• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சல்லி சல்லியா நொறுங்கி.. கார்த்தி சிதம்பரம் பட்ட பாடெல்லாம் வீணாயிடுச்சே.. "ஐஸ்" பாஜக.. அப்ப "அதுவா"

Google Oneindia Tamil News

சென்னை: கார்த்தி சிதம்பரத்துக்கு சிக்கல் மேல் சிக்கல் கூடி வரும் நிலையில், அடுத்து அவர் கைதாவாரா? என்ற முணுமுணுப்புகளும் அரசியல் களத்தில் எழுந்து வருகின்றன.

கார்த்தி சிதம்பரம் மீது, ஏற்கனவே 2017ல் ஊழல் வழக்கை சிபிஐ பதிவு செய்தது.. பிறகு அமலாக்க இயக்குனரகமும் இதில் தலையிட்டு, பணமோசடி வழக்கை பதிவு செய்தது..

2018-ல் கைதானார்.. ஆனால், ஒரே மாசத்தில் வெளியே வந்துவிட்டார். இப்போது மீண்டும் கார்த்தி சிதம்பரத்துக்கு சிக்கல்கள் கூடி வருகிறது..

“விசா நடைமுறையே எனக்குத் தெரியாது.. பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை” - கார்த்தி சிதம்பரம் விளக்கம்! “விசா நடைமுறையே எனக்குத் தெரியாது.. பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை” - கார்த்தி சிதம்பரம் விளக்கம்!

 என்ன காரணம்?

என்ன காரணம்?

2010 முதல் 2014 வரை, பஞ்சாபில் மின்சாரத் திட்டத்துக்கான சீனர்கள் இந்தியா வருவதற்கு சட்டவிரோதமாக 250 விசாக்கள் வழங்கப்பட்டதாகவும், அதற்கு ரூ.50 லட்சம் பெற்றதாகவும் சிபிஐ மறுபடியும் வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.. இது வழக்கம்போல் சோதனை என்று எடுத்து கொள்ள முடியவில்லை..

 ஆடிட்டர் கைது

ஆடிட்டர் கைது

காரணம் சோதனை முடிந்துமே சூட்டோடு சூடாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைதானார்.. சீனர்களுக்கு விதிமுறைகளை மீறி விசா வழங்கியதற்கான ஆவணங்கள் கிடைத்ததால்தான், சோதனை நடத்தப்பட்டதாக விளக்கம் தரப்பட்டது.. அதனால்தான், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தின் கீழ் இந்த வழக்கையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.. இதனால் கார்த்திக்கு சிக்கல் அதிகரித்துவிட்டது.. விரைவில், இது தொடர்பாக சம்மன் அனுப்பவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சிபிஐ

சிபிஐ

ஆனால், தன் மீதான சிபிஐ வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தையுமே கார்த்தி சிதம்பரம் மறுத்து வருகிறார்.. "எனக்கு எதுவுமே தெரியாதுது.. நேரடியாகவோ, மறைமுகமாவோ விசா சம்பந்தமாக எனக்கு தொடர்பில்லை.. சிபிஐ சொல்வது அத்தனையும் பொய்.. அத்தனையையும் நான் மறுக்கிறேன்... விசா விஷயத்தில் சீன நபர்கள் யாருக்குமே நான் உதவி செய்யவில்லை.. எல்லாமே என் மீது சொல்லப்படும் வீண்பழி" என்று கார்த்தி சிதம்பரம் கூறியிருந்தார்.

 கொந்தளிப்பு

கொந்தளிப்பு

எனினும் சம்மன் அனுப்பி கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்கும் முடிவில் அதிகாரிகள் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.. மற்றொருபுறம், வேண்டுமென்றே கார்த்தி சிதம்பரத்தின் மீது பொய் புகார் சொல்லி, அவமானப்படுத்துவதாக அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர்.. இத்தனைக்கும், ப சிதம்பரம் போல் அல்லாமல், பாஜகவை அந்த அளவுக்கு காட்டமாக கார்த்தி சிதம்பரம் எதிர்த்தது இல்லை.

 நீட் விவகாரம்

நீட் விவகாரம்

கார்த்தி சிதம்பரத்திடம் கடந்த வாரம் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, இதைதான் குறிப்பிட்டு வன்னியரசு கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.. "நீட் விவகாரம் முதல் அத்தனை பாஜகவின் தேசிய கல்வி கொள்கை, நீட் உள்ளிட்ட பலவற்றை தனிப்பட்ட முறையில் நீங்கள் ஆதரித்த பிறகும் இப்படி சோதனையிடுவது சரியல்ல. இன்னும் முழுமையாக பாஜகவை ஆதரிக்க வேண்டுமா என்ன? என்று கேட்டிருந்தார்.. அதுமட்டுமல்ல, ஜோதிமணியே ஒருமுறை டென்ஷன் ஆகிவிட்டார்.

 ஜோதிமணிக்கு ஆத்திரம்

ஜோதிமணிக்கு ஆத்திரம்

நீட் தேர்வுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்திருந்த சமயம், கார்த்தி சிதம்பரம் மட்டும் தன்னுடைய முழுமையாக ஆதரவை கூறியிருந்தார்.. நீட் தேர்வை ஆதரிக்கிறேன் என்று சொன்னதுடன், நீட் தேர்வு பற்றி பேசுவதற்கு முன், அந்த தேர்வு இல்லாமல், மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் தேர்வான முறை பற்றிப் பார்க்க வேண்டும் என்று கூறி இதற்காகவே ஒரு தனி வீடியோ வெளியிட்டிருந்தார்... ஒரே விஷயத்தில் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாறுபட்ட கருத்தால் காங்கிரஸ் கட்சியில் கடும் குழப்பம் அப்போது ஏற்பட்டிருந்ததையும் மறுக்க முடியாது.

 சொந்த கட்சியையே விமர்சனம்

சொந்த கட்சியையே விமர்சனம்

அதுமட்டுமல்ல, 3 மாதத்துக்கு முன்பு கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, காங்கிரசின் கட்டமைப்பு பாஜகவுக்கு இணையாக இல்லை.. அதனால் கட்சியை சீரமைத்து மாற்றியமைக்க வேண்டும்.. சசிதரூர் கூறியதைப்போல் காங்கிரஸ் கட்சியை சீரமைத்து வலுவான அரசியல் இயக்கமாக உருவெடுப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.. ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவிற்கு அதிகம் செல்வாக்கு இருக்கிறது.. காங்கிரஸை விட அவர்களின் செல்வாக்கு உயர்ந்துள்ளது, இது யதார்த்தமான உண்மை" என்றார்.

 கைதாகிறாரா?

கைதாகிறாரா?

சொந்த கட்சியையே இப்படி மட்டம் தட்டி பேசியதும் கார்த்திக் சிதம்பரத்தின் மீது அதிருப்தியையே பெற்று தந்தது.. இந்த அளவுக்கு பாஜகவுக்கு முட்டி மோதியும், மேலிடம் தன் கறார்தன்மையை கைவிடவில்லை.. மாறாக, தொடர் சோதனை, சம்மன், விசாரணை, என்று ஆரம்பித்துள்ளது.. ப.சிதம்பரத்தை அன்று கைது செய்தது போலவே, கார்த்தி சிதம்பரத்தையும் குறி வைத்து பாஜக காய் நகர்த்துவதாகவும் சலசலப்புகள் எழுந்துள்ளன.. ஆக மொத்தம், சிக்காமல் தப்பித்து கொள்வதற்காக கார்த்தி எடுத்த அத்தனை முயற்சிகளும், தற்போது தோல்வி என்றே தெரிகிறது.. அடுத்து என்ன நடக்க போகிறது.. பார்ப்போம்..!

English summary
Will karthi chidambaram be arrested soon and enforcement directorate registered case கார்த்தி சிதம்பரம் கைதாவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X