சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அவருடன்" சேரலாமா.. நினைப்புக்கு "ஆப்பு" வைத்த அந்த சர்வே.. என்ன நடக்கிறது அறிவாலயத்தில்..?!

திமுகவுடன் கமல் கூட்டணி வைப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு பக்கம் காங்கிரஸ் கமலை கூட்டணிக்குள் அழைத்து கொண்டிருக்கிறது.. இன்னொரு பக்கம் கமலும் 3வது அணிக்கு வியூகம் அமைத்து வருகிறார்.. இப்படிப்பட்ட சமயத்தில்தான் திமுக சத்தமில்லாமல் ஒரு காரியத்தை செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன..!

2 மாதத்திற்கு முன்பு திமுக கூட்டணியில் கமல் இணைய போவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் உதயநிதி மூலம் மறைமுகமாக நடந்து வருவதாகவும் கூறப்பட்டது..

ஆனால் இதனை கமல் உடனடியாக மறுத்துவிட்டார். அதேசமயம் திமுக தரப்பில் இதை பற்றின எந்த பேச்சும் அதற்கு பிறகு எழவே இல்லை. மேலும், கமலை, தங்கள் கட்சிக்குள் இழுத்து போட்டு கொண்டால், வாக்குகள் சிதறாது என்ற கணக்கையும் திமுக போட்டதை மறுக்க முடியாது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இதற்கு நடுவில் காங்கிரஸ் கூட்டணி விவகாரம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.. புதுச்சேரியில் திமுக போட்டியிட போவதாக சொல்லி, ஒரு கலக்கத்தை தந்து, பிறகு ஒருவழியாக அந்த குழப்பம் ஒரு முடிவுக்கு வந்தது. இப்போது திமுக கூட்டணிக்குள் காங்கிரஸ் இருப்பது உறுதியாகியும் விட்டது. இந்த சமயத்தில், கமலுக்கு அழைப்பு விடுத்து வந்து கொண்டிருக்கிறது.

 சீட் பிரச்சனை

சீட் பிரச்சனை

கடந்த எம்பி தேர்தலின்போதே கேஎஸ் அழகிரி, கமலை தங்கள் கூட்டணியில் இணையுமாறு பகிரங்கமாகவே கேட்டு கொண்டார்.. இப்போதும் விடாமல் கமலை துரத்தி கொண்டிருக்கிறது காங்கிரஸ்.. இதற்கு காரணம், ஒருவேளை சீட் பிரச்சனை ஏதாவது எழுந்தால், கமலுடன் இணைந்து கூட்டணி வைக்கலாம் என்ற ஒரு திட்டமும் காங்கிரசுக்கு உள்ளதாம்.. ஆனால், காங்கிரசுடன் நல்ல நட்பை வைத்துள்ள கமல் இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார்.. ஸ்டாலினோ, "அது அழகிரியின் சொந்த கருத்து" என்றும் சொல்லி விட்டார்.

 சர்வே

சர்வே

எனினும், சைலண்ட்டாக ஒரு காரியத்தை திமுக செய்துள்ளது.. அதன்படி, மநீமய்யத்திற்கு உள்ள செல்வாக்கு, கள நிலவரம், திட்டங்கள், உறுப்பினர்கள் பலம், போன்றவை குறித்து ஒரு சர்வே எடுக்க முடிவு செய்துள்ளது.. மேலும் கமலின் பிரச்சாரத்திற்கு கூட்டம் அதிகமாக வருவதையும் காண முடிகிறது.. அத்துடன் கமலின் சில அறிவிப்புகள் நூதனமாகவும், சாமான்ய மக்களால் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் உள்ளதால், பெரும் வரவேற்பினையும் பெற்று வருகிறது.

 முற்றுப்புள்ளி?

முற்றுப்புள்ளி?

எனவே, இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் திமுக ஒரு சர்வே எடுக்க முடிவு செய்ததாம்.. அதன்படி ஐபேக் டீம் எடுத்த சர்வேயின்படி, இந்த 2 மாசமாகவே வெறும் 2 சதவீத மக்களின் ஆதரவைதான் மக்கள்தான் ஆதரவை தான் கமல் பெற்றிருக்கிறாராம்.. இந்த விஷயம் திமுக தலைமைக்கு சென்றுள்ளது.. அதற்கு பிறகுதான் கமலுடன் கூட்டணி என்ற பேச்சுவார்த்தைக்கே அழுத்தமான முற்றுப்புள்ளியை ஸ்டாலின் வைத்ததாக சொல்கிறார்கள்..!

English summary
Will Kamalhasan alliance with DMK in the Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X