சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் கமல்ஹாசனா? கே.எஸ் அழகிரி பகீர் பதில்!

எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சேர்க்கப்படுமா என்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சேர்க்கப்படுமா என்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

தேசிய அரசியல் களத்தில் கமல்ஹாசன் தற்போது மிக முக்கியமான நபராக உருவெடுத்து இருக்கிறார். கோட்சே மீதான கமல்ஹாசனின் விமர்சனத்தை தொடர்ந்து அவர் தேசிய அளவில் கவனத்திற்கு உள்ளாகி உள்ளார். முக்கியமாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் அவரை கவனிக்க தொடங்கி இருக்கிறது.

Will Kamal takes a ride in Opponents alliance, K S Alagiri answers

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைவீர்களா என்பது குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

ஆட்சி நம்ம கிட்டதான் இருக்கும்.. அமைச்சரவையை மாத்தப் போறாங்க.. உற்சாகத்தில் அதிமுக!ஆட்சி நம்ம கிட்டதான் இருக்கும்.. அமைச்சரவையை மாத்தப் போறாங்க.. உற்சாகத்தில் அதிமுக!

கமல்ஹாசன் தனது பேட்டியில், எனக்கு எதிர்கட்சிகளிடம் இருந்து அழைப்பு வரவில்லை. கூட்டணியில் இணைவது குறித்து யாரும் என்னிடம் பேசவில்லை. அது தொடர்பாக ஆலோசனைகளை நான் செய்யவில்லை.

எதிர்க்கட்சிகள் ஆலோசனைக்கு அழைத்தால் கலந்து கொள்வேன். தேர்தலுக்கு பின் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று, கமல்ஹாசன் குறிப்பிட்டார்.எதிர்க்கட்சிகள் வரும் மே 21ம் தேதி அல்லது மே 23ம் தேதி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் பேட்டிக்கு தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார். அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறப்போகிறவர்களைதான் காங்கிரஸ், எதிர்க்கட்சி கூட்டத்திற்கு அழைத்திருக்கிறார்கள். யாரெல்லாம் வெற்றி பெறுவார்களோ அவர்களை எல்லாம் அழைத்து இருக்கிறோம்.

அதனால்தான் கமலை அழைக்கவில்லை. கமல் கருத்துக்கு மாற்றுக்கருத்து தெரிவிக்கலாம், வன்முறையில் ஈடுபடக்கூடாது. அதை காங்கிரஸ் அனுமதிக்காது, என்று அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

English summary
Will Kamal takes a ride in Opponents alliance, TN Congress Chief K S Alagiri answers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X