சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இது" மட்டும் நடந்தால்.. திமுகவுக்கு சிக்கல்.. அதிமுகவுக்கும் சறுக்கல்.. ஏபிபி சர்வே சொல்வது என்ன?

கமல், சீமான், தினகரன் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதா

Google Oneindia Tamil News

சென்னை: ஏபிபி சர்வே ஒரு சூப்பர் செய்தியை உணர்த்தி இருக்கிறது.. அது திமுக, அதிமுகவுக்கு சாதகமான விஷயம் மட்டுமல்ல, டிடிவி தினகரன், கமல், சீமானுக்கும் சாதகமான விஷயத்தை சொல்லி உள்ளது.

சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்து கணிப்பை ஏபிபி- சி வோட்டர் வெளியிட்டது.. இதில் திமுக அணி 158 முதல் 166 இடங்களை கைப்பற்றக்கூடும் என்கிறது அந்த கணிப்பு.

அதாவது ஸ்டாலின் முதல்வர் ஆகிவிடுவார் என்பதே அந்த முடிவு. அதேசமயம் கூட்டணியில், 1.7% மட்டுமே அதிகமாக பெற்று 41.1% வாக்குகளை பெறும் என்றும் சர்வே உணர்த்துகிறது.

கூட்டணி

கூட்டணி

அதேபோல, அதிமுக கூட்டணியில், 28.7% வாக்குகளை பெறும் என்றும், 60 முதல் 68 இடங்களை அதிமுக அணி கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகவும் சர்வேயில் தெரியவந்துள்ளது.. இது அதிமுகவுக்கு கொஞ்சம் ஷாக்தான்.. ஏற்கனவே பல அதிருப்திகளுக்கு நடுவில்தான் தேர்தலை சந்திக்க உள்ளது.. இந்நிலையில், சர்வேயின் முடிவும் அவ்வளவாக சாதகமாக இல்லாமல் இருக்கிறது.

மநீம

மநீம

இதற்கு காரணம், அதிமுகவின் 43.7% வாக்குகளில் அமமுக 7.8% வாக்குகளை பிரிக்குமாம்... அதேபோல, மிச்சமுள்ள 8 சதவீத வாக்குகளை மநீம, நாம் தமிழர் போன்றவை பிரிக்கக் கூடும்... ஏபிபி சர்வே சொல்லும் ஒரு சூப்பர் செய்தியும் இதுதான்.. அமமுக - கமல் - நாம் தமிழர் இணைந்தால் திமுகவுக்கு மிகப் பெரிய கஷ்டமாகும்.. நஷ்டமாகும்.. அதிமுகவுக்கு பலத்த அடி கிடைக்கும் என்றாலும், திமுகவின் ஓட்டுக்களையும் இவர்கள் பிரிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது..

 நாம் தமிழர்

நாம் தமிழர்

அமமுகவுக்கு 6 சீட் வரை கிடைக்குமாம். கமலுக்கு 4 சீட் கிடைக்கும்.. நாம் தமிழருக்கு தனியாக தெரியவில்லை என்றாலும், எப்படியும் 2 சதவீத வாக்குகள் பெறலாம். மொத்தமாக பார்த்தால் இவர்கள் 3 பேரும் சேர்த்து 12 முதல் 15 சதவீத வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் திமுக, அதிமுக ரெண்டு மெகா கட்சிகளுக்குமே கஷ்டம்தான்... ஒருவேளை அமமுக- அதிமுக இணைப்பு நடந்துவிட்டால், இதில் திமுகவுக்கு மேலும் சிக்கல் அதிகரிக்கும்.. கடுமையான போட்டியை எதிர்கொள்ள நேரிடும்.. அதாவது, தினகரன், கமல், சீமான் சேர்ந்தால், இரு அணிகளிடையே வாக்கு சதவீதமானது பெருத்த அடிவாங்கும் என்பதே இந்த சர்வே சொல்லும் உண்மை.

 பரபரப்பு

பரபரப்பு

ஏற்கனவே, இவர்கள் 3 பேரும் இணைவது போன்ற பேச்சு எழுந்தது.. பிறகு அதே வேகத்தில் அடங்கியும் விட்டது.. அமமுகவை பொறுத்தவரை சசிகலா ரிலீஸ் ஆகி வந்தால்தான், ஒரு முடிவு எட்டப்படும்.. அதிமுகவுடன் அமமுக இணையும் சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன.. அந்த வகையில் அமமுக, கமலுடன் இணைவது சந்தேகம்தான். அதேபோல, சீமான் கமலுடன் ஒத்து வருவாரா என்று தெரியவில்லை.. தனித்து போட்டி என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டதாலும், கமலை வம்பிழுத்து பேட்டி தந்ததாலும், கூட்டணி அமையுமா என்பதும் சந்தேகம்தான்!

English summary
Will Kamal, Seeman, TTV Dinakaran joins in Assembly Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X