• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

லட்டு போல சான்ஸ்.. பாஜக வெயிட்டிங்.. மறுபக்கம் அதிமுக.. சமாளிக்க "இவர்" தேவை.. யோசிக்குமா திமுக!

Google Oneindia Tamil News

சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திமுகவில், அடுத்தடுத்த சில முக்கிய நிகழ்வுகளும் நடந்தால் சிறப்பாக இருக்குமே என்ற எதிர்பார்ப்புகள் எழ ஆரம்பித்துள்ளன.. காரணம் முக அழகிரி!

ஸ்டாலின் அமைச்சரவையில் 20 புதிய முகங்களுக்கு வாய்ப்பு?.. இன்று வெளியாகிறது லிஸ்ட்!
இந்த முறை திமுக மிகப்பெரிய சவாலுடன் ஆட்சியை எதிர்கொள்ள போகிறது.. அதேசமயம் திமுகவில் யாரெல்லலாம் அமைச்சர்கள் என்ற லிஸ்ட் ரெடியாகி விட்டது.

அந்த லிஸ்ட் ஆளுநர் கைக்கும் சென்றுவிட்டதாம்.. ஜூனியர் & சீனியர் என்ற கலவையில் அமைச்சர்கள் பட்டியல் ரெடியாகி இருப்பதாக சொல்கிறார்கள். அத்துடன் வேறு சிலருக்கும் முக்கிய பதவி தரப்படும் என்று கூறப்பட்டது.

முயற்சி

முயற்சி

அதில் முக்கியமானவர் எம்பி கனிமொழி.. ஆரம்பம் முதல் அதாவது டிசம்பர் மாதம் முதல் கடைசி நாள் வரை கனிமொழி, திமுகவுக்காக எடுத்து கொண்ட சிரத்தைகள், முயற்சிகள், பிரச்சாரங்கள் அனைத்தும் ஓட்டு வங்கியை பலப்படுத்தி இருப்பதாகவும், தென்மண்டல பகுதி மக்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கு இந்த முறை உயர்ந்துள்ளதற்கு அடித்தளமாக இருந்ததே கனிமொழிதான் என்றும் கூறப்பட்டது.

புது போஸ்டிங்

புது போஸ்டிங்

அதனால்தான், கனிமொழிக்கு தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி அல்லது கேஎன் நேரு வகித்து வரும் முதன்மை செயலாளர் பதவியை 2ஆக பிரித்து, தென்மண்டலங்களுக்கான முதன்மை செயலாளர் பதவியை கனிமொழிக்கு தர போவதாகவும் சொல்லப்பட்டது.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இப்போது விஷயம் என்னவென்றால், முக அழகிரி மீதான அதிருப்தி ஸ்டாலினுக்கு விலகி இருக்கிறது.. மதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பினை ஸ்டாலின் கொடுக்க சொல்லியுள்ளதாக ஒரு தகவல் வட்டமடிக்கிறது.. மற்றொரு பக்கம், நாளை பதவியேற்க போகும் ஸ்டாலினுக்கு அழகிரி பாசத்துடன் தம்பிக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.. அந்த வகையில், இது திமுகவில் நல்ல மாற்றத்திற்கான அறிகுறியாகவே தெரிகிறது.

தென்மாவட்டம்

தென்மாவட்டம்

எனவே, ஏற்கனவே அழகிரி வசம் இருந்த தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியை அவரிடமே ஸ்டாலின் தந்தால் நன்றாகத்தான் இருக்கும்.. கருணாநிதி இருந்தபோது பதவி அழகிரி வசம்தான் இருந்தது.. எந்த தேர்தல் வந்தாலும்போதும், தென்மாவட்டங்களை பற்றி கருணாநிதி கவலையே பட மாட்டார்.. மொத்தத்தையும் அழகிரியே பார்த்து கொள்வார்..

செல்வாக்கு

செல்வாக்கு

இப்போதுகூட கட்சியில் இல்லையே தவிர, தென்மாவட்டங்களில் அழகிரிக்கு செல்வாக்கு இருக்கிறது.. இதைதவிர தனிப்பட்ட முறையில் அழகிரியின் குணம், இயல்பான பேச்சு, அனைவருக்குமே பிடிக்கும்.. அடிமட்ட தொண்டன்கூட மேலே வர வேண்டும் என்று ஆசைப்படுபவர்தான் அழகிரி.. அந்த மாதிரி எத்தனையோ பேரை திமுகவில் உயர்த்தி அழகு பார்த்தவரும்கூட..!

பாஜக

பாஜக

அழகிரிக்கு இந்த பதவியை தருவதற்கு காரணம் இதுமட்டுமே இல்லை.. மற்றொரு காரணமும் உள்ளது.. கொஞ்ச நாள் கழித்து, பாஜக நிச்சயம் திமுகவுக்கு ஏதாவது ஒரு ரூட்டில் குடைச்சலை கொடுக்க முனையலாம்.. இன்னொரு பக்கம், சசிகலாவை சேர்த்துக் கொண்டு அதிமுக புதுபாய்ச்சல் காட்டும் வாய்ப்பையும் நிராகரிக்க முடியாது... அந்த பக்கம் பாஜக, இந்த பக்கம் அதிமுக என எல்லாவற்றையும் சமாளிக்க ஸ்டாலினால் மட்டுமே முடியாது.. அழகிரி என்ற அனுபவ குதிரையும் உடன் இருந்தால்தான் சவால்களை எளிதாக சமாளிக்க முடியும்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இப்போது கொரோனா தலைதூக்கி வருகிறது.. இதுபோன்ற சமயங்களில் தெற்கை அழகிரி வசம் விட்டுவிட்டு, தமிழகம் முழுக்க கொரோனா ஒழிப்புப் பணிகளில் ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தலாம்... அதேபோல, டெல்லி உள்ளிட்ட விவகாரங்களை டிஆர்பாலு, ராசா, கனிமொழி ஆகியோரை வைத்து அழகாக சமாளிக்கலாம்... இவர்கள் எல்லாருமே சீனியர்கள்.. இனி பாஜக தரும் எந்த பிரஷரையும் சமாளிக்க கூடிய அளவுக்கு திறமைசாலிகள்..

யோசிக்குமா?

யோசிக்குமா?

கருணாநிதி இருந்தபோது, இவர்கள்தான் டெல்லியை கவனித்து கொள்வார்கள்.. அனைத்து விவகாரங்களையும் திறன்பட செய்து காட்டியவர்களும்கூட.. அந்த வகையில், கனிமொழிக்கு டெல்லி என்றால், அழகிரிக்கு தென்மண்டலத்தை ஒதுக்க திமுக தலைமை யோசித்தால் சிறப்பாகவே இருக்கும்.. ஆனால், அதுக்கு முன்னாடி, அனைத்து ஈகோக்களையும் விட்டு விட்டு அண்ணன் தம்பி இருவரும் இணைவார்களா? இரட்டைக் குழல் துப்பாக்கியாக மாறுமா திமுக?.. பார்ப்போம்..!

English summary
Will MK Stalin give MK Azhagiri a key position in the DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X