• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அப்படி பச்சை பச்சையா திட்டினாரே குஷ்பு.. இப்போ இப்படி போய் சேர்ந்துட்டாரே.. பகீர் பிளாஷ்பேக்!

|

சென்னை: பெண்ணியமா? பிழைப்புவாதமா? என்ற கேள்விதான் குஷ்புவை பார்க்கும்போது நேற்றில் இருந்து ஏற்படுகிறது.. இந்த சந்தர்ப்பவாத அரசியலுக்கு பின்னணியில் உண்மையில் இருப்பதுதான் என்ன?

பொதுவாக ஒரு பெர்சனாலிட்டி எந்த கட்சியில் இருந்து எந்த கட்சிக்கு செல்கிறார் என்பதுதான் முக்கியமாக பார்க்கப்படுடிகிறது.. இதைவைத்துதான் அந்த நபரின்மேல் நம்பிக்கை கூடுவதும், குறைவதும் ஏற்படுகிறது.

அந்த வகையில், குஷ்பு 2 நாட்களாக சோஷியல் மீடியாவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.. குஷ்புவின் இந்த முடிவு பலருக்கு அதிர்ச்சியையும் தந்துள்ளது.. அதனால் கிண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறார்.

காங்கிரஸ் கட்சியில் யாருக்கும் மூளையில்லை... ஆறு வருடமாக அங்கே எனக்கு மரியாதையில்லை - குஷ்பு

சந்தர்ப்பவாதம்

சந்தர்ப்பவாதம்

அரசியல் பின்புலம் இல்லாமல் வந்த குஷ்புக்கு இதுவரை 3 கட்சி என்பதே அதிகம்... ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு சென்றாலே எந்த பிடிப்பும் அற்ற, சந்தர்ப்பவாதியாய் மட்டுமே பார்க்கப்படுவர்... அந்த அழுத்தத்தையும் தன்னோடு சேர்த்தே எடுத்து கொண்டு பாஜகவில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆனால், குஷ்புவால் அங்கு தாக்கு பிடிக்க முடியுமா என்பதே பெரும் கேள்விதான்.

தைரியமானவர்

தைரியமானவர்

இதற்கு காரணம், குஷ்புவை பொறுத்தவரை அடிப்படையிலேயே ரொம்ப தைரியமானவர்.. பணம், பதவி, அதிகாரம் எல்லாம் இவருக்கும் தேவையான ஒன்றாக இருந்தாலும், பாஜகவின் ஜாதிய, மதவாத அரசியலுக்கு எதிரான மன நிலை கொண்டவர்.. இஸ்லாமிய துவேஷ அரசியலை ஒருபோதும் அவர் ஏற்று கொண்டது இல்லை.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இந்த விஷயத்தில் சுந்தர் சி-யின் அழுத்தம்தான் காரணம் என்று காங்கிரஸ் உட்பட பலர் சொல்கிறார்கள்.. குடும்ப நெருக்கடிகளுக்காகவே இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிகிறது.. அது நேற்று குஷ்புவுடன் சுந்தர் சி வருகையின்போதே வெளிப்பட்டது.. இதுவரை குஷ்பு திமுகவில் இருந்தார், காங்கிரஸில் இருந்தார்.. ஆனால், அப்போதெல்லாம் சுந்தர் சி அவருடன் சென்றதே கிடையாது.. எந்த அரசியல் நிகழ்விலும் அவர் பங்கெடுத்ததாக தெரியவில்லை.. ஆனால், பாஜக விஷயத்தில் அது உடைபட்டுள்ளது. முதன்முதலில் முருகனை சந்தித்து பேசியதே சுந்தர் சி தான் என்று சொல்லப்பட்டது.. பாஜகவில் இணையும்படி நெருக்கடியும் தந்து வந்துள்ளதாக தெரிகிறது.. ஆனாலும், குஷ்பு சரியாகத்தான் இருந்தார்.. காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாகவே இருந்தார்.

பாஜக

பாஜக

கடந்த வாரம் பெரம்பூரில் அவர் பேசும்போது, "ஜாதி,மதத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்றீங்களே, எங்கே செஞ்சு பாருங்க, தமிழ் நாட்டிலே அது எடுபடாது.. கேவலமா இல்லையா உங்களுக்கு? ஜாதி,மதம் இதை வச்சுக்கிட்டு எவ்வளவு நாள் அரசியல் பண்ணுவீங்க? வெட்கமாயில்லையா பாஜகவுக்கு?.. உபியில், ஒரு பெண்ணுக்கு இவ்வளவு அநீதி நடந்திருக்கு.. பிஜேபியில பெண் தலைவர்களே இல்லையா? ஸ்மிருதி ராணி எங்கே? நிர்மலா சீதாராமன் எங்கே?" என்று கேட்டார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இவ்வளவும் கேட்டுவிட்டு ஒரு வாரத்திலேயே மாற்று கட்சியில் சேர்ந்துள்ளார் என்றால் குஷ்புக்கு அந்த அளவுக்கு நெருக்கடி தரப்பட்டுள்ளது.. இனி அவர் பாஜகவில் எப்படி இணக்கமாக செல்வார்? அங்கு அவருக்கு உரிய மரியாதை கிடைக்குமா என்று தெரியவில்லை.. நேற்றுகூட நட்டா முன்னிலையில் அவர் கட்சியில் சேர்வதாகத்தான் இருந்தது.. ஆனால், முதல் நாளிலேயே அவருக்கு கிடைத்தது ஏமாற்றம்தான்.

விபி துரைசாமி

விபி துரைசாமி

குஷ்புவிற்கு ஓட்டு வங்கி என்று எதுவும் இல்லைதான்.. காரணம், இவருக்கு கொள்கை என்றே ஒன்று இருந்தது இல்லை.. இவருக்கு மட்டுமிலை, குக செல்வம் ஆகட்டும், விபி துரைசாமி ஆகட்டும் இவர்களுக்கும் கொள்கைப்பிடிப்பு இருந்தது இல்லை.. கொள்கை பிடிப்பு இல்லாத ஒருவரை நாம் தாறுமாறாக விமர்சிக்க முடியாதுதான்.. வேண்டுமானால், இவர்களின் பொருளாதார தேவைகள் பூர்த்தியாகலாம்... அவ்வளவுதான்.

தமிழிசை

தமிழிசை

திமுக, காங்கிரஸ் போல அவரால் அங்கு சுதந்திரமாக செயல்பட முடியாது.. அதில் இருந்து விலக்கு நம் தமிழிசை சவுந்தர் ராஜன் மட்டுமே.. அந்த வகையில், அடிப்படையிலேயே துணிச்சலுடன் பேசும் குஷ்புக்கு பாஜக கொள்கை ஏற்புடையதாக இருக்குமா என்று தெரியவில்லை.. இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டி உள்ளது.. கடந்த 6 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இவர் சரியாக செயல்பட்டு வந்துள்ளார்.. எந்த குறையும் சொல்ல முடியாது.. ராகுல் மீதான தன் அதிருப்தியைகூட அடிக்கடி ட்விட்டரில் பதிவிட்டு வந்துள்ளார்.. மாநில காங்கிரஸ் கட்சி வெளியிடக்கூடிய துணிச்சலான பதிவை, தன் ட்விட்டரில் போட்டு பாஜகவை கேள்வி எழுப்பியவர்.. ஏன், பிரதமரையே கேள்வி கேட்டவர்.

நிர்ப்பந்தம்

நிர்ப்பந்தம்

அப்படி இருந்த குஷ்புவை அக்கட்சி சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒருபக்கம் அங்கீகாரம் கிடைக்காதது, மறுபக்கம் குடும்ப நிர்ப்பந்தங்களுக்கு நடுவில் சிக்கி கொண்டு விழித்து வந்திருக்கிறார் குஷ்பு.. எனினும், தேவைகள் அதிகம் கொண்ட ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டால் அல்லது நிர்ப்பந்தத்தின் பிடியில் சிக்கி கொண்டால், சந்தர்ப்பவாத அரசியல் தலைதூக்கும் என்பதற்கு குஷ்பு ஒரு உதாரணம்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Will Kushboo stay in BJP for a long time
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X