• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மாமல்லபுரத்தில் போட்ட வலுவான அஸ்திவாரம்.. லாபம் யாருக்கு.. இந்தியாவுக்கா.. சீனாவுக்கா?

|
  India Rich List 2019 : Mukesh Ambani dominates : போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்-வீடியோ

  சென்னை: வர்த்தக பங்காளியான சீனாவுடன் இந்தியா இன்று கைகோர்த்துள்ளது.. உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த சந்திப்பின் நோக்கம் என்ன? இதன் தாக்கம் என்ன? விளைவு என்ன? வீரியங்கள் என்ன? என்பதெல்லாம் உடனடியாக தெரியவில்லை..போகப் போகத்தான் தெரியும்.

  அடிப்படையில் இந்தியாவும், சீனாவும் ஒன்றுதான்.. இரண்டுமே பழமையான நாடுகள்.. இரண்டுமே அதிக மக்கள் தொகை கொண்டவை.. இரண்டுமே விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நாடுகள். இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடை, தொழில் உட்பட கலாச்சார ஒற்றுமை நிறையவே உள்ளவை. இரண்டுமே 2 ஆயிரம் ஆண்டு பழமையில் ஊறித்திளைத்தவை என்றாலும், அரசியல் உறவு என்னமோ 70 வருஷத்துக்கு முன்புதான். அதுவும் மாசேதுங் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியபோதுதான் என்று சொல்ல வேண்டும்.

  இதில், சீன மக்கள் குடியரசு சர்வதேச அரங்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் நேருவின் பங்கு அதிகம் என்பதை நாமும் சரி, சீனாவும் சரி மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது. அதே சமயத்தில், இன்றைய மோடி - ஜின்பிங் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பினால் எத்தகைய மாற்றங்கள் நிகழ போகின்றன? தாக்கங்கள் என்னென்ன என்பதை பட்டியலிட்டு நாம் சொல்லிவிட முடியாது. 2 மணி நேரத்தில் உட்கார்ந்து பேசி தீர்க்கக்கூடிய பிரச்சனைகளும் இல்லை அவை.

  பழந்தமிழர் பெருமையை சீனா அதிபருக்கு மொழிபெயர்த்த தமிழ் மகன் மதுசூதனன் ரவீந்தரன்!

  சர்வதேச பிரச்சனை

  சர்வதேச பிரச்சனை

  இரு நாடுகளுக்குமே எல்லை பிரச்சனை ஒரு தலைவலியாகவே உள்ளது. அதேபோல, காஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சனையாக மாறி உள்ளது. இந்த பிரச்சனையை பாகிஸ்தான் ஐநாவுக்கு கொண்டு செல்லவும் பிரச்சனை தீவிரம் அதிகமாக வெடித்தது. அதனால்தான் சீனா, காஷ்மீர் விவகாரத்துக்கு ஒரு முணுமுணுப்பு தன்மையை வெளிப்படுத்தியது. அந்த முணுமுணுப்புக்கு, இந்தியா இப்போது முற்றுப்புள்ளி வைக்க முயலுமா என்பதுதான் கேள்வியே!

  இம்ரான்கான்

  இம்ரான்கான்

  ஏனென்றால், ஜின்பிங் இங்கே வருவதற்கு முன்பு, இம்ரான் கான், இவரை பெய்ஜிங்கில் சந்தித்து பேசியிருக்கிறார். அதுவும் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது பற்றிதான் பேசியதாகவும், அது தொடர்பாக ஜின்பிங்கிடம் இம்ரான் கான் கேள்வி எழுப்பியதாகவும் செய்திகள் வந்தன. காஷ்மீர் விவகாரத்தில் எல்லை மீறும் போக்கை இந்தியா கைவிட வேண்டும் என்று இம்ரான்கான் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் கசிந்த நிலையில், சீனா எந்த மாதிரியாக இந்த விஷயத்தை அணுக போகிறது என்பதை இனிமேல்தான் நாம் உற்று நோக்க வேண்டும்.

  லாபங்கள்

  லாபங்கள்

  அதே சமயத்தில், இரு நாடுகளும் சந்தித்து கொள்கின்றன, பேசிக் கொள்கின்றன என்றால், அங்கே தங்கள் நாட்டுக்கு என்ன மாதிரியான லாபங்கள், சாதகங்கள், பயன்கள் கிடைக்கும் என்பதில்தான் கவனம் செலுத்தப்படும். அந்த வகையில், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் பரஸ்பர வியாபார நோக்கம் அதிகமாகவே இருக்கிறது.

  விரிசல் தன்மை

  விரிசல் தன்மை

  2000-லேயே சீனப் பொருளாதாரமானது, இந்திய பொருளாதாரத்தைவிட இரண்டரை மடங்கு பெரிதாகிவிட்டது. அது இந்த 15 வருஷத்துக்குள் 5 மடங்கு வளர்ந்தும்விட்டது. ஆனால், அமெரிக்காவுடன் வர்த்தக உறவில் சுமூக போக்கு இல்லாதது ஒரு விரிசல் தன்மையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விரிசலை இந்தியாவுடன் உறவு வைத்து சரிக்கட்ட சீனா நினைக்கிறது. அதற்காகவே மிகப் பெரிய இந்திய பொருளாதார சந்தையை பயன்படுத்த நினைத்து, உறவை பலப்படுத்த முன்வந்துள்ளது.

  நெருக்கடி

  நெருக்கடி

  அதேபோல, இந்தியாவுக்கும் இதே அவசியம் இருக்கிறது. 2000-ல் ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி இன்று உலகம் முழுவதும் கவ்வி உள்ள நிலையில், இந்தியா இன்று பின்னுக்கு உள்ளது. இன்றைக்கு சரிக்கு சமமாக உட்கார்ந்து பேசிவிடுவதால் மட்டும், சீனாவும், இந்தியாவும் ஒன்றாகிவிட முடியாது. ஆனால், சீனா அளவுக்கு இந்தியா வளர்ந்து நிற்க வேண்டுமானால், அதற்கான அஸ்திவாரத்தை பலமாக நாம் போட வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவை எந்த அளவுக்கு பலம்வாய்ந்த நாடாக மோடி வெளிப்படுத்துகிறாரோ, அந்த அளவுக்கு சீனா நம் வர்த்தகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும். அதனால் மோடி நடத்தும் பேச்சுவார்த்தையில்தான் நம் நாட்டின் எதிர்கால வளர்ச்சியே அடங்கி உள்ளது.

  மோசமான புரிதல்

  மோசமான புரிதல்

  அப்படியானால் சீன அதிபரின் சந்திப்பின் மூலம் சாதகங்கள் ஏதாவது நிகழ்ந்துள்ளதா என்று பார்த்தால், அது நிறையவே தென்படுகின்றன. முதலில், தமிழகத்தின் பெருமை, கலாச்சாரம் இன்று உலக அளவில் மேலும் வெளிச்சம் கூடியுள்ளது. மற்றொன்று, அமெரிக்காவை போலவே, சீனாவையும் மோடி அரசு திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதாவது இந்தியா மீது ஏற்கனவே சீனா வைத்திருந்த மோசமான புரிதல் தகர்ந்து விழ தொடங்கி உள்ளது. இந்தியாவை பற்றின பார்வையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. இரு நாட்டு வாணிப உறவு செழிக்க ஒரு வலுவான, உறுதியான பாதை போடப்பட்டுள்ளது.. கசப்புணர்ச்சி நீங்கி உள்ளது... இப்போதைக்கு பெரிய அளவு ஒப்பந்தங்கள், புரிந்துணர்வுகள் நிகழா விட்டாலும், இனி வருங்காலத்தில் அவையெல்லாம் நடப்பதற்கான ஒரு துவக்க புள்ளி இன்று மாமல்லபுரத்தில் துவங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் வெளிவிவகார கொள்கையை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை.

  ஜவஹர்லால் நேரு

  ஜவஹர்லால் நேரு

  ஆனால் அதே சமயம்.. சீனாவை முழுதுமாக நம்ப முடியாமலும் உள்ளது. அன்று, சீனா - இந்தியா நல்லுறவை அதிகம் நேசித்தவர் நேருதான். ஆனால் காஷ்மீர், அருணாசலபிரதேச விவகாரத்தில் சீனா செய்த நம்பிக்கை துரோகம் நேருவின் கனவை அன்றே தகர்த்துவிட்டது. முதுகில் அல்ல, நேருவின் நெஞ்சிலேயே நேரடியாக குத்திவிட்டதால்தான், எப்பவுமே சீனா மீது ஒரு சந்தேகப் பார்வையை வைக்க வேண்டியுள்ளது.

  சீனா

  சீனா

  எனினும், வர்த்தக பங்காளியான சீனாவை இந்தியா எப்படி எதிர்கொள்ள போகிறது? இப்போது நடந்து முடிந்துள்ள இந்த சந்திப்பினை இரு நாடுகளும் எப்படி பயன்படுத்தி கொள்ள போகின்றன? அப்படி ஒரு வலுவான உறவு இரு நாட்டுக்கும் இடையே நிகழுமானால், பாகிஸ்தானின் நிலைப்பாடு என்ன மாதிரியாக இருக்கும்? பாகிஸ்தான் மீதான சீனாவின் பிடிப்பு தளருமா? இந்தியாவின் எல்லை நாடுகளின் மீதான பிரச்சனைகள் அகலுமா? என்ற கேள்விகளுக்கு விடைகளை இரு நாட்டு தலைவர்களின் அணுகுமுறைகள்தான் நமக்கு உணர்த்த முடியும். ஆனால், அமெரிக்கா, சீனா என்ற இரு மெகா நாடுகளையும் இந்தியா பக்கம் இன்று திரும்பி பார்க்க வைத்த மோடியை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

   
   
   
  English summary
  Will India-China Trade Relations Be Further Strengthened and What does it mean to meet the leaders of the two countries?
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X