சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டசபையில் கு.க. செல்வம்.. "திமுகவா? பாஜகவா?".. தேமுதிகவுக்கு ஏற்பட்ட அதே கதை ரிப்பீட் ஆகிறது!

சட்டசபையில் கு.க. செல்வம் திமுகவா? பாஜகவா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: இப்போது ஒரு பெரிய டவுட் என்னவென்றால், கு.க. செல்வம் திமுகவா? பாஜகவா என்பதுதான்.. முக்கியமாக சட்டப்பேரவையில் இவர் எந்த கட்சி சம்பந்தப்பட்டவராக தன்னை காட்டி கொள்வார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

திமுகவிலிருந்து ஜம்ப்படித்து பாஜக தரப்புக்கு ஆதரவாக மாறிப் போனவர் கு. க. செல்வம். கட்சியை விட்டுத் தாவிய பின்னர் திமுகவில் வாரிசு அரசியல் மாறி, குடும்ப அரசியலாக மாறிவிட்டது என்றார் கு.க.செல்வம்..

பிறகு திமுகவில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கேட்டதாகவும், இப்போது உதயநிதி சொல்வதை கேட்கும் நிலை திமுகவில் உள்ளதாகவும் இன்னொரு குற்றச்சாட்டை சொன்னார்.

மொத்தம் 3 பேர்.. அதிமுகவின் அதிரடி ஆக்‌ஷன்.. இவர்களை மீறி ஒரு மொத்தம் 3 பேர்.. அதிமுகவின் அதிரடி ஆக்‌ஷன்.. இவர்களை மீறி ஒரு "எஸ்எம்எஸ்" கூட அனுப்ப முடியாதாமே!

 வேண்டுகோள்

வேண்டுகோள்

"திமுகவில் 55 வயசுக்கு மேற்பட்டவர்கள் கட்சியில் இருக்காதீர்கள்.. எனக்கு ஏற்பட்ட நிலை எல்லாருக்குமே ஏற்படலாம்... அதனால் எல்லோரும் பாஜகவுக்கு வந்துடுங்க" என்றும் வேண்டுகோள் வைத்தார்.. இப்படி வரிசையாக லிஸ்ட் போட்டு குறை சொன்னதையடுத்து திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

நீதிமன்றம்

நீதிமன்றம்

இந்த சமயத்தில்தான், எந்த விசாரணையும் நடத்தாமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் செல்வம் வழக்கு தொடுத்தார்.. கட்சி விதிப்படி, உறுப்பினரை நீக்க பொதுசெயலாளருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது, திமுக தலைவருக்கு அதிகாரம் இல்லை என்று தன் மனுவில் சொல்லியும் இருந்தார்.. இது தொடர்பான வழக்கு விசாரணயின்போது, திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் ஆகியோர் பதிலளிக்க கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது.

 பேட்டிகள்

பேட்டிகள்

இதுவரைக்கும் இப்போது நடந்து முடிந்துள்ளது.. ஆனால் ஒரு டவுட் எழுந்துள்ளது.. தான் பாஜகவில் இணையவில்லை என்று ஊடகங்களுக்கு தான் அளித்த பேட்டிகளை கோர்ட்டில் ஆதாரப்பூர்வமாக தந்துள்ளதாக தெரிகிறது.. இதன் அடிப்படையில் திமுகவுக்கும் சட்டப் பேரவைச் செயலாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.. ஆனால், இன்னும் இதற்கு திமுக பதில் சொல்லவில்லை.. அப்படி பதில் தந்தால்தான் அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்று தெரியவரும்.. இல்லையென்றால், எந்த கட்சியையும் சாராதவர் என்றே கணக்கிலெடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

 பாஜகவா? திமுகவா?

பாஜகவா? திமுகவா?

இப்பவே திமுக மீது லிஸ்ட் போட்டு குறை சொல்பவர், ஒருவேளை சட்டப்பேரவையில் எப்படி பேசுவார்? திமுகவுக்கு சாதகமாக பேசுவாரா? ஆதரவாக பேசுவாரா? அல்லது பாஜகவை புகழ்ந்து பேசுவாரா? அப்படி பேசினால் திமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? என்று தெரியவில்லை.. ஆனால் ஒரு விஷயம் இங்கு சொல்ல வேண்டும்.. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது தேமுதிகவை உடைத்தனர். சுந்தரராஜன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு ஆதரவாக மாறினர்.

 சுந்தர்ராஜன்

சுந்தர்ராஜன்

அவர்கள் கட்சி தாவிய பின்னர் சட்டசபை கூடிய முதல் கூட்டத்தில் சுந்தரராஜன் உள்ளிட்டோருக்கு எதிராக தேமுதிக எம்எல்ஏக்கள் கொந்தளித்தனர். சுந்தரராஜன் தாக்கப்பட்டதாகவும் கூட பரபரப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட திமுகவுக்கும் அதே நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. கு. க. செல்வம் திமுகவுக்கு எதிராக மாறியுள்ள நிலையில் முதல் கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ளார். நிச்சயம் முறைப்புகள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கலாம். அதேசமயம், கு. க.செல்வம் ஏதாவது பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Recommended Video

    பரபரப்பை கிளப்பிய யுவன் T Shirt.. வைரலாகும் வாசகம்
     தனி ஒருவன்

    தனி ஒருவன்

    சட்டசபையை பொறுத்தவரை சிங்கிள் பார்ட்டி எம்எல்ஏவாக தினகரன் இருக்கிறார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இருக்கிறது. கருணாஸ் இருக்கிறார்.. தனியரசு இருக்கிறார், தமிமுன் அன்சாரி இருக்கிறார். இந்த வரிசையில் இன்னொரு " தனி ஒருவனாக" கு.க செல்வமும் இணைகிறார். ஆனால் தினகரன் மட்டுமே இதில் உண்மையான "தனி ஒருவன்". அவர் எந்தக் கட்சியுடனும் இணையாமல் தனித்து செயல்பட்டு வருகிறார். மற்றவர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக, திமுகவுக்கு ஆதரவாக என்ற நிலைப்பாட்டுடன் இருப்பவர்கள் ஆவர். இதில் செல்வம் யாருக்கு ஆதரவாக இருக்கப் போகிறார் என்பது எதிர்பார்ப்புக்குரிய ஒன்று.

    English summary
    Will Ku Ka Selvam act against DMK in the assembly?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X