்த ஜெயக்குமார்..!

சாய்ஸ்கள்

சாய்ஸ்கள்

தன்னுடைய ஆதரவாளர் 2 பேருக்கும் வழங்க தயாரானார்.. அப்போதுதான் ஓபிஎஸ் உள்ளே புகுந்து மல்லுக்கட்ட ஆரம்பித்தார். இப்போது ஆளுக்கு ஒரு இடம் என்று முடிவாகிவிட்டது.. இதில் எடப்பாடியின் 2 சாய்ஸாக இருந்தது சிவி சண்முகம் மற்றும் ஜெயக்குமார்தான்.. காரணம் இருவருமே பாரபட்சம் இல்லாமல் தங்கள் விசுவாசத்தை எடப்பாடி பழனிசாமிக்கு காட்டி வந்த நிலையில், சிவி சண்முகம் பதவியை தட்டி சென்றார்.

 லுங்கியுடன் கைது

லுங்கியுடன் கைது

இதனால் ஜெயக்குமாரை மேலிடம் கண்டுகொள்ளவில்லை.. அவர் கைதானால்தான் போஸ்டிங் தரவில்லை என்றெல்லாம் சலசலப்புகள் எழுந்து வருகின்றன.. ஆனால், ஜெயக்குமாருக்கு போஸ்டிங் தராததற்கு காரணமே வேறு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. திமுக ஆட்சி ஏற்பட்டதில் இருந்து, ஊழல் தொடர்பான புகார்களில் மட்டுமே அதிமுக மாஜிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், குற்ற பின்னணியில் ஜெயக்குமார் கைதானது அதிமுகவுக்கே அதிர்ச்சிதான்.. அதிலும் இரவு 8 மணிக்கு அவரது வீட்டிற்குள்ளேயே நுழைந்து லுங்கியுடன் கைது செய்ததை எடப்பாடி பழனிசாமியே அதிர்ந்து போய் பார்த்தார்.

 ஜெயக்குமார்

ஜெயக்குமார்

காரணம், அதிமுகவின் குரலாய் மட்டுமல்ல, இன்னும் சொல்லப்போனால் எடப்பாடி பழனிசாமியின் குரலாய் ஒலித்து கொண்டிருப்பவர் ஜெயக்குமார்தான்.. இவர் மீதே கையை வைத்துவிட்டதே திமுக? என்ற ஷாக்கில் இருந்து அதிமுக மேலிடத்தால் வெளிவர முடியாமல் போனது.. எடப்பாடி பழனிசாமி அன்றைய தினம் இரவே கண்டன அறிக்கையையும் காட்டமாக வெளியிட்டார்.. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரை நேரிலும் சந்தித்து நம்பிக்கை தந்தார்... அதிமுகவை திரட்டி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்.

 எடப்பாடி பழனிசாமி மாஸ்

எடப்பாடி பழனிசாமி மாஸ்

இவ்வளவும் ஓபிஎஸ் இல்லாமலேயே தனித்து செய்து முடித்தார் என்றால் அதற்கு காரணம் ஜெயக்குமார் மீதான நன்மதிப்புதான்.. அதுமட்டுமல்ல, ஜெயக்குமாரை வைத்து ஓபிஎஸ்ஸுக்கு செக் வைக்கவும் எடப்பாடி முடிவு செய்துள்ளார்.. அதன்படிதான், அவருக்காக கட்சியின் முக்கிய பொறுப்பை தரலாம் என்று முடிவு யோசித்துள்ளாராம்.. குறிப்பாக, அக்கட்சியின் அவைத் தலைவராக நியமிக்கலாம் என்ற முடிவில் உள்ளாராம்..

 தமிழ்மகன் உசேன்

தமிழ்மகன் உசேன்

இப்போதைக்கு தமிழ்மகன் உசேன் தற்காலிக தலைவராக உள்ளதால், அந்த பொறுப்பைதான் ஜெயக்குமாருக்கு வழங்கினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறார்.. கடந்த காலங்களில், சசிகலாவை மிக மோசமாகவும், கடுமையாகவும் விமர்சித்து வந்தது ஜெயக்குமார்தான்.. சசிகலா பெயரை சொன்னாலே, எடப்பாடியே அமைதியாக இருந்தாலும், அவரைவிட அதிகமாக கொந்தளித்தவர் ஜெயக்குமார்தான்.. எல்லாவற்றிற்கும் மேலாக திமுகவை சீண்டி ஜெயிலுக்கு போன வரலாறு,

மதுசூதனன்

மதுசூதனன்

இப்படி பல காரணங்களால் ஜெயக்குமார் மீதான நன்மதிப்பு எடப்பாடிக்கு அதிகமாகி விட்டதாம். மேலும், இதே பதவியில் அன்று கெத்து காட்டிய வடசென்னை மதுசூதனனை போல், தற்போது ஒட்டுமொத்த சென்னையில் ஜெயக்குமார் ஆக்டிவ்வாக இருப்பதாலும் இந்த பதவி வழங்கப்படலாம் என்கிறார்கள்.. ஆக, எம்பி பதவி இல்லாவிட்டாலும், கெத்து காட்டக்கூடிய முக்கிய ஜெயக்குமாருக்கு ரெடியாக இருக்கிறதாம்.. பார்ப்போம்..!

English summary
will ex minister jayakumar got main post in aiadmk soon and whats edapadi palanisamys plan ஜெயக்குமாருக்கு முக்கிய போஸ்டிங் தர எடப்பாடி முடிவு செய்து வருகிறாராம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X