சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 நாள் முன் வந்த அந்த செய்தி.. அரசியலில் புது கூட்டணி அமைக்க ரஜினி - கமல் பிளானா? பின்னணி இதுதான்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் நடிகர் ரஜினிகாந்தும் ஒன்றாக இணைந்து அரசியல் செய்வார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Rajini-Kamal's political plan | ரஜினி - கமல் பிளானா? பின்னணி இதுதான்!

    சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் நடிகர் ரஜினிகாந்தும் ஒன்றாக இணைந்து அரசியல் செய்வார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கான திரைமறைவு திட்டங்கள் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறார். அதே சமயம் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு இன்னும் அரசியலுக்கு வரவில்லை.

    முதலில் பாஜக, அதிமுக உடன் ரஜினி இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இரண்டு கட்சிகளையும் ரஜினி விமர்சித்து வருகிறார். அதிமுக மற்றும் ரஜினிகாந்த் இடையே கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது.

    இந்தியாவிற்கு வாங்க.. அழைப்பு விடுத்த மோடி.. ஓகே சொன்ன கோத்தபய ராஜபக்சே.. அடுத்த வாரம் வருகிறார்!இந்தியாவிற்கு வாங்க.. அழைப்பு விடுத்த மோடி.. ஓகே சொன்ன கோத்தபய ராஜபக்சே.. அடுத்த வாரம் வருகிறார்!

    எப்படி

    எப்படி

    இந்த நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் கமல் 60 விழா நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு தமிழக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அரசியலில் அதிசயங்கள் நடந்துள்ளது. இனி வரும் காலங்களிலும் அரசியல் அதிசயங்கள் நடக்கும் என்று குறிப்பிட்டார்.

    என்ன செய்திகள்

    என்ன செய்திகள்

    இதையடுத்து நடிகர் ரஜினியும், கமல்ஹாசனும் கூட்டணி குறித்து பேசி வருகிறார்கள். இரண்டு தரப்பை சேர்ந்த தலைவர்கள் சிலர் இதுகுறித்து ஆலோசித்து வருகிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தால் அரசியலில் பெரிய சக்தியாக உருவெடுப்பார்கள் என்று கூறப்பட்டது.

    ஆனால் அதிகாரபூர்வ செய்தி

    ஆனால் அதிகாரபூர்வ செய்தி

    ஆனால் இது தொடர்பாக அதிகாரபூர்வ செய்தி எதுவும் வெளியாகவில்லை. ஆனால் உண்மையில் இரண்டு தரப்பை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளும் இது தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன் பேசியதாக செய்திகள் வந்தது. அதேபோல் ரஜினியும், கமல்ஹாசனும், கமல் 60 விழாவில் இது தொடர்பாக பேசி உள்ளனர். ஆகவே பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான் என்கிறார்கள்.

    ரஜினி என்ன சொன்னார்

    ரஜினி என்ன சொன்னார்

    இதனால்தான் நேற்று கமல்ஹாசன் தமிழகத்தை மேம்படுத்துவதற்காக நானும் ரஜினியும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்பேன். அதுதான் நடக்க வேண்டும் என்று இருந்தால் கண்டிப்பாக நடக்கும். நானும் ரஜினியும் இணைய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என்றார்.

    ரஜினி பதில்

    ரஜினி பதில்

    இந்நிலையில் ரஜினி இதுகுறித்து கருத்து தெரிவித்தார், மக்கள் நலனுக்காக நானும் கமலும் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்றார். அரசியலில் என்ன மாதிரியான அதிசயங்கள் வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறினார்.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    இரண்டு தரப்பும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்தான் இந்த பேட்டி வெளியானது என்று கூறுகிறார்கள். சினிமா துறையில் இரண்டு தலைவர்களும் பெரும் நெருக்கமானவர்கள். அதேபோல் அரசியலிலும் இவர்கள் ஒன்றாக இருக்க ஆசைப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    முக்கியமாக நடிகர் ரஜினிகாந்த் திமுக, அதிமுக, பாஜக என்று எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க விரும்பவில்லை. கமல்ஹாசனும் கூட்டணி வைத்து போட்டியிட விருப்பவில்லை. அதனால் இவர்கள் இணைய அதிகபட்ச வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    Will Kamal Haasan and Rajinikanth join hands together in Tamilnadu Politics?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X