சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடியே முடிவெடுத்துட்டார்.. ஸ்கெட்ச்சும் போட்டாச்சு.. "அவர்"தான் வர போகிறார்.. மிரட்சியில் கட்சிகள்

ஜெகதீஷ் பாண்டியனை குமரியில் நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளதாம்

Google Oneindia Tamil News

சென்னை: திராவிட மண்ணின் கலரை பாஜக மாற்ற போகிறதா? தாமரை இங்கு மலர போகிறதா? என்ற எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது... இதற்கான பிள்ளையார் சுழி கன்னியாகுமரியில் போடப்பட்டு வருகிறதாம்.. இதை பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இணைந்து செய்து வருகிறார்களாம். இதுதான் பரபரப்பாக பேசப்படுகிறது.

கன்னியாகுமரிக்கு இடைத்தேர்தல் வரவிருக்கிறது... அங்கு பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளது.. ஏற்கனவே அக்கட்சி சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் தான் போட்டியிட்டு வந்தார்.. இந்த முறையும் போட்டியிட தயாராக உள்ளார்.

ஆனால், அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவல் கசிந்து வருகிறது. இதற்கு காரணம், குளச்சல் துறைமுகம் விவகாரத்தில் கன்னியாகுமரி மக்களின் அதிருப்தியை நிறையவே சம்பாதித்து வைத்துள்ளார் என்பதே.

பாஜக

பாஜக

எனவே, வேறு ஒரு வேட்பாளரை பாஜக முடிவு செய்துவிட்டதாம்.. அதுவும் பிரதமரே அந்த வேட்பாளர் யார் என்றும் முடிவு செய்துவிட்டாராம்.. அவர்தான் பிரதமரின் நிழல்வேட்பாளர் என்றும் சொல்கிறார்கள்.. அவர் தான் ஜெகதீஷ் பாண்டியன்!

 மோடி ஆட்சி

மோடி ஆட்சி

இவர் ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.. சொந்த ஊர் மதுரை.. குஜராத்தில் மோடியின் ஆட்சியின் போது அங்கு தலைமை செயலகம், மாவட்ட வாரியாக சிறந்த ஐஏஎஸ் அதிகாரியாக வேலை பார்த்தவர்.. அப்போதிருந்தே மோடியின் நன்மதிப்பை நேரடியாக பெற்றவராம். அதாவது அந்த மாநிலத்தில் எந்த திட்டங்கள் புதிதாக வரையறை செய்தாலும் சரி, அடிக்கல் நாட்டினாலும் சரி, மோடியும் இவரும் ஒன்றாக பிரார்த்தனை செய்த பிறகுதான் எந்த நிகழ்ச்சிக்கும் செல்வார்களாம்.. அவ்வளவு நெருக்கம் வாய்ந்தவர்கள்.

ஜெய்சங்கர்

ஜெய்சங்கர்

இதில் இன்னொரு ஸ்பெஷலும் உள்ளது.. ஜெகதீஷ் பாண்டியனின் க்ளோஸ் நண்பர்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்.. இவர்கள் 2 பேருமே ஒன்றாக வேலை பார்த்தவர்கள்.. இதைதவிர இன்னொரு ஸ்பெஷலும் உள்ளது.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவரது நெருங்கிய நண்பராம்... ஆக, இவ்வளவு ஸ்பெஷல்களுடன் திகழும் ஜெகதீஷை தான் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக்க முடிவு செய்து விட்டாராம் மோடி!

 அமைச்சர் பதவி

அமைச்சர் பதவி

இவரை வேட்பாளராக்கி.. அதன்மூலம் எம்பி ஆக்கி.. அதன்மூலம் மந்திரி பதவியையும் வழங்க முடிவு செய்ய அமித்ஷாவும், மோடியும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. ஜெகதீஷ் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்... அதிலும் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.. கன்னியாகுமரியை பொறுத்தவரை கிறிஸ்தவ நாடார்கள்தான் அதிகம். அந்த வகையில் ஜெகதீஷ் செம ஆப்ஷன் என்கிறார்கள்.

Recommended Video

    திராவிட மண்ணின் கலரை பாஜக மாற்ற போகிறதா? தாமரை இங்கு மலர போகிறதா? எகிரும் எதிர்பார்ப்பு
     முருகன்

    முருகன்

    இதற்கான முதல்கட்ட வேலைகளையும் தொகுதிக்குள் தொடங்கப்பட்டுள்ளது.. மாநில பாஜக தலைவர் முருகனும் பிரச்சாரத்துக்கு ரெடியாகி விட்டாராம்... கன்னியாகுமரிக்கும் முதன்முறையாக வரப்போகிறாராம்.. இப்படி ஜெகதீஷை முன்னிலைப்படுத்துவதால், பொன் ராதாவை பாஜக கைகழுவிவிட்டதா என்ற சந்தேகம் ஒருபக்கம் எழுந்தாலும், திராவிட மண்ணில் பாஜகவின் நிறம் மாற போகிறதா என்ற கேள்விதான் அதிகமாக எழுகிறது.

    English summary
    Will Kanyakumari see a different candidate from BJP
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X