சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த கல்வியாண்டில் பள்ளிகளுக்கு பொது தேர்வு நடத்தப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Google Oneindia Tamil News

சென்னை: பொது தேர்வு நடத்துவது குறித்து முதல்வருடன் ஆலோசனைக்கு பிறகே அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்,

ஈரோடு மாவட்டம் கோபியில் பல்வேறு இடங்களில் வளர்ச்சிப் பணிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

கோபிச்செட்டிப்பாளையம் ஆசிரியர் நகர் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

ரஜினிகாந்த் உடல்நலம் பற்றி போனில் விசாரித்த ஸ்டாலின்!ரஜினிகாந்த் உடல்நலம் பற்றி போனில் விசாரித்த ஸ்டாலின்!

வளர்ச்சி பணிகள்

வளர்ச்சி பணிகள்

பின்னர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து ரூ 9. கோடியே 47- லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை பணிகளுக்கான பூமி பூஜை, புதிய வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் பூமி பூஜை, பயனாளிகளுக்கு மாடு,ஆடு வளர்க்க கொட்டகை அமைக்க ஆணை வழங்குதல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

முதல்வருடன் ஆலோசனை

முதல்வருடன் ஆலோசனை

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில். " இந்த கல்வியாண்டில் பொது தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் விரிவான ஆலோசனைக்கு பின்னரே அறிவிக்கப்படும்.

சூழ்நிலை வேறு

சூழ்நிலை வேறு

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யபட்டுள்ளது. கொரோனா காலத்தில் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கபட்டது. அப்போது உள்ள நிலை வேறு இப்போது உள்ள நிலை வேறு. தமிழகத்தில் 11- புதிய மருத்துவ கல்லூரி அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதால் 7.5 இட ஒதுக்கீட்டில் கூடுதலாக மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்" என்றார்.

எப்போது

எப்போது

முன்னதாக தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து வெளியிட்ட அரசாணைகள் ரத்து செய்யப்பட்டன. ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவியது. ஆனால் உருமாற்றம் அடைந்த கொரோனா பிரச்சனை காரணமாக பள்ளிகள் பொங்கலுக்கு பின் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

English summary
Education Minister Senkottayan told reporters at Gobichettipalayam in Erode district. "we will announce the conduct of the general examination this academic year only after a detailed consultation with The Chief Minister Edappadi Palanisamy," he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X