சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வைகோ செய்த "அந்த" காரியம்.. 20 சீட்டாவது வேண்டும்.. மிரட்சியில் திமுக.. கேட்டது கிடைக்குமா?

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, வைகோ சந்தித்து பேசியது, திமுக மேலிடத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாம்.. இன்னொரு பக்கம், தங்கள் கோரிக்கைக்கு திமுக தலைமை செவி சாய்க்காதது மதிமுக தரப்பை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளதாம்!

கூட்டணி கட்சிகள் தங்கள் தலைமையிடம் பேச்சுவார்த்தையை மறைமுகமாக தொடங்கிவிட்டன.. அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் சீட் பங்கீடு, சின்னம் தொடர்பான திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசியுள்ளதாக தெரிகிறது.

20 சீட்டாவது வேண்டும் என்பதிலும், தனி சின்னத்தில்தான் போட்டி என்பதிலும் மதிமுக உறுதியாக உள்ளது.. இதன்காரணமாக கூட்டணி கட்சிகளிடம் முரண்பட்ட கருக்களும் எழுந்துள்ளன.

புத்தாண்டின் சுவாரஸ்யமான 'என்ட்ரி' ! - பா. கிருஷ்ணன்புத்தாண்டின் சுவாரஸ்யமான 'என்ட்ரி' ! - பா. கிருஷ்ணன்

வைகோ

வைகோ

இதில் வைகோவை பொறுத்தவரையில் தங்கள் கட்சிக்கான தனித்துவத்தை எதிர்பார்க்கிறார்.. சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாத வகையில் கட்சி உள்ளதால், தன் அங்கீகாரத்தை காப்பாற்றவ 20 தொகுதிகளிலாவது போட்டியிட விரும்புவதாக தெரிகிறது.. இதை நேரடியாகவே திமுக தலைமையிடம் பேசியாயிற்று.. ஆனால், சாதகமான பதில் எதுவும் வரவில்லை என, தெரிகிறது... இதனால் வைகோ சற்று அப்செட்டில் உள்ளதாவும் சொல்கிறார்கள்.

மதிமுக

மதிமுக

ஏனென்றால், மதிமுகவை பொறுத்தவரை, அவர்கள் கேட்பது நியாயமான கோரிக்கையே.. மற்றவர்கள் ஆட்சியமைக்க உறுதுணையாக தாங்கள் இருக்கும்போது, தங்களின் கட்சியின் அங்கீகாரத்தையும் காப்பாற்ற முன்வர வேண்டும் என்பது குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது.. இப்படித்தான் போன முறையும் மதிமுகவின் கோரிக்கையை ஏற்காமல் இழுத்தடித்து, கடைசி நேரத்தில், திமுக கைவிட்டதையும் அக்கட்சி அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடாது.. அதனால் இந்த முறை முந்திக் கொண்டு தங்கள் கோரிக்கையை மதிமுக முன்வைத்துள்ளதாகவே கூறப்படுகிறது.

கவனம்

கவனம்

ஆனால், திமுகவை பொறுத்தவரை, கூட்டணி கட்சிகளைவிட ஆட்சியை பிடிப்பதிலேயே கவனத்தை செலுத்தி வருகிறது.. அதனால்தான் பிரதான தொகுதிகளில், பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடவும் முனைப்பு காட்டி வருகிறது.. ஒரு முடிவு எட்டப்படுவதற்கு முன்பேயே, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, வைகோ சந்தித்து பேசியது, திமுக மேலிடத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாம். இப்போ எதுக்கு போய் வெங்கையாவை பார்க்க வேண்டும்? திமுகவுக்கு நெருக்கடி தருவதற்காகவே இப்படியெல்லாம் வைகோ செயல்படுகிறார் என்ற ஒரு பேச்சு எழுந்துள்ளது..

கோரிக்கை

கோரிக்கை

வைகோவின் இதே கோரிக்கைதான் விசிகவுக்கும்.. அக்கட்சியில் தேர்தல் அறிக்கை வரைவு குழுவும் வெளியிட்டுவிட்டனர்.. இதனால் தங்கள் கோரிக்கையை திமுகவிடம் அழுத்தமாக வலியுறுத்த தொடங்கி உள்ளது.. இதற்கு நடுவில் பாரிவேந்தர் தன் குரலை உயர்த்த தொடங்கிவிட்டார்.. 6 சீட் வேண்டும்.. இல்லாவிட்டால் தனித்து போட்டி என்ற போர்க்கொடியும் தூக்கி உள்ளார்..

இரட்டை இலக்கு

இரட்டை இலக்கு

இவர்களே இப்படி என்றால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் எவ்வளவு கேட்பார்கள் என்று தெரியாது.. ஆனால், எல்லோருமே இரட்டை இலக்க சீட்களை கேட்டு உட்கார்ந்துள்ளனர்.. அதாவது, தாங்கள் இல்லாவிட்டால் திமுகவுக்கு நஷ்டம்தான் என்று கூட்டணி கட்சிகள் தெரிவித்தால், திமுக இல்லாமல் இவர்களுக்குதான் நஷ்டம் என்பது தலைமை கருதுகிறது.. எப்படி பார்த்தாலும் அனைவரும் சேர்ந்து பேசி சுமூக முடிவு விரைவில் எட்டப்படும் என்றும், திமுக தலைமையேற்க அத்தனை கூட்டணி தலைவர்களும் ஒத்துழைப்பு தருவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

English summary
Will MDMK Continue in DMK Alliance in Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X