சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அடி தூள்".. நச்சுன்னு அமைய போகும் கூட்டணி.. சிக்னலும் கிடைச்சாச்சு போல.. மகிழ்ச்சியில் மய்யம்!

திமுகவுடன் விரைவில் கமல் கூட்டணி வைப்பார் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை:திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்க போவதாக ஒரு பேச்சு எழுந்தபடியே உள்ள நிலையில், தற்போது அது ஊர்ஜிதமாகியும் வருவது போல தெரிகிறது.

இத்தனை காலமும் இல்லாமல், இந்த 10 நாட்களாகவே, திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கை கோர்க்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது.. இந்த விஷயத்தை கமலிடம் நேரடியாக கேட்கப்பட்டதற்கு மறுப்பு தெரிவித்தார்.

ஆனால், திமுக தரப்பில் இதற்கு மறுப்பு சொல்லப்படவில்லை.. சென்னைக்கு அருகே உள்ள ஒரு பண்ணை வீட்டில் உதயநிதி ஸ்டாலினும், கமலும் ஏற்கனவே சந்தித்து பேசி கொண்டார்களாம்.. டிவி ஓனருக்கு சொந்தமான பண்ணை வீடாம் இது.. உதயநிதியிடம் கமல் 40 சீட் கேட்டாராம்.. அதற்கு அதிகபட்சமாக 25 சீட் தருகிறோம் என்று உதயநிதியும் சொன்னாராம்.

 கமல்

கமல்

இதற்கு முக்கிய காரணம், சிறுபான்மையினர் ஓட்டுகள் சிதறிவிடும் என்பதாலேயே கமலை தம்முடன் வைத்துக் கொள்ள வேண்டும்' என்பது திமுகவின் திட்டமாக உள்ளது.. சீட், தொகுதி விஷயங்களில் கூட முன்னே பின்னே உடன்பாடு ஏற்பட்டுவிடும், ஆனால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில்தான் சிக்கல் வரும் என்றுகூட அரசியல் நோக்கர்கள் இதை பற்றி கருத்து சொல்லி இருந்தனர்.

உதயநிதி

உதயநிதி

இந்நிலையில் திருச்சி பிரச்சாரம் தமிழக அரசியலின் கவனத்தை திசை திருப்பி உள்ளது.. நேற்று முன்தினம் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலும், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியும் ஒரே நாளில் திருச்சியில் தனித்தனியாக பிரச்சாரம் செய்தனர்... இதற்காக திருவெறும்பூர் பகுதியில் சுமார் 2 கிமீ தூரத்திற்கு 2 கட்சி கொடிகளும் ஒரே வரிசையில் அணி வகுத்திருந்தன.

வருங்காலம்

வருங்காலம்

இது ஏதேச்சையாக நடந்திருக்கலாம் என்றே நாம் நம்பினாலும், வருங்காலத்தில் இவை நிஜமாகவே நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளதாக தெரிகிறது.. இதற்கு முக்கிய காரணம், கமல், உதயநிதி 2 பேருமே அதிமுகவின் ஊழலை பற்றியே அன்றைய தினம் பிரதானமாக பேசினார்கள்.. லிஸ்ட் போட்டு வாசித்தனர்.. இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால், கமலை திமுக விமர்சிக்கவில்லை.. திமுகவை கமல் விமர்சிக்கவில்லை... இருவரும் சேர்ந்து அதிமுகவைதான் டார்கெட் செய்து பேசினார்கள்.

 கூட்டணி

கூட்டணி

இது எல்லாவற்றிற்கும் மேலாக, மநீமவும் திராவிடக் கட்சிதான் என்கிற கமலின் வார்த்தைகளை சாதாரணமாக எடுத்து கொண்டு கடந்து போய்விட முடியாது.. அதுமட்டுமல்ல, இது வெறும் வார்த்தைகள் கிடையாது, கூட்டணிக்கான சமிக்ஞைகள் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்... ஓட்டு வங்கி பிரியக்கூடாது என்பதற்காக, திமுக கமலை உள்ளே இழுத்து கொள்ள பார்க்கிறது என்றால், மய்யத்துக்கு உள்ளேயே திமுகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்துகிறார்களாம்.

 அச்சாரம்

அச்சாரம்

முன்னாள் காவல்துறை அதிகாரியான மவுரியா, சிகேகுமரவேல் உள்ளிட்ட மநீம முக்கிய நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணியை விரும்புவதாகவும், தங்கள் விருப்பத்தை கமலிடம் சொன்னதாகவும் கூறப்படுகிறது. அதனால், இப்போதைக்கு கள சூழலை பொறுத்தவரை மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார்கள்.. அதற்கான அச்சாரமாகத்தான் இந்த திருச்சி பிரச்சாரம் அமைந்ததோ என்றும் சந்தேகம் வலுத்து வருகிறது.

English summary
Will Kamalhasan MNM Join in DMK in Assembly Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X