சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் "இதை" மட்டும் செய்தால் போதும்.. ஈஸியா முதல்வர் ஆகிவிடலாம்.. அடித்து சொல்லும் தலைவர்கள்

திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: 10 வருடம் ஆட்சியை பிடிக்க போராடி வரும், திமுக தலைவர் முக. ஸ்டாலின், இதை மட்டும் செய்தால் போதும், அவர்தான் அடுத்த முதல்வர் என்ற ஆதரவு குரல்கள் எழ தொடங்கி உள்ளன...!

திமுகவை பொறுத்தவரை தேர்தலில் வெற்றி பெற, கன கச்சிதமாக காய்களை நகர்த்தி வருகிறது.. மாஸ் வெற்றியுடன் ஆட்சியை பிடிப்பதுடன், பாஜகவுக்கு ஒரு செக் வைக்க வேண்டும் என்ற முனைப்பும் உள்ளது.

அதனால், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இந்த தேர்தல் மிக மிக முக்கியமானது... ஆனால், அதிமுக மெகா கூட்டணி தொடர்வது, பாஜக தொடர்ந்து நெருக்கடி தருவது, சீமான் ஒரு பக்கம், கமல் ஒரு பக்கம் களம் இறங்குவது, புகையும் உட்கட்சி பூசல், நெருக்கும் கூட்டணி கட்சிகள் என பல்வேறு பிரச்சனைகளில் திமுக சிக்கி விழித்து வருகிறது.

 திமுக

திமுக

இதையெல்லாம் சமாளித்துதான் திமுக வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது... அதனால்தான் 200 தொகுதிகளிலாவது போட்டியிட்டு, மெஜாரிட்டியை கையில் வைத்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது. கூட்டணி கட்சிகளும் இதற்கு ஒத்துழைப்பு தந்தால், அனைத்துமே சுமூகமாக முடியும் என்பது திமுக தலைமையின் கணக்கு.

கூட்டணி

கூட்டணி

ஆனால் கூட்டணி கட்சிகளின் கணக்கோ வேறு மாதிரியாக உள்ளது... தங்களுக்கு தனிச்சின்னம் வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.. தற்போது விவாதமே இதை வைத்து தான் எழுந்துள்ளது.. கூட்டணி கட்சிகளுக்கு தனிச்சின்னம் ஒதுக்கிடுவதா? அல்லது உதயசூரியன் சின்னத்திலேயே அவைகளை போட்டியிட வைக்க வேண்டுமா என்பதுதான்! இதுகுறித்து சிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:

 தொண்டர்கள்

தொண்டர்கள்

"இவ்வளவு நாள் தலைமையின் வெற்றிக்காக தாங்கள் பாடுபட்டு வரும்போது, தங்களின் சுயகவுரவத்தையும் தலைமை கொஞ்சமாவது பரிசீலித்து பார்க்க வேண்டும் அல்லவா?" என்று அக்கட்சிகள் முன்வைப்பது நியாயமே.. விசிக, மதிமுக கட்சிகளை பொறுத்தவரை கால் நூற்றாண்டாக தமிழகத்தை வலம் வந்த கட்சிகள்.. பல தேர்தலை சந்தித்த கட்சிகள்.. அந்தந்த கட்சிகளுக்கு என்று லட்சக்கணக்கான தொண்டர்களும் உள்ளனர்.. அதனால் தனித்தன்மை என்பது ஒவ்வொரு கட்சிக்குமே அவசியம்.. அதை யாருமே இழக்க விரும்ப மாட்டார்கள்..

 தீவிரம்

தீவிரம்

மேலும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டும்போது, கூட்டணி கட்சிகளை அனுசரித்து போவதுதான் சிறப்பு. கூட்டணி இல்லாமல் தனியாக நிற்கிறோம் என்று இந்நேரம் திமுக சொல்லி இருக்க வேண்டியதுதானே.. ஏன் சொல்லவில்லை.. ஏன் என்றால் இவர்களின் தயவும் அவர்களுக்கு தேவைப்படுகிறது.. அவர்களுக்கென்று தனிச்சின்னத்தை ஒதுக்கி போட்டியிட வைத்தால், அந்த கட்சிகள் வளர்ந்து விடுமே என்று திமுக நினைக்கிறது போலும்.. தன்னுடன் இருக்கும் சின்ன கட்சிக்களுக்கும் சீட் குடுத்து தனி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் மட்டுமே திமுகவின் கனவு நிறைவேறும்" என்கிறார்கள்.

 இரட்டை இலக்கம்

இரட்டை இலக்கம்

அதேசமயம் மாற்று கருத்தையும் சிலர் முன்வைக்கிறார்கள்.. "கூட்டணிகளுக்கு இரட்டை இலக்க சீட்டுகளை ஒதுக்கிவிட்டால், திமுகவுக்கு கடந்த முறை மாதிரி சிக்கல் வந்துவிடும்.. திடீரென புதுச்சின்னதை ஒதுக்கினால் அதை குறுகிய காலத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது.. விசிகவுக்கு பானை சின்னம் அப்படித்தான் அமைந்துவிட்டது.. அதனால் ரிஸ்க் எடுக்காமல் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்கலாம்.. இவ்வளவு நாளும் அப்படித்தானே போட்டியிட்டு வந்தனர்.. இப்போது மட்டும் ஏன் போர்க்கொடி தூக்க வேண்டும்.

 மிரட்டல்

மிரட்டல்

அந்த அளவுக்கு வலுவான உட்கட்சி கட்டமைப்புகளையும், மக்கள் செல்வாக்குகளையும் இந்த கட்சிகள் அனைத்தும் பெற்றுள்ளனவா? இப்படி திமுகவை சிறு கட்சிகள் மிரட்டி கொண்டிருந்தால் ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது.. உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி, இல்லையென்றால் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தால்தான் சரிவரும். கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் நிதியும் தந்து, அவர்களின் கட்சி சின்னத்தையும் தந்து, இந்த தேர்தலில் அவக்ளை இழுத்தும் போய் கொண்டிருந்தால், ஸ்டாலினின் முதல்வர் கனவு, நொறுங்கிவிடும்" என்கின்றனர். ஆக, இப்படிப்பட்ட விவாதங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி எப்படி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் மேலோங்கி வருகின்றன.

English summary
Will MDMK, VCK, IJK, Congress continue in the DMK alliance party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X