சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜி ஜின்பிங் வருகை.. மகாபலிபுரத்தில் நடக்கும் விருந்து நிகழ்ச்சி.. மு.க. ஸ்டாலின் கலந்து கொள்வாரா?

சீன அதிபர் ஜி ஜின்பிங் மகாபலிபுரத்தில் கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சியில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் மகாபலிபுரத்தில் கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சியில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11ம் தேதி தமிழகம் வருகிறார். அவர் பிரதமர் மோடியை காஞ்சிபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

11ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்த ஆலோசனை நடக்க உள்ளது. பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள், பொருளாதாரம் சார்ந்த அறிவிப்புகள் இதில் வெளியாக உள்ளது. மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

ஜி ஜின்பிங் வருகை.. மகாபலிபுரத்தில் குவிந்த சீன பாதுகாப்பு அதிகாரிகள்.. அதிகாலையிலிருந்து ஆய்வு! ஜி ஜின்பிங் வருகை.. மகாபலிபுரத்தில் குவிந்த சீன பாதுகாப்பு அதிகாரிகள்.. அதிகாலையிலிருந்து ஆய்வு!

ஸ்டாலின் அழைப்பு

ஸ்டாலின் அழைப்பு

இந்த விழாவிற்கு தமிழகத்தை சேர்ந்த சில அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட உள்ளது. தமிழக அரசு சார்பாக திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக பெரிய விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்த விருந்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

யார் எல்லாம்

யார் எல்லாம்

இதில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அதேபோல் தமிழக அமைச்சர்களும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

ஸ்டாலின் எப்படி

ஸ்டாலின் எப்படி

ஆனால் இந்த விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்வாரா என்பது கேள்விக்குறி என்று கூறுகிறார்கள். ஸ்டாலின் தன்னுடைய முடிவை இன்னும் அறிவிக்கவில்லை என்று கூறுகிறார்கள். மரியாதை கருதி ஸ்டாலின் இந்த விழாவிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

ஆனால் என்ன செய்வார்

ஆனால் என்ன செய்வார்

அதே சமயம் ஜி ஜின்பிங் வருகையை அடுத்து சென்னையில் பேனர்கள் வைக்கப்பட உள்ளது. இதற்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார். அப்படி இருக்கும் நிலையில் அவர் இந்த விழாவில் கலந்து கொள்வார் என்பது சந்தேகம்தான் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

English summary
Will M K Stalin attend the banquet in honor of Xi Jinping along with PM Modi in Mahabalipuram?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X