சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக தரப்பில் திடீர் புது யோசனை.. அண்ணாமலையை பாஜக பக்கம் சாய்ப்பாரா குஷ்பு..!

ரஜினியை பாஜகவில் கொண்டு வர குஷ்பு முயற்சி மேற்கொள்வாரா?

Google Oneindia Tamil News

சென்னை: எல்லா வழிகளையும் முயன்று பார்க்கிறது பாஜக.. ஏதாவது ஒரு சான்ஸ் கிடைத்து விடாதா.. வாய்ஸ் வந்து விடாதா என்ற நப்பாசையில் ரொம்பத் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த வகையில் நடிகை குஷ்புவையும் களம் இறக்கி ஒரு கை பார்ப்பது என்ற முடிவுக்கு அது வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எதுக்கு இந்த தீவிர முயற்சி என்கிறீர்களா.. எல்லாம் இந்த ரஜினிகாந்த்தை தம் பக்கம் இழுக்கத்தான். மனிதர் அசைந்து கொடுக்க மாட்டேன் என்கிறாராம். உங்க அரசியலும் வேண்டாம், ஒரு கொடியும் வேண்டாம்.. ஆளை விடுங்கப்பா என்று ஓடும் முடிவில் இருக்கிறார் ரஜினிகாந்த்.

Will Khushboo try to bring Rajinikanth into the BJP

ஆனால் அப்படியெல்லாம் உங்களை விட்ர முடியாது.. நீங்க வந்தே ஆகணும் என்று பாஜக தரப்பில் ரொம்பப் போட்டு அனத்துகிறார்கள் போல. இதுதான் ரஜினிகாந்த்தை ரொம்ப டயர்டாக்கியுள்ளதாம். இப்படி பிரஷர் தருகிறார்களே என்று அவர் ரொம்பவே நொந்து போயிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ரஜினிகாந்த்தை பொறுத்தவரை அவருக்கு அரசியல் அபிலாஷை என்று எதுவுமே இருந்தது இல்லை. நடிப்பு மட்டும்தான் அவருக்கு தெரிந்த தொழில். அது கூட நல்ல இயக்குநர்கள் அமைந்தால்தான் அவரது நடிப்பும் கூட எடுபடும். இல்லாவிட்டால் அந்தப் படம் பப்படம்தான்.. ரஜினி நடித்தும் கூட ஓடாமல் போன படங்கள் நிறையவே இருக்கு.

இப்படிப்பட்டவர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ஏதோ ஆவேசத்தில் பேசியதைப் பிடித்துக் கொண்டு அதை வைத்தே 20 வருடத்திற்கும் மேலாக ஒரு பெரிய குரூப்பே அரசியல் செய்து வருகிறது. தங்களுக்கு சாதகமாக ரஜினியை பயன்படுத்தி அப்படியும் இப்படியுமாக போக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. திமுக சில காலம் ரஜினியை வைத்து குளிர் காய்ந்தது.. இப்போது பாஜக அந்த வேலையைச் செய்ய எத்தனிக்கிறது.

ரஜினியை தம் பக்கம் இழுக்க பாஜக ரொம்ப காலமாகவே முயற்சித்து வருகிறது. சோ காலத்திலிருந்தே அது நடந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் ரஜினிதான் பட்டும் படாமலும் இருந்து வருகிறார். இப்போது அது கடுமையாக அதிரித்து விட்டது. ரஜினியின் சமீபத்திய பேச்சுக்களைப் பார்த்தாலே அவருக்கு பிரஷர் ஏற்றி விடப்பட்டுக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ளலாம்..

மக்களுடன் சற்றும் ஒட்டாமல் பல கருத்துக்களை தொடர்ந்து உதிர்த்து வந்ததன் மூலம் அவரது பெயரையும் சேர்த்து கெடுத்துக் கொண்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில்தான் அவர் தனது உடல் நிலையைக் காரணம் காட்டி அரசியலை விட்டு விலகப் போவதாக பரபரப்புக் கிளம்பியுள்ளது. இதையடுத்து நேற்று நேரடியாகவே போய் ரஜினியைப் பார்த்து பேசி விட்டு வந்துள்ளார் துக்ளக் குருமூர்த்தி.

இப்போது ரஜினியை எப்பாடுபட்டாவது தம் பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக யோசித்து வருகிறது. என்ன வழியில் போய் அவரை சரிக்கட்டலாம் என்ற ரீதியில் யோசனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையே, நடிகை குஷ்பு சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். சேர்ந்த வேகத்தில் திமுகவுக்கு எதிராகவும், திருமாவளவனுக்கு எதிராகவும் அனல் கக்கிக் கொண்டிருக்கிறார்.

இவரெல்லாம் ஒரு ஐபிஎஸ் அதிகாரியா?.. சந்தேகமா இருக்கே.. அண்ணாமலையை வாரும் திமுக எம்பி இவரெல்லாம் ஒரு ஐபிஎஸ் அதிகாரியா?.. சந்தேகமா இருக்கே.. அண்ணாமலையை வாரும் திமுக எம்பி

அவர் மூலமாக தற்போது ரஜினியை நம் பக்கம் கொண்டு வர ஏதாவது வாய்ப்பிருக்கா என்று பாஜக தரப்பில் யோசிப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. குஷ்பு ரொம்ப சிந்திக்கக் கூடியவர், தெளிவாக முடிவெடுக்கக் கூடியவர். சித்தாங்களை மாற்றும் முன்பு ஆயிரம் முறை யோசிக்கக் கூடியவர். முடிவெடுத்தால் தெளிவாக அதை செய்யக் கூடியவர். இப்படிப்பட்டவரை விட்டு ரஜினியுடன் பேசினால் என்ன என்ற யோசனை பாஜக வசம் உள்ளதாம்.

ரஜினி - குஷ்பு இடையே நல்ல நட்பு உள்ளது. தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் ரஜினி குஷ்பு மீது நிறைய மதிப்பு வைத்திருக்கிறார். புத்திசாலி என்று பலமுறை பாராட்டியுள்ளார். எனவே குஷ்பு மூலமாக ரஜினிக்கு விஷயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைத்தால் அவர் ஒருவேளை இறங்கி வரலாமோ என்ற எதிர்பார்ப்பு பாஜக தரப்பில் உள்ளதாம்.

யார் யாரோ போய் தூது விட்டுப் பார்த்தும் ரஜினி சரிவரவில்லை. குஷ்பு மூலமாகவும் ஒரு முறை முயற்சிக்கலாமே என்ற யோசனையில் உள்ளதாம் பாஜக.. பார்க்கலாம் அண்ணாமலை நாயகனை.. குஷ்பு படத்தில் வீழ்த்தியது போல.. நிஜத்திலும் பாஜக பக்கம் சாய்ப்பாரா என்பதை.

English summary
Will Khushboo try to bring Rajinikanth into the BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X