சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

படு வேகத்தில் கொரோனா பரவல்.. இறுகி வரும் இந்தியா சீனா நெருக்கம்.. புருவம் உயர்த்தும் உலக நாடுகள்!

காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் விஷமம் பண்ண துடிக்கிறது

Google Oneindia Tamil News

சென்னை: வர்த்தக பங்காளியான சீனாவுடன் இந்தியா இன்று இறுக்கமாக கைகோர்த்துள்ளது உலக நாடுகளை கடுப்பில் ஆழ்த்தி வருகின்றன.. முக்கியமாக பாகிஸ்தானின் காதில் புகையே வந்துவிட்டது... இதற்கு என்ன காரணம்? கொரோனாவைரஸ் பரவலால் ஒட்டுமொத்த உலக நாடுகளின் எதிர்ப்பை சீனா சம்பாதித்து வரும்போது இந்தியாவுடனான நெருக்கம் மட்டும் புருவத்தை உயர்த்தி வருகிறது.. இது ஆசிய அரசியலையே புரட்டி போடுமா என்ற எதிர்பார்ப்பும், சந்தேகமும் எழுந்துள்ளது!

Recommended Video

    ஆஸ்திரேலியாவை வளைக்க சீனா திட்டம்... பகீர் பின்னணி

    பாகிஸ்தான் - சீனா உறவு உலகம் அறிந்ததே.. "இமயமலையைவிட உயர்ந்தது, கடலைவிட ஆழமானது, இரும்பைவிட வலிமையானது, தேனைவிட இனிப்பானது".. இப்படித்தான் சீனாவுடனான தங்கள் நாட்டு உறவை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் குறிப்பிட்டு வந்தார்கள்; இப்போதும்கூட அதாவது 2 மாசத்துக்கு முன்பு வரை கூட இந்த இணக்கமும் - பிணைப்பும் இருக்கத்தான் செய்தது. ஆனால் இப்போது அந்த உறவில் விரிசல் வந்துள்ளது!

    அதேபோல வர்த்தக பங்காளியான சீனாவுடன் இந்தியா கொஞ்சம் ஓவராகவே ஒட்டி உறவாடி கொண்டு வருகிறது.. அடிப்படையில் பார்த்தால் இந்தியாவும், சீனாவும் ஒன்றுதான்.. இரண்டுமே பழமையான நாடுகள்.. இரண்டுமே அதிக மக்கள் தொகை கொண்டவை.. இரண்டுமே விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடை, தொழில் உட்பட கலாச்சார ஒற்றுமை நிறையவே உள்ளவை. இரண்டுமே 2 ஆயிரம் ஆண்டு பழமையில் ஊறித்திளைத்தவை.

    நேரு

    நேரு

    ஆனால் அரசியல் உறவு என்னமோ 70 வருஷத்துக்கு முன்புதான். அதுவும் மாசேதுங் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியபோதுதான் என்று சொல்ல வேண்டும்... இதில், சீன மக்கள் குடியரசு சர்வதேச அரங்கில் ஏற்று கொள்ளப்பட்டதில் நேருவின் பங்கு அதிகம் என்பதை நாமும் சரி, சீனாவும் சரி மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது.

    சீன அதிபர்

    சீன அதிபர்

    இரு நாடுகளுக்குமே எல்லை பிரச்சனை என்பது தீராத தலைவலியாகவே உள்ளது. சமீபத்தில், காஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சனையாக மாறியபோது, இந்த பிரச்சனையை ஐநாவுக்கு பாகிஸ்தான் கொண்டு சென்றது.. அதனால்தான் சீனா, காஷ்மீர் விவகாரத்துக்கு ஒரு முணுமுணுப்பு தன்மையையும் வெளிப்படுத்தி இருந்தது. அவ்வளவு ஏன், ஜின்பிங் இங்கே மாமல்லபுரத்துக்கு வருவதற்கு முன்புகூட இம்ரான்கான் இவரை பெய்ஜிங்கில் போய் சந்தித்து பேசிவிட்டுதான் வந்தார்.. அதுவும் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கியது பற்றிதான் இவர்கள் 2 பேரும் பேசினார்கள் என்று ஊடகங்களும் அன்று செய்திகளை வெளியிட்டிருந்தது.

    கொரோனாவைரஸ்

    கொரோனாவைரஸ்

    இப்படி சீனாவும் - பாகிஸ்தானும் ஒன்னுக்குள்ள ஒன்னாக இருந்தவர்களிடம் இன்று மாறுதல் தென்படுகிறது.. அதேசமயம் இந்தியாவும் - சீனாவும் நெருங்கிவிட்டார்கள் என்றே தெரிகிறது.. இதனை சில செயல்பாடுகளிலும் நம்மால் உணர முடிகிறது.. முதலாவதாக, கொரோனாவைரஸ் பாதிப்பில் இந்தியாவும் சீனாவும் இந்த நோயை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன... சீனாவின் வூகானில்தான் இந்த தொற்று பரவி, அது பிறகு உலக நாடுகளை தொற்றி கொண்டு அதன் பாதிப்பு 9 லட்சத்தை எட்டி வருகிறது.. 46 ஆயிரம் உயிர்பலி வாங்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது சீனாவின் போட்டி நாடுகள் தான்...

    கருத்து சொல்லவில்லை

    கருத்து சொல்லவில்லை

    அதனால் ஏற்கனவே கடுப்பில் உள்ள அந்த நாடுகள் இந்த கொரோனா தொற்று பரவலால் மேலும் எரிச்சலில் உள்ளனர்.. இப்படி வைரஸை பரப்பிவிட்டதே சீனாதான் என்றும், அது சொல்லும் கணக்குகூட பொய் என்றும் குற்றம்சாட்டி வருகின்றன.. ஆனால் இதற்கு இந்தியா வாயே திறக்கவில்லை.. எந்த கருத்தையும் சொல்லவில்லை.. மாறாக கொரோனாவை ஒழிக்க சீனாவுடன் இணைந்து இந்தியா செயல்பட்டு வருகிறது.. இது முக்கியமாக கவனிக்கப்பட கூடிய சம்பவமாகும்!

    ஜெய்சங்கர்

    ஜெய்சங்கர்

    அடுத்ததாக, நம்முடைய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவின் வெளியுறவு அமைச்சருடன் உரையாடி உள்ளார்... இதனையடுத்துதான் இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையில் ஏர்-இந்தியா ஒரு சரக்கு விமான சேவையை தொடங்கி உள்ளதாக அரசு போனவாரம் அறிவித்தது... முக்கியமான மருத்துவ உபகரணங்கள், பொருட்களை கொண்டு செல்ல இந்த சேவை பயன்படுகிறது.. உலக நாடுகள் சீனா மீது கோபத்தில் உள்ள நேரம், இந்தியா இப்படி ஒரு விவகாரத்தை கையில் எடுத்துள்ளதுதான் அடுத்த ஆச்சரியம்.. அப்படியானால், கொரோனா வைரஸ் பரப்பிவிட்டதற்கு சீனா பொறுப்பல்ல என்பதை இந்தியா உணர்த்துகிறதா என்ற சந்தேகத்தையும் சீன எதிர்ப்பு நாடுகளுக்கு எழுப்பி உள்ளது. இதுவும் கவனிக்கத்தக்கதே!

    தலைகீழ் மாற்றம்

    தலைகீழ் மாற்றம்

    இந்த சமயத்தில்தான் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை அவசரமாக கருத்தில் கொள்ளுமாறு மார்ச் மாதம் பாகிஸ்தான் ஐநா பாதுகாப்பு குழுவுக்கு கடிதம் எழுதியது.. ஆனால் பாகிஸ்தான் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது... 2 மாசத்துக்கு முன்பு வரை காஷ்மீர் விவகாரம் குறித்து புகார் சொன்னது பாகிஸ்தான்.. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது... சீனாவிடம் மாற்றம் தென்பட ஆரம்பித்துள்ளது... சீனா இந்தியா பக்கம் சாய தொடங்கி உள்ளது. இது பாகிஸ்தான் உட்பட சீன எதிர்ப்பு நாடுகளுக்கே கொஞ்சம் ஷாக்தான்!

    பொருளாதாரம்

    பொருளாதாரம்

    சீனாவின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கும்? 2000-லேயே சீன பொருளாதாரமானது, இந்திய பொருளாதாரத்தைவிட இரண்டரை மடங்கு பெரிதாகிவிட்டது.. அது இந்த 15 வருஷத்துக்குள் 5 மடங்கு வளர்ந்தும்விட்டது. ஆனால், சமீபகாலமாக அமெரிக்காவுடன் வர்த்தக உறவில் சுமூக போக்கு இல்லாதது ஒரு விரிசல் தன்மையை ஏற்படுத்தி உள்ளது... இந்த விரிசலை இந்தியாவுடன் உறவு வைத்து சரிக்கட்ட சீனா நினைக்கிறது. உலகத்திலேயே நுகர்வோர் சந்தையில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது... இதனால் தனது வியாபாரத்தை பெருக்கவே சீனா கண்டிப்பாக முயலும்... அதற்காகவே மிக பெரிய இந்திய பொருளாதார சந்தையை பயன்படுத்த நினைத்து, உறவை பலப்படுத்த முன்வந்துள்ளதாகவும் இதை எடுத்து கொள்ளலாம்.

    நெருக்கடி

    நெருக்கடி

    அதேபோல, இந்தியாவுக்கும் அவசியம், தேவை நிறையவே உள்ளது... 2000-ல் ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி இன்று உலகம் முழுவதும் கவ்வி உள்ள நிலையில், இந்தியா பின்னுக்கு உள்ளது... கொரோனா வைரஸ் பரவலால் பொருளாதாரம் மேலும் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.. இவை அனைத்தையும் சரிக்கட்ட வேண்டிய பொறுப்பில் இந்தியா உள்ளது... இப்படிப்பட்ட சமயத்தில்தான், இவ்வளவு காலம், இந்தியா மீது ஏற்கனவே சீனா வைத்திருந்த மோசமான புரிதல் தகர்ந்து விழ தொடங்கி உள்ளது.

    சந்தேக பார்வை

    சந்தேக பார்வை

    அதே சமயம்.. சீனாவை நாம் முழுசுமாக நம்ப முடியாமலும் உள்ளது. அன்று, சீனா - இந்தியா நல்லுறவை அதிகம் நேசித்தவர் நேருதான். ஆனால் காஷ்மீர், அருணாசலபிரதேச விவகாரத்தில் சீனா செய்த நம்பிக்கை துரோகம் நேருவின் கனவை அன்றே தகர்த்துவிட்டது. முதுகில் அல்ல, நேருவின் நெஞ்சிலேயே நேரடியாக குத்திவிட்டதால்தான், எப்பவுமே சீனா மீது ஒரு சந்தேகப் பார்வையை வைக்க வேண்டியுள்ளது.

    ஆசிய அரசியல்

    ஆசிய அரசியல்

    இந்தியா இப்போது சீனாவுடன் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்... இல்லாவிட்டால் இந்தியாவின் தொழில் வளர்ச்சி நிலை குலையும்... வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் சூழலும் உருவாகலாம்.. வேண்டுமானாலும் நாட்டில் உள்ள ஒருசில பெரும் முதலாளிகளுக்கு இன்னும் லாபகரமான விஷயங்கள் வரலாம்! எனினும்.. பலகாலம் நண்பனான பாகிஸ்தானை சீனா கழட்டிவிட ஆரம்பித்துள்ளதும், இந்தியாவுடன் நெருக்கத்தை கூட்டி வருவதும்.. "ஆசிய அரசியலை" திசை திருப்பி வைத்து வருகிறது!!!

    English summary
    will india and china join hands and chase pakistan from the world politics
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X